Published:Updated:

வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC

விகடன் விமர்சனக்குழு
வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC
வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC

மீண்டும் பாலின் ஓவருக்கு ஆவலாய் காத்திருந்தார் வாட்சன். உங்கள் தேவையே எங்கள் சேவை என டெல்லி கேப்டன், அவரைப் பந்துவீச அழைத்தார். லாங் ஆன், லாங் ஆஃப், ஸ்கொயர் லெக் என மூன்று சிக்ஸ், ஒரு பௌண்டரி என அந்த ஓவரிலேயே 25 ரன்கள்,

முதல் ஃப்ளே ஆஃபில் வென்றுவிட்டு, மும்பை எளிதாக ஃபைனல் சென்று ஹாயாக அமர்ந்துவிட்டது. வழக்கம் போல, சென்னை சூப்பர் கிங்ஸ் 'பொள்ளாச்சி போய் புளியம்பட்டி' வந்திருக்கிறது. தோனி முந்தைய போட்டியின் இறுதியில் சொன்னது போலவே, நாம கொஞ்சம் சுத்திப் போயிருக்கிறோம். அவ்வளவே. 

சென்னைக்கு ஃபைனல் ஒன்றும் புதிதல்ல. சென்னை ஃபைனலை எப்போதும், ' 20 க்ரோர்ஸ்ங்கறது இந்த பையனுக்கு டிப்ஸ் போட்ட மாதிரி ' என சொல்லும் வடிவேலு மோடில் தான் டீல் செய்து வருகிறது. இதற்கு முன்பு ஏழு ஃபைனல்கள் அதில் மூன்று முறை கப் அடித்திருக்கிறது. அதுவும் சென்னை ஆடியது வெறும் 10 சீசன்கள் தான்.  மறுபக்கம் டெல்லியின் நிலை தான் பரிதாபம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுப்பின்னர் ப்ளே ஆஃப் வந்திருக்கிறது. கடைசி இடத்துக்குப் போட்டி போட்டுக்கொண்டிருந்த  டெல்லி டேர்டெவில்ஸ் பெயர் மாற்றம்,  கங்குலி , பான்டிங் கோச்சிங்  போன்ற உபயங்களால் இந்த முறை சற்றே உத்வேகத்துடன் ப்ளே ஆஃப் வந்துவிட்டது. உண்மையில் டெல்லியை இவ்வளவு தூரம் வர வைத்தது புதுவரவு தவானும், இளமைப்பட்டாளமும் தான். கிட்டத்தட்ட இந்தப் போட்டி விக்ரமன் சார் படமான சென்னை அங்கிள்ஸ்க்கும், டெல்லி சிங்கிள்ஸ்க்கும்தான். சென்னை 28 படத்தில் சிறுவர்களுடன் ஆடும் ஷார்க்ஸ் அணி போலத்தான் ஒவ்வொரு முறையும் சென்னை , டெல்லியை டீல் செய்கிறது. ஆனால், ஒரு மாற்றம், இங்கு ஜெய்ப்பது சென்னை.

போட்டி எங்கு நடந்தாலும், சென்னையின் பெரும்படை அங்கு ரெடியாக காத்திருக்கும். நேற்று நடந்த விஷாகப்பட்டினம் ஸ்டேடியத்திலும், ' நீ ஆடு தல' என கெத்தாக மஞ்சள் ஜெர்ஸியுடன் ஸ்டேடியத்தை ஆக்கிரமித்தனர் ரசிகர்கள். 

வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC

டாஸ் வென்றால், இனி ட்யூ, வின்ட்டர், சம்மர் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் என கடந்த போட்டியிலேயே முடிவு செய்திருப்பார் தோனி. நம்ம சனத்தோட மிங்கிள் ஆவோம் என டாஸ் வின், பவுலிங் என்று சட்டென முடிவு எடுத்தார். முரளி விஜய்க்கு பதிலாக பௌலர் ஷர்துல் தாக்கூரை தேர்ந்தெடுத்தார் தோனி. 'அவங்கள மாதிரி நாங்க என்னா தோத்தா போனோம், நாங்க அதே டீமோடு தான் தலைகீழாக குதிப்போம்' என சென்ற போட்டியில் விளையாடிய அதே அணி, அதே ஜெர்சியுடன் களமிறங்கியது டெல்லி கேப்பிட்டல்ஸ். 

