Published:Updated:

ரஷித் ஓவரை டார்கெட் செய்த ஹெட்மயர்… ஹைதராபாத்துக்கு `செக்’ வைத்த ஆர்.சி.பி! #RCBvSRH

ரஷித் ஓவரை டார்கெட் செய்த ஹெட்மயர்… ஹைதராபாத்துக்கு `செக்’ வைத்த ஆர்.சி.பி! #RCBvSRH
ரஷித் ஓவரை டார்கெட் செய்த ஹெட்மயர்… ஹைதராபாத்துக்கு `செக்’ வைத்த ஆர்.சி.பி! #RCBvSRH

ரஷித் ஓவரை டார்கெட் செய்த ஹெட்மயர்… ஹைதராபாத்துக்கு `செக்’ வைத்த ஆர்.சி.பி! #RCBvSRH

`கொல்கத்தா, பஞ்சாபை ஜெயிக்கணும், ராஜஸ்தான், சென்னைட்ட தோக்கணும். இதெல்லாம் நடந்தா நாம பிளே ஆஃப் போகலாம்…’ - பொதுவாக, ஐ.பி.எல் லீக் சுற்று முடியும் நேரத்தில் ஆர்.சி.பி ரசிகர்கள்தான் இப்படி கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்கள். இந்தமுறை ஹைதராபாத் ரசிகர்களை அப்படி கணக்கு போட வைத்துவிட்டது ஆர்.சி.பி. கணக்கு போட வைத்தவர் ஹெட்மயர். `வாங்குன 4 கோடிக்கு இன்னிக்கிதான் உருப்படியா விளையாடியிருக்கான்’ என்ற நல்ல பெயரோடு வெஸ்ட் இண்டீஸூக்குப் பெட்டியைக் கட்டியிருக்கிறார். இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை, கொல்கத்தாவை வீழ்த்தினால் மட்டுமே ஹைதராபாத் பிளே ஆஃபில் நுழைய முடியும். #RCBvSRH

2019 ஐ.பி.எல் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஆர்.சி.பி-க்கு இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. ஹைதராபாத் அணிக்கோ இதில் ஜெயித்தால்தான் பிளே ஆஃப் போக முடியும் என்ற நிலை. டாஸ் வென்ற கோலி, வில்லியம்சனை பேட் செய்ய சொன்னார்.    

ரஷித் ஓவரை டார்கெட் செய்த ஹெட்மயர்… ஹைதராபாத்துக்கு `செக்’ வைத்த ஆர்.சி.பி! #RCBvSRH

வார்னர், பேர்ஸ்டோ உலகக் கோப்பைக்கு ஆயுத்தமாக கிளம்பி விட்டதால், ரித்திமான் சாஹா, மார்ட்டின் கப்டில் ஜோடி ஹைதராபாத்துக்கு ஓப்பனிங் இறங்கியது. கேட்ச்சை மிஸ் செய்து, ஹாட்ரிக் பவுண்டரிகள் கொடுத்து சாஹாவுக்கு சாஹல் லைஃப் தந்தார். ஆனால், சைனி, சாஹா கதையை முடித்து வைத்தார். மறுமுனையில் கப்டில் ஃபுல் பார்மில் இருந்தார். சைனியின் பந்து அவ்வளவு மோசமாக இல்லை. 150 கி.மீ வேகம். லைன் அண்ட் லென்த் நன்றாகவே இருந்தது. இருந்தும், சிக்ஸர், பவுண்டரி என மிரட்டினார் கப்டில். `இந்த வேகத்துல போனா, ஸ்கோர் 200-ஐ தாண்டும்’ என கணித்தார்கள். ஆனால், வாஷிங்டன் சுந்தர் அழகாக ஒரு செக் வைத்தார்.

