Published:Updated:

`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்!‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK

`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்!‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK

`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்!‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK

`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்!‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK

`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்!‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK

Published:Updated:
`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்!‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK

ஈடன் கார்டனில் நேற்று (#KKRvCSK), தோனி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தபோதே சி.எஸ்.கே-வின் வெற்றி உறுதியாகி விட்டது. ஏனெனில், சேஸிங்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ரெக்கார்டு அப்படி. கொல்கத்தாவின் முதல் பலவீனமே, அவர்களது ஃபர்ஸ்ட் பேட்டிங்தான். எதிர்பார்த்தது போலவே 161 ரன்களில் சுருட்டி, அதைக் கடைசி ஓவரில் சேஸ் செய்து, கொல்கத்தாவின் 100-வது வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது சி.எஸ்.கே.

காய்ச்சல் காரணமாக முந்தைய போட்டியில் விளையாடாத கிறிஸ் லின், சுனில் நரைனுடன் ஓப்பனிங் இறங்கினார். பவர்பிளே ஓவர்களில் ஸ்பின்னர்களை வெளுத்துவிடுவது சுனில் நரைன் இயல்பு. இந்த பாச்சா சி.எஸ்.கே-விடம் பலிக்கவில்லை. பவர்பிளேவில் பெரும்பாலான பந்துகளை கிறிஸ் லின் எதிர்கொண்டார். அதனால், நரைன் 4 ஓவர்களில் 3 பந்துகளை சந்தித்து, அதில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். ஐந்தாவது ஓவரை வீச வந்தார் சான்ட்னர். இதுதான் தனக்கான நேரம் என்பதைப் புரிந்து, ஃபுல் லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் விழுந்து ஸ்பின் ஆன முதல் பந்தையே, லாங் ஆன் பக்கமாக ஓங்கினார் நரைன். கணிப்பு தப்பிவிட்டது. ஆனால், தனக்கு லாங் ஆன், டீப் மிட் விக்கெட்டில் இரண்டு ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டிருப்பதை அவர் கணிக்கவில்லை. அதிலும், லாங் ஆனில் இருந்த டு ப்ளெஸ்ஸி படு உஷாராக இருந்தார். எதிர்பார்த்தது போலவே, அடுத்த ஃபுல் லென்த் டெலிவரியை லாங் ஆன் பக்கம் சிக்ஸர் அடிக்க நினைத்து, டுப்ளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து நரைன் நடையைக் கட்டினார்.

கொல்கத்தாவின் ஸ்கோரில் பாதியை அடித்திருந்த கிறிஸ் லின் (82), ஆரம்பத்தில் இருந்தே ஒரு மார்க்கமாக இருந்தார். பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் கில்லியான தீபக் சாஹர் ஓவரில் வெளுத்து விட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்கு, சேப்பாக்கத்தில் கடந்த வாரம் நடந்த போட்டியில் தீபக் சாஹர் பந்தில் எல்பிடபுள்யு ஆனதும் காரணமாக இருக்கலாம். அதனால்தான் நேற்று, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பவர்பிளேவில் சாஹர் வீசிய இரண்டு ஓவர்களிலும் குறி வைத்து வெளுத்தார் லின். பவர்பிளே என்றில்லை, பவர்பிளே முடிந்தபின்பும் ரன்ரேட் 8-க்கு குறையாமல் பார்த்துக் கொண்டார். சான்ட்னர் பந்தில் டவுன் தி லைன் வந்து சிக்ஸர் பறக்கவிட்டார். இம்ரான் தாஹிர் ஓவரில் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசித்தார்.

ஆனால், இதுதான் சான்ஸ் என ஜடேஜாவின் கடைசி ஓவரை பிரித்து மேய்ந்தார். முதல் பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸர். லைன் அண்டு லென்த்தை மாற்றாத அடுத்த பந்தை டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸர். மூன்றாவது பந்தில் லாங் ஆன் பக்கம் சிக்ஸர் என விரட்டி விரட்டி வெளுத்தார் லின். போதாக்குறைக்கு கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடிக்க, 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 49 ரன்கள் கொடுத்து தன் ஸ்பெல்லை முடித்தார் ஜடேஜா.

