Published:Updated:

``100வது 50 ப்ளஸ்; 99 நாட்-அவுட்” -யூனிவர்சல் பாஸ் கெயிலுக்கு எல்லாமே சாதனைதான்!

``100வது 50 ப்ளஸ்; 99 நாட்-அவுட்” -யூனிவர்சல் பாஸ் கெயிலுக்கு எல்லாமே சாதனைதான்!
``100வது 50 ப்ளஸ்; 99 நாட்-அவுட்” -யூனிவர்சல் பாஸ் கெயிலுக்கு எல்லாமே சாதனைதான்!

வெற்றியோ, தோல்வியோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் எப்போதும் அதிரடியான பாணியில் ஆடுவதே கெய்ல் ஸ்டைல். டி-20 கிரிக்கெட் பொறுத்தவரையில் கெய்ல் வைத்திருக்கும் ரெக்கார்டுகள் எல்லாம் வேற லெவல். மொஹாலியில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்தப்போட்டியில் உமேஷ் யாதவின் முதல் ஓவரில் கெய்ல் அவுட்டாகி வெளியேற வேண்டியது. அம்பயரின் கருணையால் அந்த கண்டத்தில் இருந்து தப்பினார். உமேஷ் யாதவ் முதல் ஓவரின் 5வது பந்தில் எல்.பி.டபிள்யூ அப்பில் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். பெங்களூரு அணி இதனை எதிர்த்து அப்பீல் செய்யவில்லை. அதன்பின்னர் காட்டப்பட்ட ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை தாக்கியது தெரியவந்தது.

விக்கெட் கண்டத்தில் இருந்து தப்பிய கெய்ல் பெங்களூரு அணிக்கு வாய்ப்புகளை வழங்கவில்லை. இந்தப்போட்டியில் பஞ்சாப் அணி தோற்றிருந்தாலும் கெய்ல் அடித்த 99 ரன்கள் ரெக்கார்டில் இடம்பிடித்தது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக 99 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காத வீரர் என்ற சிறப்பை கெய்ல் பெற்றார். மேலும் டி-20 கிரிக்கெட்டில் 100 முறைகளுக்கு 50க்கும் அதிகமான ரன்களை எடுத்த வீரர் என்ற ரெக்கார்டையும் பதிவு செய்தார் யுனிவர்சல் பாஸ். இதுவரை 370 டி20 கிரிக்கெட் போடியில் விளையாடியுள்ள  அவர் 21 சதங்களை விளாசியுள்ளார். மேலும் 79 அரைசதங்களையும் அடித்துள்ளார். டி-20 கிரிக்கெட்டில் மட்டும் இதுவரையில் 12,640 ரன்களை குவித்துள்ளார்.