தீபக் சஹாருக்கு தோனி கொடுக்கும் அசைன்மென்ட் ஒன்று தான். பவர் ப்ளேவுக்குள் எப்படியும் சஹார் தன் மூன்று ஓவர்களையும் போட்டுட்டு, 'தவ வாழ்க்கை'க்குச் சென்று விடுவார். ஆட்டத்தின் இறுதியில் இங்க சஹார்னு ஒரு பௌலர் இருந்தான்ல, என தோனியும், ரெய்னாவும் தேட ஆரம்பிப்பார்கள். பின்னர் வந்து அவரது ஓவரை கம்ப்ளீட் செய்வார், இந்த சீசனில் பெரும்பாலும் நடந்தது இதுதான். இந்த மேட்சுல மட்டும் எதுக்கு அத மாத்திக்கிட்டு என நினைத்த தோனி, அதையே பின்பற்றினார். 

வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC

பிரித்வி ஷாவின் புல் ஷார்ட் பௌண்டரியைத் தவிர முதல் ஓவரில் எந்த நல்லதும் இல்லை. அடுத்த ஓவர் தாக்கூர். தவான் இந்த ஓவரில் ஹாட்ரிக் பௌண்டரி அடிக்க, 'இதுக்கு நம்ம பேபிம்மா முரளி விஜயே இருந்து இருக்கலாமோ' என யோசிக்க ஆரம்பித்தனர் சென்னை ரசிகர்கள். அடுத்து மீண்டும் சஹார். ஷாவை LBW முறையில் அவுட்டாக்கினார். முதலில், அம்பயரோ முடியாது முடியாது என மறுக்க, தோனி ரிவ்யூ சிஸ்டமை (DRS ) கையிலெடுத்தார் தோனி. டெக்னிக்கல் சிஸ்டம் தோனி பக்கம் நிற்க, நடையைக் கட்டினார் ஷா. 

தோனி கீப்பராக இருக்கும் வரையில், பேட்ஸ்மேன்கள் ஒன்று பந்தை ஃபீல்டர்கள் இருக்கும் பக்கம் அடிக்க வேண்டும். இல்லையெனில் பந்தை தொடாமல் இருக்க வேண்டும். இப்படி திருப்புவது, அப்படித் திருப்புவது என ஏதாவது மேஜிக் ஷோ நிகழ்த்தினால், அதைப் பிடித்து பேட்ஸ்மேனை பெவிலியனுக்கு அனுப்பிவிடுவார் தோனி. தமிழ் அங்கிள் ஹர்பஜன் வீசிய பந்து வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் அதிகமாக பவுன்ஸாக, தவான் தோசைய திருப்பும் லாவகத்துடன் ஏதோ செய்ய, கேட்ச் பிடித்து டாட்டா காட்டினார் தோனி. 

வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC

இரண்டு விக்கெட்டுகளை இழந்தவுடன் ஜடேஜா பந்துவீச்சுக்கே சற்று ஜெர்க் ஆனது டெல்லி. முதல் ஓவரில் மூன்று ரன்கள், இரண்டாம் ஓவரில் நான்கு ரன்கள் ஒரு விக்கெட் என ' மாமன் ஆர்ம்ஸப் பார்த்தியாடா ' என கெத்துக் காட்டிக்கொண்டு இருந்தார் சர் ஜடேஜா. அடித்துக்கொண்டிருந்த முன்றோவும் அவர் பந்தில் அவுட். 