ஸ்பின் பெரிதாக இல்லாத ஒரு ஃபிளாட் டெலிவரி. பேக்ஃபுட்டில் பேலன்ஸ் செய்து கப்டில் அடித்த பந்தை ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த கோலி எளிதாக கேட்ச் பிடித்தார். கப்டில் 30 ரன்களில் (22 பந்து) அவுட். அடுத்த மூன்றாவது பந்தில் மணீஷ் பாண்டேவும் காலி. மணீஷின் புல் ஷாட்டை மிட் விக்கெட்டில் அட்டகாசமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் ஹெட்மயர். மூன்றாவது அம்பயரின் முடிவுக்குப் பின் அவுட் என தீர்மானிக்கப்பட்டது.

விஜய் சங்கர் – வில்லியம்சன் ஜோடி மிடில் ஓவரில் கொஞ்சம் உருட்டிக் கொண்டிருந்தது. ஆனால், சக தமிழக வீரர் வாஷிங்டன் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார் விஜய் சங்கர். வாஷிங்டன் அசரவில்லை. `அரவுண்ட் தி விக்கெட்’ சென்று ஆஃப் சைட் பிட்ச் செய்த பந்தை விஜய் சங்கர் ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று, கிரந்தோமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வில்லியம்சன் கியரை மாற்றினார். கெஜ்ரோலியா ஓவரில் 2 சிக்ஸர். யுசுஃப் பதான், ரஷித் கான், முகமது நபி யாரும் சிங்கிள் டிஜிட்டை தாண்டவில்லை.

ரஷித் ஓவரை டார்கெட் செய்த ஹெட்மயர்… ஹைதராபாத்துக்கு `செக்’ வைத்த ஆர்.சி.பி! #RCBvSRH

19-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 147/7. வில்லியம்சன் பவர்ஹிட்டர் இல்லை. ஆனால், உமேஷ் யாதவ் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டும் இல்லை என்பதால், 20 ஓவர் முடிவில் 175 ரன்களை எடுத்தது ஹைதராபாத். ஃபுல் லென்த்தில் விழுந்த பந்தை அலட்டாமல் மிட் ஆஃபில் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டிய வில்லியம்சன், ஆஃப் கட்டரை ஸ்கொயர் லெக் பக்கம் பவுண்டரி தட்டினார். அடுத்து ஃபுல் லென்த்தில் விழுந்ததை ஒரு டிரைவ். அதுவும் பவுண்டரி. கோலி ஓடி வந்து உமேஷ் யாதவிடம் ஏதோ சொன்னார். அடுத்த பந்தை உருப்படியாக போட்டார் உமேஷ். ஆனால், அதை நோ பால் என்றார் அம்பயர். (அது நோ பாலே இல்லை). நொந்துபோன உமேஷ் கடைசி பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி கொடுத்தார். கடைசி ஓவரில் 28 ரன்கள். வில்லியம்சன் 43 பந்துகளில் 70 ரன்கள் அடித்திருந்தார்.

பெங்களூரு சேஸிங்கில் முதல் ஓவரில் பார்த்திவ் படேல் அவுட். இரண்டாவது ஓவரில் கோலி அவுட். மூன்றாவது ஓவரில் ஏபி டி வில்லியர்ஸ் அவுட். பவர்பிளேவில் மூன்று முக்கிய விக்கெட்டுகள் காலி. 20/3. இனி பெங்களூரு தேறாது என்றுதான் நினைத்தார்கள். ஆனால், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹெட்மயர் – குர்கீரத் சிங் ஆட்டத்தையே மாற்றிவிட்டார்கள். குறிப்பாக, ஹெட்மயர்.

ரஷித் ஓவரை டார்கெட் செய்த ஹெட்மயர்… ஹைதராபாத்துக்கு `செக்’ வைத்த ஆர்.சி.பி! #RCBvSRH

இந்த சீசனில் 4.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஹெட்மயர், சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் பொறுப்பில்லாமல் அவுட்டானார். அடுத்த அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் எடுத்த ரன்கள் 9, 5, 0. நான்கு போட்டிகளிலும் சேர்த்து 26 பந்தில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இது சரிப்பட்டு வராது என ஓரங்கட்டி விட்டார்கள். 3 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கினாலும் இறங்கினார்களே தவிர, ஹெட்மயருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. உலகக் கோப்பைக்காக கிளாசன் கிளம்பிவிட்டதால், வேறு வழியில்லாமல் நேற்று பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். `போற நேரத்துல உருப்படியா எதாவது பண்ணுவோம்’ என அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடிவிட்டார்.

