Published:Updated:

``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...!” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!

``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...!” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!
``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...!” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!

தோல்வி எப்போதும் காயப்படுத்தும் எனச் சென்னை அணி கேப்டன் தோனி பேசியுள்ளார்.

``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...!” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!

பங்கேற்ற 10 சீஸனில் 8 முறை பைனல்... அதில் மூன்று முறை சாம்பியன்... இந்த முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிவிடுவார்கள் என சென்னை ரசிகர்கள் காத்திருந்தனர். வாட்சன் இருக்கும் வரை வெற்றி உறுதி என்றிருந்த நிலையில், கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த வாட்சன், அடுத்த பந்தில் மீண்டும் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று ரன் அவுட் ஆகி மொத்த ரசிகர்கள் கூட்டத்தையும் சீட்டின் நுனிக்குக் கொண்டு உட்கார வைத்தார். கடைசியில் சென்னையின் நான்காவது முறை கோப்பை கனவை ஒரே பந்தில் காலி செய்தார் மலிங்கா. சென்னை அணிக்கு கிடைக்க வேண்டிய மகுடத்தை ஒரே பந்தில் தட்டிப்பறித்து மும்பை அணியிடம் சேர்த்தார் மலிங்கா. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் மும்பை ரசிகர்கள் திளைத்து வருகின்றனர். 

``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...!” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!

இதற்கிடையே, தோல்விக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ``ஒரு அணியாக எங்களுக்கு இது நல்ல தொடராக அமைந்தது. ஆனால் பைனலுக்கு எப்படி வந்தோம் எனத் திரும்பிப் பார்க்கையில், இந்த ஆண்டு ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடி பைனலை அடையவில்லை என்றே தோன்றுகிறது. இந்தப் போட்டியை பொறுத்தவரை எங்கள் பங்குக்கு இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்டிங். இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே மிடில் ஆர்டர் பேட்டிங் எங்களுக்கு கிளிக் ஆகவில்லை. இருந்தாலும் எப்படியோ அதைச் சமாளித்துவிட்டோம். தோல்வி எப்போதும் காயப்படுத்தும். ஆனால்  இன்னும் கொஞ்சம் நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கலாம். 

``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...!” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!

நேற்றைய போட்டியில் இரண்டு அணிகளிலுமே நிறைய வேடிக்கையான சம்பவங்கள் நடந்தன. ஐபிஎல் பைனலில் இரு அணிகளுமே கோப்பையை ஒருவருக்கொருவர் கைமாற்றிக்கொண்டிருந்தோம் எனலாம். ஏனென்றால் இரு அணிகளுமே நிறைய தவறுகள் செய்தோம். நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம் என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியும் அதே தவற்றைதான் செய்தது. ஆனால், முடிவில் மற்ற அணிகளைவிட ஒரு தவறு குறைவாகச் செய்த அணி வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் ஒரு நல்ல பைனல் ஆட்டம் என நினைக்கிறேன். கடைசிப் பந்து வரை ஆட்டம் சென்றது.  இந்த சீசனில் பௌலர்கள் அணிக்காக நிறைய உழைத்துள்ளனர். இன்றைக்குக் கூட 150 ரன்களுக்கு மேல் செல்ல வேண்டிய மேட்ச் இது. ஆனால், எப்போதும் வேட்டையாடும் எங்கள் பௌலர்கள் இன்றும் எதிரணியை 150-க்குள்ளாகவே சுருட்டினர்.

``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...!” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!

எப்போது தேவையோ அப்போது சரியாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். பேட்டிங்கில் சில நேரங்களில் சில வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், எப்போதும் சீராக விளையாடி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து பேட்ஸ்மேன்களை வேலையை எளிதாக்கினார்கள் பௌலர்கள். அதேநேரம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் எந்தெந்த ஏரியாக்களில் தவறு செய்துள்ளோம் என்பதை ஆராய்ந்து அடுத்த சீசனுக்குள் அதைச் சரி செய்ய வேண்டும். ஆனால், அதற்கு இப்போது நேரம் இல்லை. உலகக்கோப்பை வருகிறது. அதற்குத் தயாராக வேண்டும். உலகக்கோப்பைக்குப் பிறகு கிடைக்கிற கேப்பில் இதற்கான வேலையைச் செய்ய வேண்டும்" எனக் கூறினார். அப்போது சஞ்சய் மஞ்சரேக்கர் தோனியிடம், அடுத்த தொடரில் உங்களைப் பார்க்க முடியுமா? எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த தோனி, ``ஆம், நம்பிக்கை இருக்கிறது" என்றார். 

``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...!” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!

இந்த உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாடுவாரா எனச் சந்தேகம் எழுந்திருந்தது. இதற்காகவே சஞ்சய் மஞ்சரேக்கர் தோனியிடம் இப்படி ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதற்கு அவரும் ஆம் எனப் பதிலளிக்க சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Vikatan