Published:Updated:

`அடுத்து உலகக்கோப்பையைக் கையிலேந்த வேண்டும்!’ - ஹர்திக் பாண்டியா

`அடுத்து உலகக்கோப்பையைக் கையிலேந்த வேண்டும்!’ - ஹர்திக் பாண்டியா
`அடுத்து உலகக்கோப்பையைக் கையிலேந்த வேண்டும்!’ - ஹர்திக் பாண்டியா

`ஐ.பி.எல் கோப்பையைப் போலவே, உலகக் கோப்பையையும் கைப்பற்ற விரும்புகிறேன்” என்கிறார் ஹர்திக் பாண்டியா

`அடுத்து உலகக்கோப்பையைக் கையிலேந்த வேண்டும்!’ - ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. கடைசி பந்தில் மலிங்கா கொடுத்த ட்விஸ்ட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஹெலிகாப்டர் ஷாட் பெருமளவில் பேசப்பட்டது. 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 402 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 191 ஆகும். ஐபிஎல் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, ``நான் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். உலகக் கோப்பை போட்டியிலும் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என விரும்புகிறேன்.

`அடுத்து உலகக்கோப்பையைக் கையிலேந்த வேண்டும்!’ - ஹர்திக் பாண்டியா

நான் எனது அறையில் மும்பை இந்தியன்ஸ் போஸ்டரை ஒட்டி வைத்துள்ளேன். அந்த அணியிலிருந்து வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலானோர், நாங்கள் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளோம், ஆக நான்காவது முறை அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்றனர். நான் குர்ணாலிடம் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறப்போகிறோம் என்றேன். என்னுடைய உடல் எடை கூட குறைந்துவிட்டது. அப்படியொரு சிக்கலான ஆட்டம் அது. நம்பமுடியாத ஆட்டம். நானும், குர்ணால் பாண்டியாவும் சின்ன வயதிலிருந்து, நல்ல ஆட்டத்தை இணைந்து வெளிபடுத்த விரும்பினோம். நாங்கள் ஐபிஎல்லில் இல்லாமல் இருந்திருந்தாலும், மும்பை அணிக்காக விளையாடவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டிருப்போம்” என்றார். 

Vikatan