Published:Updated:

`தோனி இல்லாதது எங்களுக்கு கூடுதல் பலமாக இருந்தது!’- வெற்றி குறித்து ரோஹித் ஷர்மா

`தோனி இல்லாதது எங்களுக்கு கூடுதல் பலமாக இருந்தது!’- வெற்றி குறித்து ரோஹித் ஷர்மா
`தோனி இல்லாதது எங்களுக்கு கூடுதல் பலமாக இருந்தது!’- வெற்றி குறித்து ரோஹித் ஷர்மா

`சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இல்லாதது எங்களுக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்தது’ என மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரவித்துள்ளார்.


ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மும்பை இந்தியன் அணி மோதியது. நேற்றைய இந்த ஆட்டத்தில், தோனி இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக ரெய்னா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அவர், இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அணியில் தோனி இடம்பெறாததது, அவர் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

நேற்றை ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது தொடர்பாக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசுகையில், ``சி.எஸ்.கே அணியில் தோனி இல்லாதது எங்களுக்கு கூடுதல் பலமாக இருந்தது. அவர் இடம்பெற்றிருந்தால், அணிக்கு பெரும் பங்களிப்பை செலுத்தியிருப்பார். தோனி இல்லாத நிலையில், ஸ்கோரை எட்டிப்பிடிப்பது அவர்களுக்கு கடினமானதாக இருந்தது. அவரை அணியினர் நிச்சயம் மிஸ் செய்திருப்பர். என்ன செய்வது, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

நாங்கள் டாஸில் தோற்றால்கூட நல்லதுதான் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். காரணம், வழக்கம்போல, ரன்னை சேஸ் செய்துவிடலாம் எனக் கருதினேன். பேட்டிங் அல்லது பவுலிங் எதுவாக இருந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதேபோல எங்கள் அணியினர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நேற்றைய ஆட்டம் மனநிறைவான ஆட்டமாக இருந்தது. 30, 40 ரன்களை மட்டுமே எடுத்து வந்தேன். ஹாஃப் சென்சூரி அடித்ததில்லை. ஆனால் அதுகுறித்து நான் வருத்தபட்டதில்லை. காரணம் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன் என்பது எனக்குத் தெரியும். நிச்சயம் ஒருநாள் நல்ல ஸ்கோரை எடுப்பேன் என நினைத்திருந்தேன். அந்த நாளாக நேற்றைய நாள் இருந்தது” என்று தெரிவித்தார். 

தோல்வி குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, ``மோசமான ஆட்டத்தை ஆடினோம். ஒவ்வொரு 2-3 ஓவர்களிலும் விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்தோம். எங்கள் பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் கவனம் செலுத்திருக்க வேண்டும். ஆனால், எங்கள் பவுலிங் சிறப்பாக அமைந்தது. நாங்கள் 155 ரன்கள் சேஸ் செய்வது எளிதானது என நினைத்திருந்தோம். பவர் பிளேவிலே அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்” என்றார்.