ஹெட்மயர் 47 பந்துகளில் 75 ரன்கள் அடித்தார். அதில் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள். எட்டில் நான்கு ரஷித் கான் பந்தில் அடித்தவை. முகமது நபி, புவி ஓவர்களிலும் தலா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார் என்றாலும், ரஷித் கான் ஓவரை குறிவைத்து வெளுத்தார். ரஷித் வீசிய 15 பந்துகளில் ஹெட்மயர் அடித்தது 32 ரன்கள். அதிலும் அந்த நான்கு சிக்ஸர்கள்தான் விஷயமே! லெக் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லென்த்தில் விழுந்ததை லாங் ஆன் பக்கம் திருப்பி முதல் சிக்ஸர் அடித்தார் ஹெட்மயர். அடுத்து ரஷித் கான் ஓவர் போடவில்லை. கலீல் அகமது, பசில் தம்பி, முகமது நபி என பெளலர்களை மாற்றினார் வில்லியம்சன்.

ரஷித் ஓவரை டார்கெட் செய்த ஹெட்மயர்… ஹைதராபாத்துக்கு `செக்’ வைத்த ஆர்.சி.பி! #RCBvSRH

11-வது ஓவரை வீச வந்தார் ரஷித். அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள். ரஷித் ஓவரை இப்படி வெளுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது சிக்ஸரை அடித்து விட்டு, பேட்டை தூக்கி போட்டு பிடித்தார் ஹெட்மயர். அரைசதம் கடந்த திருப்தியில் ஒரு சல்யூட் வேற… ஆர்ப்பரித்தனர் ஆர்.சி.பி ரசிகர்கள். ரஷித் வீசிய ஒவ்வொரு கூக்ளிக்கும் ஒவ்வொரு டெக்னிக் வைத்திருந்தான் அந்த கரீபிய இளைஞன். எல்லாமே 4,6 என பவுண்டரியைக் கடந்தது. ரஷித் 4 ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். இந்த சீசனில் அவர் 40 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுப்பது இது இரண்டாவது முறை.

டீரிம் லெவனில் குர்கிரத் சிங்கை யாருமே எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், ஆர்ப்பாட்டமின்றி அரைசதம் கடந்து விட்டார். 48 பந்துகளில் 65 ரன்கள். பெருந் தலைகள் சொதப்பிய நேரத்தில், ஹெட்மயருடன் ஜோடி சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து, அடுத்த சீசனுக்கு டிக்கெட்டை புக் செய்து விட்டார். கரடு முரடாக இல்லாமல், டிரைவ், கட், ப்ளிக், புல் என கைவசம் வெரைட்டியான ஷாட்களை வைத்திருக்கிறார் குர்கிரத். எல்லாவற்றையும் விட, ஷார்ட் லென்த்தில் விழும் பந்துகளை புல் ஷாட் அடிப்பது அவருக்கு தண்ணி பட்டபாடு போல.

ரஷித் ஓவரை டார்கெட் செய்த ஹெட்மயர்… ஹைதராபாத்துக்கு `செக்’ வைத்த ஆர்.சி.பி! #RCBvSRH

ஹெட்மயர் – குர்கிரத் வேண்டிய ரன்களை எடுத்துக் கொடுத்து விட, டெய்லெண்டர்கள் மிச்சமிருக்கும் ரன்களை எடுத்து விட்டனர். நான்கு பந்துகளை மீதம் வைத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிட்டது ஆர்.சி.பி. ஹைதராபாத் நிலைதான் இப்போது திண்டாட்டம். `எங்கள் கையை விட்டுப் போய்விட்டது. இனி, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’’ என்றார் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன்.

கடைசி மேட்ச் வரை பிளே ஆஃப் சுற்றின் சுவாரஸ்யம் நீடிக்க வேண்டும் என்கிற ஐ.பி.எல் தியரி, இந்த சீசனிலும் தொடர்கிறது. அடுத்த சீசனிலும் இது தொடரும்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு