Published:Updated:

பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKR

பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKR

பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKR

பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKR

பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKR

Published:Updated:
பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKR

இரண்டு தமிழக கேப்டன்களுக்குமே நேற்றைய போட்டியை வெல்ல வேண்டிய சூழல். நன்றாக ஆரம்பித்து, ஆறு போட்டிகளை வரிசையாகத் தோற்று, பரிதாபமாக நின்றது தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா. டபுள் பைக்கில் ஸ்டாண்டிங்கில் வந்த கொல்கத்தா, டக்கென ரிவர்ஸ் கியர் அடித்து குப்புற விழுந்தது. கொல்கத்தாவின் ரஸ்ஸல் எல்லாம் ஜமைக்கைன் மொழியிலேயே ஒரு பிரஸ் மீட்டில் திட்டினார். கொல்கத்தாவின் நிலைதான் இப்படியென்றால், பஞ்சாப் இன்னும் மோசம். (மேலே இருக்கும் படத்துக்கும், இந்த இரண்டு அணிகளின் பர்ஃபாமன்ஸுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை.)

ஜெய்ப்பூரைத் தவிர பஞ்சாபுக்கு, சென்ற இடமெல்லாம் சறுக்கல்தான். என்ன இருந்தாலும் `ஹோம்ல நாங்க கெத்து பாஸ்’ என 'வலிக்கலையே' சொல்லிக்கொண்டு இருந்தது பஞ்சாப். ரிவர்ஸ் பாயின்ட்ஸ் டேபிளில் டாப்பரான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவைத் தவிர, யாருமே பஞ்பாபை மொஹாலியில் வெல்லவில்லை. 'அடப்போங்க பாஸ்' என அந்த மொஹாலி கோட்டையும் உடைத்துவிட்டது கொல்கத்தா.

பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKRடாஸ் ஜெயிச்சா ஐபிஎல் குலவழக்கப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்தது கொல்கத்தா. கெயிலும் ராகுலும் பஞ்சாப் சார்பாக வழக்கம்போல் ஓப்பனிங் இறங்கினர். சந்தீப் வாரியரின் முதல் ஓவரின் இறுதியில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி கெயில் அடிக்க, 'வந்துட்டான்... வந்துட்டான்... வந்துட்டான்... ' என ஆர்வமாகினர் கெயில் ரசிகர்கள். ஆனால், சந்தீப் வாரியரின் அடுத்தடுத்த ஓவர்களில் கெயிலும் ராகுலும் 'வந்துட்டான், வந்துட்டான்' என பெவிலியனுக்கே திரும்பிவிட்டனர். பவர் ப்ளே இறுதியில் பஞ்சாபின் ஸ்கோர் 41/2. பெங்களூருக்கு எதிராக தம்ஸ் அப் காட்டிய பூரான்தான் நேற்றும் பஞ்சாபின் ஆபத்பாந்தவன் .

ரஸ்ஸலின் ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் பறக்க, அடுத்த ஓவர் போட ஆயுத்தமானார் நரைன். தன் முதல் ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் நரைன். 'ஏ கொட்டாச்சி, நீ எங்க போற’ என நரைனை நிறுத்திவிட்டு, சாவ்லாவை பந்து வீச அழைத்தார் தினேஷ் கார்த்திக். 'அட நம்ம சாவ்லா' என சால்னாவைப் பார்த்தது போல், முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசினார் பூரான். நரைன் நின்றுகொண்டிருந்த இடத்திலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார். 2.30 நிமிட `ஸ்னாக்ஸ் பிரேக்’ விடப்பட்டது. தினேஷ் கார்த்திக் `பிடி மாஸ்டர்’போல் ஒட்டுமொத்த அணியையும் திட்டிக்கொண்டு இருந்தார். `இதென்னடா தினேஷ் கார்த்திக் ஆங்கிரி பேர்டு கோலி மாதிரி ஆகிட்டாப்ல’ என எல்லோருக்கும் ஷாக்! ஃப்ரெண்ட்ஸ் பட கான்டிராக்டர் நேசமணிபோல், 'பல கோடி ரூபா கான்ட்ராக்ட்ட மண்ணள்ளி போட்டுடாதீங்கடா' என தினேஷ் கார்த்திக் புலம்பியிருக்கக்கூடும். 

பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKRஅப்ப நாந்தான் பந்துவீசுவேன் என மீண்டும் அடம்பிடித்தார் நரைன். சரி, போய்த்தொலை என மீண்டும் வந்தார் நரைன். இந்த ஓவரில் வெறும் 5 ரன்கள். எப்பூடி என கெத்தாக நின்றார் நரைன். அடுத்த ஓவர் மீண்டும் சாவ்லா. போன முறை சிக்ஸர் பவுண்டரி என அடித்த பூரான், இந்த முறை பவுண்டரி , சிக்ஸர் என அடித்தார். `சரி, இது ஆகறதில்லை’ என பார்ட் டைமர் ராணாவை இறக்கினார் டிகே. வில்லி, கோலி, டார்ஸி ஷார்ட், பார்த்திவ் என ஐபிஎல் வரலாற்றில் ராணா எடுத்ததெல்லாமே வேற லெவல் விக்கெட்டுகள். கடந்த சீஸனில் ஒரே போட்டியில் டி வில்லியர்ஸ், கோலியை அவுட்டாக்கினார் ராணா. பூரானும் ராணாவுக்கு விழுந்துவிட்டார். `தட் நான் 10 பேர அடிச்சு டான் ஆகலைடா, நான் அடிச்ச 10 பேரும் டான்’ மோடில் இருந்தார் ராணா. அட்டகாசமாக அடித்துக்கொண்டிருந்த பூரான் க்ளோஸ்! 48 (32m 27b 3x4 4x6) SR: 177.77.

அகர்வால், மந்தீப் சிங் எல்லாம் எங்களால் முடிஞ்சது இவ்ளோதான் என ஒதுங்கிக்கொள்ள, சாம் குர்ரான் அடித்து ஆட ஆரம்பித்தார். கடந்த போட்டியில் கோல்டன் டக்கான அஷ்வின் மீண்டும் களமிறங்கினார். இந்த சீஸனின் ஒரு போட்டியில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள் விளாசியதுதான் அஷ்வின் ஐபிஎல் பேட்டிங் சாதனை. டெஸ்ட்டில் நான்கு சதம் , பத்துக்கும் மேற்பட்ட அரைசதம் எல்லாம் அடித்திருந்த்தாலும், டி20 போட்டிகளின் ஹிட்டர் பேட்டிங் ஸ்டைல் அஷ்வினுக்கு இதுவரையிலும் கைகூடவில்லை. இந்தப் போட்டியிலும் டக் அவுட். 'அடப் போங்கடா' என மூட் அவுட்டானார் 'டிம்பிள்' ப்ரீத்தி ஜிந்தா.

 

கடைசி ஓவரில் ஹேரி கர்னி என்னென்னமோ செய்து பார்த்தார். ஓவர் ஸ்டிக் வந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் வீசினார், அரௌண்ட் ஸ்டிக் சென்று ஸ்லோ பால் வீசினார், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. நான்கு பந்துகளில் 14 ரன்கள் எடுத்துவிட்டார் குர்ரான். சரி என ஃபீல்டிங்கையெல்லாம் மாற்றி, அரௌண்ட் ஸ்டிக்கிலிருந்து வந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் வீசினார் கர்னி. இம்முறை குர்ரான் வேறு ஐடியா வைத்திருந்தார். டி வில்லியர்ஸ் போல் வைட் கிரீசுக்கு அருகில் சென்றில், ஃபைன் லெக் திசையில் பௌண்டரி விளாசினார். அடுத்த பந்திலும் அப்படி ஆடிவிடுவாரோ என ஸ்டம்ப் நோக்கி ரபாடாவைப் போல் ஃபுல் டாஸ் வீசினார் கர்னி. இம்முறை, அவர் அடித்தது வேறு லெவல் ஷாட். 1975 உலகக் கோப்பை ஃபைனலின் கடைசிப் பந்தில், விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த 'இன்னோவேஷன்' ஷாட்டை அப்படியே கார்பன் காப்பி எடுத்தார் குர்ரான். பௌண்டரி! கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள். கடைசி ஓவரில் குர்ரான் 22 ரன்கள் அடிக்க, பஞ்சாப் ஆறு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. சாம் குர்ரான் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். 2 சிக்ஸர், 7 பவுண்டரி, 200 ஸ்ட்ரைக் ரேட் என பஞ்சாப் அணி இக்கட்டான தருணத்தில் இருக்கும்போது 20 வயது சாம் குர்ரானின் முதல் ஐபிஎல் அரை சதம் ஒரு சிறப்பான சம்பவம்.  

பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKR184 ரன்கள் எடுத்தால், ப்ளே ஆஃப் நோக்கி நகரலாம் என்னும் நம்பிக்கையோடு களமிறங்கியது கொல்கத்தா. கொல்கத்தாவின் ஆஸ்தான ஓப்பனரான நரைன் தற்போதெல்லாம் பெரிதாக எதுவும் அடிப்பது இல்லை. இந்த நிலையில் அவ்வப்போது கில்லை நரைன் நோகாதவாறு ஓப்பனிங் இறங்குகிறார்கள். 'வாய்ப்புகள் அமையாது மன்னா. நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்' என்னும் சினிமா பாடலுக்கு ஏற்ப, கில் கிடைக்கும் கேப்பில் எல்லாம் அரைசதம் அடிக்கிறார். பஞ்சாப் லோக்கல் ப்ளேயரான கில், இந்த சீஸனில் ஓப்பனிங் இறங்கிய போட்டிகள் எல்லாமே அட சொல்லும் ரகம். இரண்டு அரை சதங்கள் அடித்து இருக்கிறார். இந்தப் போட்டிகள் மீண்டும் ஒரு அரைசதம். கொல்கத்தாவின் ஓப்பனர் slot பிரச்னைக்கு கில்லை வைத்து முடிவுகட்டி இருக்கிறார்கள். டீனேஜ் வீரரான (19 வயது) கில் இதுவரை நான்கு அரைசதங்கள் அடித்திருக்கிறார்.

`ஓவருக்கு 9 ரன்கள் வேண்டுமா, பத்தாகவே எடுப்போம்’ என நெட் ரன்ரேட்டையும் குறிவைத்து ஆடியது கொல்கத்தா. ஆறு போட்டிகள் தொடர் தோல்வியைக் கொல்கத்தா எளிதில் மறந்துவிடாது. ஆண்ட்ரூ டை, கிறிஸ் லின்னை அவுட்டாக்கினார். ஆனால், லின் ஏற்கெனவே பஞ்சாப் என்னும் ஃபர்னிச்சரை உடைத்திருந்தார் 46 (28m 22b 5x4 3x6) SR: 209.09 .

முருகன் அஷ்வின், ரவிச்சந்திரன் அஸ்வின் என யார் வந்து பந்து வீசினாலும் கொல்கத்தா வீரர்கள் அதைச் சட்டையே செய்யாமல் அடித்து வெளுத்தனர். முருகன் அஷ்வின் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி என உத்தப்பாவும் இறங்கி ஆட ஆரம்பிக்க, என்ன செய்வதென்று திகைத்தது பஞ்சாப். ரவிச்சந்திரன் அஷ்வின் உத்தப்பாவை அவுட்டாக்க, அடுத்து களமிறங்கினார் ரஸல். `இந்தக் கருமத்துக்கு உத்தப்பாவை அவுட்டாக்காமயே இருந்திருக்கலாம்’ என நினைத்திருப்பார் அஷ்வின். முதல் மூன்று ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்ததால், நம்பி பந்துவீச வந்தார் அஷ்வின். ஃபுல் பார்மில் இருக்கும் கில், இந்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார். அடுத்து ஆண்ட்ரூ டையின் ஓவரில் ரஸல் 2 சிக்ஸ். 

பூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்! #KXIPvKKRசாம் குர்ரான் வீசிய 18-வது ஓவரிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. பவுண்டரி, சிக்ஸ், பவுண்டரி என அடித்தது கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக். லோக்கல் வீரர் கில், ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்தப் போட்டியில் தோற்ற பஞ்சாப், சீஸ்ன் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது, இந்த சீஸனில் `அவே’ போட்டிகளில் அடைந்த பெரும் தோல்விகள், பவர் ப்ளேவிலேயே நாங்கள் பெரும்பாலான போட்டிகளில் தோற்றுவிடுகிறோம் என வருத்தப்பட்டார் அஷ்வின். பஞ்சாபுக்கு பேரிடியாக அமைந்தன. அடுத்த சீஸனில் `அவே’ போட்டிகளில் வெல்ல வேண்டும். முதலில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுருவையாவது வெல்ல வேண்டும். ஆழ்ந்த வாழ்த்துகள் அஷ்வின்!

கொல்கத்தா அடுத்த போட்டியில் மும்பையை வெல்ல வேண்டும். அதேசமயம், சன்ரைசர்ஸ் பெங்களூருவிடம் தோற்க வேண்டும். எத்தனை பிரார்த்தனைகளைத்தான் தினேஷ் செய்வது.