Published:Updated:

`நிச்சயமாக.... கேள்வி எழத்தான் செய்யும்' - கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!

`நிச்சயமாக.... கேள்வி எழத்தான் செய்யும்' - கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!
`நிச்சயமாக.... கேள்வி எழத்தான் செய்யும்' - கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்து அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

photo credit: @ipl

கெளதம் கம்பீர் டெல்லி அணிக்குச் சென்ற பிறகு கொல்கத்தா அணியை வழிநடத்தி வருகிறார் தினேஷ் கார்த்திக். கடந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு அணியைக் கொண்டு சென்றவர் இந்த முறை தடுமாறி வருகிறார். தொடரின் ஆரம்பத்தில் வெற்றியுடன் தொடங்கிய அந்த அணி, தற்போது தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளால் கார்த்திக்கின் கேப்டன்சி மீது விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் தற்போது பேசியுள்ளார். அதில், ``நிச்சயமாகப் போட்டியின் முடிவுகள் நமக்குச் சாதகமாக இல்லை எனும் போது கேள்வி எழத்தான் செய்யும். இதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஒரு அணியாக நிறைய விஷயங்களைச் செய்ய முயன்று வருகிறோம். 

photo credit: @ipl

அணியின் ஒட்டுமொத்த பௌலிங்கும் இன்னும் முன்னேற வேண்டும். பேட்டிங் சிறப்பாக இருக்கிறது என நினைக்கிறேன். இந்த சரியில்லாத தன்மையில் தான் ஆட்டத்தைச் சரியாக முடிக்கமுடியவில்லை. என்னுடைய பணி அணியை முன்னின்று நடத்துவது. ஆனால் சில சமயம் நாம் நினைத்தது போல் வருவதில்லை. இது எப்போதும் கடினமான விஷயமாகவே இருக்கிறது. ஆனால் உண்மையான சூழ்நிலை என்னவென்றால் ஒரு அணியாக நாங்கள் முன்னேற உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஓய்வறையின் சூழல் ஆரோக்கியமானதாக இருக்க முயல்கிறோம். நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் அணியின் வீரர்களை நான் நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.