 அடுத்த ஸ்பெல் தாஹிர், பிரேவோ. முதல் ஓவரில் ஒன்பது ரன் கொடுத்திருக்க, இரண்டாவது ஓவரை வீச வந்தார் பராசக்தி எக்ஸ்பிரஸ். ஷ்ரேயாஸ் ஐயர் ' வானம் தொட்டுப் போனா' என மேல் நோக்கி பந்தைச் செலுத்த, அதை லாவகமாக கேட்ச் செய்தார் சுரேஷ் ரெய்னா. மும்பைக்கு எதிரான போட்டியில் ஓடாமல் அமைதிகாத்த தாஹிர், அதற்கும் சேர்த்து இப்போட்டியில் ஓடினார். 'சரி, அவ்ளோ தூரம் போயிட்ட, அப்படியே தேர்ட் மேன் பொசிஷன்ல நில்லு' என்று தோனி நிற்கவைக்க, அங்கு நின்று ஒரு கேட்சும் பிடித்தார். 'ஐயரே போயிட்டார், நாம மட்டும் எதுக்கு நின்னுக்கிட்டு ' என  பிராவோ ஓவரில் வெளியேறினார் அக்ஷர் பட்டேல். ஆமா, நீங்க எதுக்கு பாஸ் இப்ப இறங்குனீங்க? ஏனெனில் இன்னும் ரூதர்ஃபோர்டும்,பாலும் இறங்கவில்லை. சரி, அக்ஷர் அவ்வப்போது தன் ஸ்லீவ்ஸுடன் வந்து இழுத்து இழுத்து ஏதேனும் அடிப்பார் என நாம் நம்பியதைப் போலவே டெல்லியும் நம்பியிருக்கிறது. 

வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC

இந்த களேபரங்களுக்குள் கேட்ச் பிடித்த தாஹிர், அங்கிருந்து ஓடி க்ரீஸுக்கு வந்துவிட்டார். அடுத்த ஓவர அப்படியே போட்டுட்டு மறுக்கா, தேர்டு மேன் பக்கம் நின்று கொண்டார். ஹர்பஜன் பந்துவீச்சில் கவர் பக்கம் ஒரு சிக்ஸ் அடித்துவிட்டு, 'எங்கிட்ட எல்லாம் இதுக்கு மேல எதிர்பார்க்காதீங்க' என அதே ஓவரில் அவுட்டானார் ரூதர்ஃபோர்டு. 

கடந்த போட்டியில் வின்னிங் ஷாட் அடித்த பாலும், பிரேவோவின் அடுத்த ஓவரில் அவுட். டெல்லி பேட்ஸ்மேன்கள் சென்னை ஃபீல்டர்களுக்கு பதிலாக டக் அவுட்டை பிஸியாக வைத்திருந்தனர். பொறுமை காத்த பான்டிங்கும், கங்குலியும் பேடை மாட்டிக்கொண்டு களமிறங்காதது தான் பாக்கி. ரிலே குச்சி போல், ஒருவர் உள்ளே போனால், ஏற்கெனவே இருப்பவர் அடுத்து வெளியேறிக்கொண்டு இருந்தனர்.டெல்லி ரசிகர்கள் வெறியேறிக்கொண்டு இருந்தனர். வழக்கம் போல பெனல்டிமேட் ஓவரை வீச வந்தார் சஹார். பொறுமையிழந்த ரிஷப் பன்ட்டும் அவுட். பிரேவோ கேட்ச் பிடித்து டான்ஸ் ஆட ஆரம்பிக்க, ஜாலிலோ ஜிம்கானா என சென்னையும் குஷியாகியது . அடுத்து டெல்லியின் டாப் 3 பேட்ஸ்மேன் தான் பாக்கி. அமித் மிஸ்ரா, போல்ட், இஷாந்த் ஷர்மா. 

அமித் மிஸ்ரா தன் பலம் கொண்ட மட்டும் பந்தை ஹெலிகாப்டர் ஷாட் போல் ஏதோவொன்று அடித்தார். சிக்ஸ் லைன் அருகே அதைத் தட்டிவிட்டார் டுப்ளெஸ்ஸி. 'இதெல்லாம் பாவம் மை சன்' என பந்தே கதறி இருக்கும். இருந்தாலும், டி வில்லியர்ஸ் போல் இடுப்பையெல்லாம் வளைத்து, அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் மிஸ்ரா. போல்ட் இதுவரை ஐந்து ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் செய்திருக்கிறார். இதற்கு முந்தைய சன்ரைசர்ஸ் போட்டியில் 0*, அதற்கு முந்தைய சென்னை போட்டியில் 1*. மொத்தம் ஆறு ரன்கள் அடித்திருந்தார், இப்படியாப்பாட்ட ரெக்கார்டு இருக்கும் பிளேயருக்கு ஜடேஜா பந்துவீச வேண்டும். மறுபடியும் ' என் ஆர்மஸ் பாத்தியாடா ' என ஜாலியாக வந்த சர் ஜடேஜாவின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தார் போல்ட். ஐபிஎல் வரலாற்றின் தன் அதிக பட்ச ஸ்கோரையும், முதல் சிக்ஸரையும் பதிவு செய்தார். அடுத்த பந்தில் போல்ட்டை போல்டாக்கினார் ஜடேஜா. 

அடுத்து வந்தது இஷாந்த் ஷர்மா. நம்ம பையன்டா என ஒட்டுமொத்த அணியும் சற்று ரிலாக்ஸ் ஆனது. க்ரீஸைவிட்டு முன் வந்து, ஓங்கி ஒரு ஷார்ட், பந்து லாங்க் ஆனில் பவுண்டரி. 'என்னடா இதெல்லாம்... புள்ளப்பூச்சிக்கு கொடுக்கு முளைக்குது' என ஷாக் ஆனார் ஜடேஜா. 'நான் புள்ளப்ப்பூச்சி இல்லடா, சாமி புள்ள' என மீண்டும் இறங்கி வந்து ஒரு சிக்ஸ். ஆத்தி இஷாந்தா இது என ஒட்டுமொத்த இந்தியாவும் ஷாக் ஆக, இறுதியில் 147 ரன்கள் அடித்தது டெல்லி. 

147 ரன்களை டிஃபண்ட் செய்ய வேண்டும். ஆனால், முதல் ஓவரிலேயே தோற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ். போல்ட் வீசிய பந்தை வாட்சன் தட்டிவிட, சரி ஓடுவோம் என ஓட ஆரம்பித்தார் டுப்ளெஸ்ஸி. சட்டென நின்றுவிட்டார். வாட்சனும் ஓட ஆரம்பித்தவர் சட்டென நின்றுவிட்டார். இருவரும் ஒரே பக்கத்தில் ஓடுகிறார்கள். அக்ஷர் பட்டேல் பந்தைப் பிடித்து நான் ஸ்டிரைக்கர் எண்டுக்கு அருகே நிற்கும் முன்றோவுக்கு வீசுகிறார். முன்றோவோ அவர் பக்கம் இருக்கும் ஸ்டம்பில் வீசாமல், கீப்பர் பக்கம் வீசுகிறார். பன்ட்டோ அய்யய்யோ நம்மளால ஆகாதுப்பா என அதை விட்டுவிட, பந்து பௌண்டரி நோக்கிப்போக இறுதியாக இஷாந்த் அதைப் பிடித்தார். உள்ளத்தை அள்ளித்தா பட டைம் பாம் போல், எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தது பந்து. எளிதான ரன் அவுட் வாய்ப்பு தவறியது. கூடவே டெல்லியின் வெற்றியும்..!

வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC

முதல் நான்கு ஓவர்களில் வழக்கம் போல சென்னை 16 ரன்கள். நீங்க தான் சீனியர் நீங்க அடிங்க என வாட்சனும், டுப்ளெஸ்யும் இந்த சீசன் முழுக்கவே மாறி மாறி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்தப்போட்டியிலாவது ஆரம்பம் முதலே அடிக்கப் பழகுங்க பாஸ். பவர் ப்ளே ஓவரும் சேர்த்து பிரேக் டைம் மாதிரி போய்க்கிட்டு இருக்கு. யாரு கண் பட்டதோ, ஐந்தாவது ஓவர் வீச வந்த அக்ஷரின் ஓவரில் ஒரு சிக்ஸ், பௌண்டரி. இஷாந்த் ஓவரில் ஹாட்ரிக் பௌண்டரி என வெளுத்தார் டுப்ளெஸ்ஸி. கீமோ பால், வந்தவுடன் ஒய்டு பக்கம் ஒரு பௌண்டரி வாரி வழங்க, 'இவன் தான் எண்ட தளபதி' என குஷியானார் வாட்சன். ஆட்டத்தின் எட்டாவது ஓவரில், முதல் பௌண்டரியை அடித்தார் வாட்சன், முதல் ஓவரிலேயே பால் 16 ரன்கள் வாரி வழங்கினார், 50 அடித்துவிட்ட டுப்ளெஸ்ஸி, போல்ட் பந்துவீச்சில் அவுட். 