கிறிஸ் லின்னை பவுண்டரி அடிக்க விடாத ஒரே பெளலர் இம்ரான் தாஹிர் மட்டுமே. கிறிஸ் லின் மட்டுமல்ல, நித்திஷ் ராணா, ராபின் உத்தப்பா மற்றும் `மஸில் பவர்’ ரஸல் எனக் கொல்கத்தாவின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி கதி கலங்க வைத்தார் தாஹிர். தவிர, `ஈடன் கார்டன் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்காது என்று யார் சொன்னது’ என ஸ்கிரிப்டையும் மாற்றி எழுதினார். இந்தப் போட்டிக்கு முன்புவரை ஈடன் கார்டனில் ஸ்பின்னர்கள் ஒரு ஓவருக்கு 9.23 ரன்கள் விட்டுக்கொடுத்து, 70 ரன்களுக்கு ஒரு விக்கெட்டு மட்டுமே எடுத்திருந்தனர். அதை தாஹிர் மாற்றி எழுதினார். Flight, Turn, leg break என வெரைட்டியில் மிரட்டினார். கடைசியில், 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்கும் முக்கியமான விக்கெட்டுகள்.

முதல் ஓவரில் ரன்களைக் கட்டுப்படுத்திய தாஹிர், தன் இரண்டாவது ஓவரில் நித்திஷ் ராணா, உத்தப்பா இருவரையும் லெக் பிரேக்கில் காலி செய்தார். நித்திஷ் ராணா லெக் பிரேக்கில் ஏமாந்து விக்கெட்டைப் பறிகொடுத்ததைப் பார்த்தும், அதில் இருந்து பாடம் கற்காமல் முதல் பந்திலேயே அடித்து ஆட நினைத்து விக்கெட்டை இழந்தார் ராபின் உத்தப்பா. அடுத்த ஓவரில் செம ஃபார்மில் இருந்த கிறிஸ் லின், ரஸல் இருவரையும் பெவிலியன் அனுப்பி வைத்தார் இம்ரான். அதிலும் ரஸல் விக்கெட்டை சொல்லி வைத்து எடுத்ததுபோல இருந்தது.

செட்டிலாக ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது, முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்ற மூடில் இருந்தார் ரஸல். அவர் போக்கிலேயே அவரை அடிக்க விட்டு தூக்கினார் தாஹிர். முதல் பந்தையே ரஸல் பவுண்டரி அடிக்க, `This is DreRuss time’ என உற்சாகமானார்கள் கொல்கத்தா ரசிகர்கள். அதற்கேற்ப லாங் ஆன் பக்கம் இன்னொரு சிக்ஸர் பறக்கவிட்டார். ஹைடெசிபிலில் எகிறியது சத்தம். இனி எத்தனை சிக்ஸர் பறக்கப் போகுதோ என எதிர்பார்த்திருக்க, ஷார்ட் லென்த்தில் விழுந்த பந்தை சிக்ஸருக்கு அடிக்கிறேன் என இழுக்க, அது டைமிங் மிஸ்ஸாக, சப்ஸ்டிட்யூட் பிளேயர் துருவ் ஷோரே அட்டகாசமாக டைவ் அடித்து கேட்ச் பிடிக்க, ரஸல் அவுட்டானதை பவுண்டரி லைனுக்கே சென்று ரசிகர்களுடன் கொண்டாடித் தீர்த்தார் இம்ரான். அவர் வயது 40. 

