Published:Updated:

வில்லியம்சன் ரிட்டர்ன்; 4 மாற்றங்களுடன் டெல்லி! - ஃபீல்டிங் தேர்வு செய்த ஹைதராபாத் #SRHvDC

வில்லியம்சன் ரிட்டர்ன்; 4 மாற்றங்களுடன் டெல்லி! - ஃபீல்டிங் தேர்வு செய்த ஹைதராபாத் #SRHvDC
வில்லியம்சன் ரிட்டர்ன்; 4 மாற்றங்களுடன் டெல்லி! - ஃபீல்டிங் தேர்வு செய்த ஹைதராபாத் #SRHvDC

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

ஹைதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்குத் திரும்பியிருக்கிறார். முகமது நபிக்குப் பதிலாக அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருக்கிறார்.

அதேபோல், சித்தார்த் கவுல், மணீஷ் பாண்டே மற்றும் யூசப் பதான் ஆகியோருக்குப் பதிலாக அபிஷேக் ஷர்மா, ரிக்கி பியூ மற்றும் கலீல் அகமது ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுகின்றனர். டெல்லி அணியில்  காலின் இங்ரம் மற்றும் டீவாட்டியா ஆகியோருக்குப் பதிலாக காலின் முன்ரோ மற்றும் அமித் மிஷ்ரா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருக்கின்றனர். 

டெல்லி அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் அந்த அணி வென்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6வது இடத்தைப் புள்ளிப்பட்டியலில் பிடித்திருக்கிறது. சென்னை அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா அணி தோற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.