Published:Updated:

`அடுத்த வருஷம் இன்னும் ஸ்ட்ராங்கா மீண்டுவருவோம்; விசில்போடு!' - ஷேன் வாட்சன் நெகிழ்ச்சி

`அடுத்த வருஷம் இன்னும் ஸ்ட்ராங்கா மீண்டுவருவோம்; விசில்போடு!' - ஷேன் வாட்சன் நெகிழ்ச்சி
`அடுத்த வருஷம் இன்னும் ஸ்ட்ராங்கா மீண்டுவருவோம்; விசில்போடு!' - ஷேன் வாட்சன் நெகிழ்ச்சி

காலில் ரத்தக் காயத்துடன் இறுதிப் போட்டியில் விளையாடிய சென்னை அணியின் ஷேன் வாட்சன் தற்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

`அடுத்த வருஷம் இன்னும் ஸ்ட்ராங்கா மீண்டுவருவோம்; விசில்போடு!' - ஷேன் வாட்சன் நெகிழ்ச்சி

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி ஒரு ரன்னில் மும்பை அணியிடம் கோப்பையைத் தவறவிட்டது. அந்தப் போட்டியில் வாட்சன் ரத்தக் காயங்களுடன் விளையாடியதைப் பார்த்து சென்னை ரசிகர்கள் கண்கலங்விட்டனர். எங்களுக்குக் கோப்பை கூட வேண்டாம். ஆனால், ஏன் யாரிடமும் சொல்லாமல் ஆடினீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி அன்புடன் கோபித்தும்கொண்டனர். அதைத் தொடர்ந்து வாட்சன் சிரமத்துடன் நடக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களை மேலும் கலங்கடித்தது. 

`அடுத்த வருஷம் இன்னும் ஸ்ட்ராங்கா மீண்டுவருவோம்; விசில்போடு!' - ஷேன் வாட்சன் நெகிழ்ச்சி

இந்நிலையில் வாட்சன் பேசும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்துள்ளது. `கடந்த மூன்று நாள்களாக நீங்கள் எதிர்பார்த்த வீடியோ இதோ' எனக் குறிப்பிடப்பட்ட வீடியோவில் வாட்சன், ``ஹாய்.. கடந்த இரண்டு நாள்களாக நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி.

`அடுத்த வருஷம் இன்னும் ஸ்ட்ராங்கா மீண்டுவருவோம்; விசில்போடு!' - ஷேன் வாட்சன் நெகிழ்ச்சி

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியில் அருகே சென்றும் வெற்றிபெற முடியாமல் ஆகிவிட்டது. ஆனால், அது ஓர் அற்புதமான இறுதி ஆட்டம். மீதம் இருக்கும் அந்த ஒரு அடியையும் எடுத்துவைக்க அடுத்த வருடம் மீண்டும் வருவேன். உங்களின் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. விசில் போடுங்க..“ என்றார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரல் ஆகிவருகிறது. 

Vikatan