டெத் ஓவர்களில் சிக்ஸர்கள் பறக்கவிடும் (ஸ்ட்ரைக் ரேட் 212.71) பேட்டிங் யுனிட்டை வைத்திருக்கிறது கொல்கத்தா. குறிப்பாக, ரஸல். இந்த சீசனில் கடைசி நான்கு ஓவர்களில் 29 சிக்ஸர்கள் அடித்துள்ளது கே.கே.ஆர். அதில், 21 சிக்ஸர்கள் ரஸல் அடித்தவை. இந்த ரெக்கார்டு எதுவும் சிஎஸ்கேவிடம் எடுபடவில்லை. நேற்று கடைசி 24 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 15-வது ஓவரிலேயே பவர் ஹிட்டர்கள் அவுட்டான பின், டெத் ஓவர்களில் எப்படி சிக்ஸர்கள் எதிர்பார்க்க முடியும். (இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ரஸல் கடைசி வரை களத்தில் இருந்தும் ரன் எகிறவில்லை என்பது வேறு கதை.) தாஹிர் வலையில் ரஸல் விழுந்தபோதே கொல்கத்தா தோற்றுவிட்டது.

சுரேஷ் ரெய்னா ஏன் சிஎஸ்கே-வின் செல்லப்பிள்ளை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். சந்தித்த இரண்டாவது பந்திலேயே கண்டம் தப்பினார் ரெய்னா. கர்னே வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில்தான் வாட்சன் எல்பிடயுள் முறையில் அவுட்டாகி இருந்தார். ரெய்னாவும் அதேபோல அவுட்டாகிவிடுவாரோ என சிஎஸ்கே ரசிகர்கள் பதறினர். ரெய்னா உடனடியாக ரிவ்யூ கேட்டார். முடிவில் அது இன்சைட் எட்ஜ் எனத் தெரியவந்தது. அதன்பின் சுதாரித்த ரெய்னா, கடைசி வரை களத்திலிருந்து, ஐபிஎல்-ல் 36-வது அரைசதம் அடித்து, அணியை வெற்றிபெறச் செய்தார். `தோனி அவுட்டானதுமே இருந்து மேட்ச்சை முடித்துவிட்டுப் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்’ என போட்டி முடிந்தபின் பேட்டியளித்தார் ரெய்னா. அவருக்குப் பக்கபலமாக இருந்தார் ஜட்டு. 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற அதே பார்முலா. அதே டென்ஷன். ஆனால், கர்னே பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து, இரண்டு பந்து மீதமிருந்தபோதே மேட்ச்சை முடித்து வைத்தார் ஜடேஜா. 

ரஸல் ஓவரில் நான்கு பவுண்டரி அடித்ததைவிட, உத்தப்பா அடித்த பந்தை லாங் ஆஃபில் இருந்து ஓடி வந்து டைவிங் கேட்ச் பிடித்தபோதுதான் டுப்ளெஸ்ஸி பிரமிக்க வைத்தார். அவர் மட்டுமல்ல, சப்ஸ்ட்டியூட் பிளேயர் துருவ், ஷர்துல் தாக்கூர் பிடித்த கேட்ச்களும் செம. கிட்டத்தட்ட, பெளலிங், ஃபீல்டிங், பேட்டிங் என சி.எஸ்.கே எல்லா பாக்ஸையும் டிக் செய்துவிட்டது. ஈடன் கார்டனில் மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கி ஜெயிக்க முடியும் எனவும் நிரூபித்துவிட்டது. இது அவர்களுக்கு மற்றுமொரு வெற்றி.  ஆனால், இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் பல பலவீனங்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது கே.கே.ஆர். சுப்மான் கில்லை டாப் ஆர்டரில் இறக்குவது குறித்து பரிசீலிப்பது; பியூஷ் சாவ்லா, சுனில் நரைன், குல்தீப் ஆகிய ஸ்பின்னர்களை எதிரணி எளிதில் கணித்து விடுவது; முதல் பேட் செய்தால் டெத் ஓவர்களில் ரன் அடிக்கத் திணறுவது என பல விஷயங்களில் அந்த அணி மறுபரிசீலனை செய்ய வேண்டும். டிகே சுதாரிக்க வேண்டிய நேரமிது!