Published:Updated:

`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..!’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா

பிரேம் குமார் எஸ்.கே.
`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..!’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா
`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..!’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா

பரபரப்பான ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் இறுதி ஓவரை வீச யாரை அழைக்கலாம் என்ற குழப்பம் குறித்தும் மலிங்காவை பந்து வீச அழைத்தது குறித்தும் பேசியுள்ளார் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..!’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா

நேற்றுடன் முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி கோப்பையை வென்றது. சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்றிருந்த நிலையில், நான்காவது முறையாக வெல்லப் போவது யார் என சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமல்லாது ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் மோதிக்கொண்டிருந்தனர். இறுதியில் மும்பை அணி 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 10 சீசனில் 8 முறை ஃபைனல் சென்ற சென்னை அணி தோல்வியைத் தழுவியது. 

`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..!’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா

மும்பை அணியின் வெற்றிக்கு ராகுல் சகார் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. மலிங்கா அதிக ரன்களை விட்டுக்கொடுத்திருந்தாலும், இறுதி ஓவரில் சிறப்பாகப் பந்துவீசி மும்பை அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். அதிக ரன்களை மலிங்கா விட்டுக்கொடுத்திருப்பதால் ரோஹித் கடைசி ஓவரை பந்துவீச பாண்ட்யாவைத்தான் அழைப்பார் என பலரும் நினைத்த வேளையில் மலிங்காவை அழைத்தார். இது தொடர்பாக போட்டி முடிந்தபின்னர் பேசியும் உள்ளார்.   

`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..!’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா

போட்டி முடிந்த பின்னர் பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா,  ``இந்த தொடர் முழுவதும் நாங்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். அதன் காரணமாகத்தான் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும் வந்தோம். இந்தத் தொடரை முதலில் இரண்டாக பிரித்துக்கொண்டோம். எங்கள் அணியின் 25 வீரர்கள் உள்ளனர். அனைவரும் வெவ்வேறுப் போட்டிகளில் தங்களின் பங்களிப்பை சரியாகச் செய்தனர். எங்களுக்கு உதவும் பணியாளர்களின் பங்கும் இந்த வெற்றியில் உள்ளது. 

`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..!’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா

எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பல்வேறு கட்டங்களில் போட்டியை அவர்கள் மீட்டுத் தந்துள்ளனர். மலிங்கா ஒரு சாம்பியன். அதில் சந்தேகமே இல்லை. இதை அவர் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார். கடைசி ஓவரில் பாண்ட்யாவை பந்துவீச அழைக்கலாம் என நினைத்தேன். ஆனால், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், ஏற்கெனவே பல முறை ஆடிய ஒரு வீரரைத்தான் பந்துவீச அழைப்பது சரியாக இருக்கும். மலிங்கா அதைப் பல முறை சரியாகச் செய்திருக்கிறார். 

நான் அனைத்துப் போட்டியில் கற்றுக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறை களத்தில் நான் இறங்கும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். எங்களின் அணிக்குத்தான் அனைத்துப் பாராட்டுகளும் பொருந்தும்” என்றார். 

Vikatan