Published:Updated:

``அவர் கிரிஸில் இருக்கும்போது பௌலர்களுக்கு நெருக்கடிதான்’ - தோனி குறித்து மனம் திறந்த ரெய்னா

`அவர் அணியில் இருக்கும்போதும் இல்லாமலிருக்கும்போதும், எதிரணியினரிடத்தில்  ஏற்படும் மாற்றத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர் எந்த அளவுக்கு பர்ஃபெக்டாக இருக்கிறார் என்பதை ஸ்டம்பிங் மூலமாக நீங்கள் அறிந்துகொள்ளலாம்” என்று மனம் திறக்கிறார் ரெய்னா.

``அவர் கிரிஸில் இருக்கும்போது பௌலர்களுக்கு நெருக்கடிதான்’ - தோனி குறித்து மனம் திறந்த ரெய்னா
``அவர் கிரிஸில் இருக்கும்போது பௌலர்களுக்கு நெருக்கடிதான்’ - தோனி குறித்து மனம் திறந்த ரெய்னா
``அவர் கிரிஸில் இருக்கும்போது பௌலர்களுக்கு நெருக்கடிதான்’ - தோனி குறித்து மனம் திறந்த ரெய்னா

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், டெல்லியை 99 ரன்களிலே சுரூட்டியது சிஎஸ்கே. இந்த ஆட்டத்தில், எப்போதும்போல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பின்ங் ரசிகர்களைக் கவர்ந்தது. `அவர் எப்போது க்ரீஸில் இருந்தாலும், அது பௌலர்களுக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுக்கும்” என்று தோனி குறித்து பலரும் சிலாகிப்பது வழக்கம். அப்படித்தான் சிலாகித்துப்பேசியிருக்கிறார், பேட்ஸ்மேன் ரெய்னா. இந்த சீசனில், மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் மட்டும், காய்ச்சல் காரணமாக அவரால் இடம்பெற முடியவில்லை. ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றம். இப்படியான நிலையில், அவர் நேற்று அணியில் இடம்பிடித்தது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தது. 22 பந்துகளில் 44 ரன்களை அடித்து `வந்துட்டேன்னு சொல்லு’ என்று சீறினார்.

``அவர் கிரிஸில் இருக்கும்போது பௌலர்களுக்கு நெருக்கடிதான்’ - தோனி குறித்து மனம் திறந்த ரெய்னா

'தோனி இல்லாமல் அணியை வழிநடத்தியது எத்தகைய சவாலாக இருந்தது' என்று ரெய்னாவிடம் கேட்டதற்கு, ``அவரை கேப்டனாக இழப்பது பெரும் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அவர் இல்லாமலிருப்பது எங்களுக்குக் கடினமான ஒன்று. மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இதுதான் நடந்தது. அவர் கிரிஸுக்குள் இருக்கும்போது, அது எதிர் அணியினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.  அவர் இல்லாதிருக்கும்போது, எதிர் அணியினரிடம் இருக்கும் மாற்றத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அணியை வழிநடத்துவதிலும் பேட்ஸ்மேனாகவும்,  கடந்த ஆண்டுகளில் தோனி சிறப்பாகச் செயல்பட்டார். அவர் எவ்வளவு நாள்கள் சென்னைக்காக ஆட வேண்டும் என்பதை அவரே முடிவுசெய்வார்.

``அவர் கிரிஸில் இருக்கும்போது பௌலர்களுக்கு நெருக்கடிதான்’ - தோனி குறித்து மனம் திறந்த ரெய்னா

அவர், இரண்டு பிரிலியன்ட் ஸ்டம்பிங்க் செய்து அசத்தினார். ஒன்று, ஸ்ரேயாஸை அவுட் செய்தது. மற்றொன்று மோரீஸ். அவர் எந்த அளவுக்கு பர்ஃபெக்ட் என்பதை வெளிப்படுத்த இந்த இரண்டு ஸ்டம்பிங்கே போதுமானது. கடந்த காலங்களில் இந்தியாவுக்காக ஆடும்போது, அவர் செய்த வியக்கவைக்கும் ஸ்டம்பிங்குகள், அவர் எந்த அளவுக்கு ஆட்டத்தில் ஈடுபாடுடன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது” என்றார்.

தொடர்ந்து பேசிய ரெய்னா,``சென்னையில் ஸ்மார்ட் ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. நேற்றைய ஆட்டமே 6-வது ஓவருக்குப் பின்தான் தொடங்கியது. ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய எங்களின் முந்தை இரண்டு ஆட்டங்களிலும், முதல் மூன்று ஓவர்களிலும் நாங்கள் சரியாக விளையாடவில்லை. வாட்சன் மற்றும் டூப்ளசிஸ் இருவரும் போல்ட், மோரீஸின் பந்துகளைக் கவனமாக எதிர்கொண்டனர்.

``அவர் கிரிஸில் இருக்கும்போது பௌலர்களுக்கு நெருக்கடிதான்’ - தோனி குறித்து மனம் திறந்த ரெய்னா

விக்கெட்டுகளைப் பறிகொடுக்காமல் இருப்பது மிகவும் முக்கியம். பின்னர் வந்த தோனி, ராயுடு, ஜடேஜாவால் கூடுதல் ரன்களைச் சேர்க்க முடிந்தது. நாங்கள் டாஸில் தோற்றது எங்களுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவதாக ஆடிய டெல்லியின் விக்கெட்டுகளை எங்கள் கைகளிலே வைத்திருந்தோம். டெல்லி பவர் ப்ளவில் சிறப்பாகத்தான் ஆடினார்கள். ஆனால், அதன்பிறகு அவர்கள், அதைத் தொடர்ந்து தக்கவைக்கத் தவறிவிட்டனர். சென்னை மைதானத்தில், எங்கள் ஸ்பின்னருக்கு எதிராக ஆட சரியான திட்டமிடல் தேவை. அப்படியில்லாவிட்டால், அது கடினமானதாக அமைந்துவிடும்” என்று பேசினார். அதேபோல, டெல்லி கேப்டன் பேசுகையில்,``தோனி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் இருக்கும்போது, நாங்கள் எங்கள் பௌலர்களைக் குறை சொல்லமுடியாது. அவர், ஆட்டத்தையே ஒரு பந்தில் மாற்றக்கூடியவர். அவர் கடைசிவரை நிலைத்து ஆடினால், கண்டிப்பாக நல்ல ஸ்கோரை அணிக்கு எட்டித்தருவார். தோனி ஆடும்போது, பௌலர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தை உணரத்தான்செய்கிறார்கள்.” என்றார். 

Vikatan