Published:Updated:

`பனி குறைவாக இருக்கும்; காற்று நன்றாக வீசுகிறது!'- போட்டிக்கு முன்பே வெற்றியைக் கணித்த தோனி

மே 1-ம் தேதி உண்மையாகவே தல தினம்தான். தல அஜித்துக்குப் பிறந்தநாள் என்பதால் அவரை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடித் தீர்க்க மறுபுறம் சென்னை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார் இன்னொரு `தல' தோனி. ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியாக நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய தோனி நேற்றைய போட்டியில் விளையாடினார். முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

`பனி குறைவாக இருக்கும்; காற்று நன்றாக வீசுகிறது!'- போட்டிக்கு முன்பே வெற்றியைக் கணித்த தோனி

வலுவான பேட்டிங் வரிசையுடன் களமிறங்கிய டெல்லி தாஹிர், ஜடேஜா, ஹர்பஜனின் ஸ்பின் அட்டாக்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால் 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக 44 ரன்கள் எடுத்தார். இதற்கிடையே நேற்று ஆரம்பம் முதலே இந்த ஆட்டத்தைத் தனது கன்ட்ரோலில் வைத்திருந்தார் என்பதைவிட நன்றாகக் கணித்திருந்தார் தோனி. இதற்கு உதாரணமாக நேற்று டாஸ் போடப்பட்ட பிறகு டாஸை ஜெயித்த ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.

`பனி குறைவாக இருக்கும்; காற்று நன்றாக வீசுகிறது!'- போட்டிக்கு முன்பே வெற்றியைக் கணித்த தோனி

அப்போது பேசிய அவர், ``இரண்டாவது இன்னிங்ஸில் பனி இருக்கும் என நம்புகிறோம். மைதானம் நன்றாகக் காய்ந்து இருப்பதால் விக்கெட் எடுக்க முதல் இன்னிங்ஸ் நன்றாக இருக்கும். மேலும், மூன்று ஸ்பின்னர்கள் இருப்பதால் முதலில் பௌலிங் செய்கிறோம்" எனக் கூறினார். இதன்பின் பேசிய தோனியோ, மைதானத்தின் தன்மை குறித்த ஸ்ரேயாஸின் கணிப்பு தவறு என்கிற வகையில், ``மேகம் அதிகமாக மூடி இருப்பதால் இன்று குறைவான பனியே இருக்கும். காற்று வேறு நன்றாக வீசுகிறது. இதனால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி" எனக் கூறினார்.

`பனி குறைவாக இருக்கும்; காற்று நன்றாக வீசுகிறது!'- போட்டிக்கு முன்பே வெற்றியைக் கணித்த தோனி

தோனி கூறியதுபோலவே முதல் பேட்டிங்கின்போது வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த மைதானம் இரண்டாவது பேட்டிங்கின்போது சுழற்பந்துவீச்சுக்கு சாதமாக அமைந்தது. பனியும் குறைவாகவே காணப்பட்டது. தோனியின் இந்தக் கணிப்பு இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு