Published:Updated:

கொல்கத்தா சறுக்கிய கடைசி 4 ஓவர்கள்; தாஹிரின் மேஜிக்கல் 4! - சி.எஸ்.கேவுக்கு 162 ரன்கள் இலக்கு #KKRvCSK

கொல்கத்தா சறுக்கிய கடைசி 4 ஓவர்கள்; தாஹிரின் மேஜிக்கல் 4! - சி.எஸ்.கேவுக்கு 162 ரன்கள் இலக்கு #KKRvCSK
கொல்கத்தா சறுக்கிய கடைசி 4 ஓவர்கள்; தாஹிரின் மேஜிக்கல் 4! - சி.எஸ்.கேவுக்கு 162 ரன்கள் இலக்கு #KKRvCSK

ஐ.பி.எல் 2019 தொடரின் 29 -வது போட்டியின் கொல்கத்தா அணியுடன் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மீண்டும் அணிக்குத் திரும்பிய லின் மற்றும் நரைன் ஆகியோர் களமிறங்கினர். லின் தொடக்கம் முதலே அதிரடி காட்ட, எப்போதும் அதிரடி காட்டும் நரைன் 2 ரன்னில் சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய ராணா, 21 ரன்னில் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உத்தப்பா முதல் பந்திலே டக் அவுட் ஆனார். 

ஆனால் மறுபுறம் லின் தனது அதிரடியைத் தொடர்ந்தார். அரைசதம் அடித்த லின், டாப் கியருக்கு மாறினார். ஜடேஜாவின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டு கொல்கத்தா ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 51 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தவர் தாஹிர் சுழலில் சிக்கினார். அடுத்துக் களமிறங்கிய ரஸல், வந்ததும் பவுண்டரியும் சிக்சரும் பறக்கவிட்டார். ஆனால் அதே ஓவரில் தாஹிரின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தாஹிர் குஷியில் பவுண்டரிக்கே சென்றுவிட்டார். 

அதன் பின்னர் நிதானமாக ஆடி வந்த தினேஷ் கார்த்திக் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய கொல்கத்தா அணி, கடைசி 4 ஓவர்களில் சறுக்கியது. கடைசி 4 ஓவர்களில் அந்த அணி வெறும் 19 ரன்களே எடுத்தது.  சென்னை அணித் தரப்பில் அபாரமாக விளையாடிய தாஹிர் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். சென்னை அணியின் டூப்பெளஸ்ஸிஸ் இந்தப் போட்டியில் 4 கேட்சுகள் பிடித்தார்.  சென்னை அணிக்கு வெற்றிபெற 162 ரன்கள் தேவை.