மீண்டும் பாலின் ஓவருக்கு ஆவலாய் காத்திருந்தார் வாட்சன். உங்கள் தேவையே எங்கள் சேவை என டெல்லி கேப்டன், அவரைப் பந்துவீச அழைத்தார். லாங் ஆன், லாங் ஆஃப், ஸ்கொயர் லெக் என மூன்று சிக்ஸ், ஒரு பௌண்டரி என அந்த ஓவரிலேயே 25 ரன்கள், தன் அரைசதம், மீண்டும் மீண்டும் ஃபார்ம்,  சென்னையின் வெற்றி, டெல்லியின் தோல்வி, அடுத்த அண்ணா நகரில் ஒரு வீடு என எல்லாவற்றையும் வாங்கினார் வாட்சன். டுப்ளெஸ்ஸி 50 அடிச்சதும் அவுட் ஆனார், நாம அதிகமா அடிச்சா சகல கோச்சுக்கும் என அவரும் சரியாக 50க்கு அவுட். 

வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC

46 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டும், 8 விக்கெட்டுகள் இருக்கின்றது, அப்போதே ஃபைனலுக்கு ஆயுத்தமாகிவிட்டனர் சென்னை ரசிகர்கள். அடுத்த நடந்ததெல்லாம் சம்பிரதாய உருட்டல்கள் தான். வழக்கம்போல ரெய்னா அவுட். ஃபினிஷிங் குமார் தோனி இறங்க, செம்ம மூடுக்கு செட் ஆனது க்ரவுட். ராயுடு ஒரு பக்கம் வெற்றிக்கான ரன்களைக் குறைத்துக்கொண்டு இருந்தார். நமக்கெதுக்கு வின்னிங் ஷாட் என லாஸ்ட் பாலில் கட்டை போட்டார் ராயுடு. பொழைக்கத் தெரிஞ்ச புள்ளை. 

வின்னிங் ஷாட் ஆசையில், தோனி தூக்கி அடித்ததும் பறந்த பந்தை கேட்ச் பிடித்து, ரசிகர்களை சோக மூடுக்கு மாற்றினார் பால். உள்ளே வந்த பிரேவோ, லெக் பைஸ் பௌண்டரியில் ஆட்டத்தை முடித்து வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு விக்கெட் வித்தியாத்தில் மிக எளிதாக டெல்லியை வீழ்த்தி, ஃபைனலுக்கு வழக்கம்போல் முன்னேறி இருக்கிறது. டெல்லிக்கு இதுவே மிகப்பெரும் சாதனை தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளே ஆஃப் வரை வந்திருக்கிறார்கள். ஆட்டநாயகனாக டு ப்ளெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார்.

வடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி! #CSKvDC

சென்னைக்கு ப்ளே ஆஃப் வருவது, ஃபைனலுக்கு செல்வது எல்லாம் ' தண்ணி பட்ட பாடு ' ஆனால், இதுவும் பத்தாது ' கொண்டாடி அண்டா' என கப்புக்கு இந்த முறையும் குறி வைக்கிறார்கள் ரசிகர்கள். (போன வாட்டியும் சென்னை தான் கப்).  சென்னை சூப்பர் கிங்ஸின் 'அன்புடென்' சிங்கம், நான்காவது முறையாக மும்பையை ஃபைனலில் சந்திக்கிறது. அதேபோல் இந்த சீசனிலும் இரு அணிகளும் நான்காவது முறையாக சந்திக்கப் போகின்றன. சென்றமுறை சன்ரைசர்ஸ், சென்னை அணிகள் ஃபைனலுக்கு முன்பு 3 முறை மோதியிருந்தன. அந்த 3 போட்டிகளிலும் வென்ற சென்னைதான், இறுதிப் போட்டியிலும் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்த முறை, மும்பை அணி, சூப்பர் கிங்ஸை 3 முறை வென்றிருக்கிறது. சரி, சரி, நெகடிவ் வைப்ரேஷனை கட் பண்ணிக்கலாம். ப்ளீட் யெல்லோ..!

ஃபைனல் போட்டியில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு? 

அடுத்த கட்டுரைக்கு