Published:Updated:

`வெற்றியைவிட இது ரொம்ப முக்கியம் பாஸ்!’- தோனியின் சக்சஸ் ஃபார்முலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`வெற்றியைவிட இது ரொம்ப முக்கியம் பாஸ்!’- தோனியின் சக்சஸ் ஃபார்முலா
`வெற்றியைவிட இது ரொம்ப முக்கியம் பாஸ்!’- தோனியின் சக்சஸ் ஃபார்முலா

`வெற்றியைவிட இது ரொம்ப முக்கியம் பாஸ்!’- தோனியின் சக்சஸ் ஃபார்முலா

Photo Credits: IPLT20.COM

`நாங்க வந்தது வேணும்னா ஜெய்ப்பூரா இருக்கலாம், ஆனா அங்கேயும் ஐபிஎல் போட்டியில் எங்களோட தர்பார்’ இது நம்ம சென்னைக்குப் புதிதாகக் கிடைத்த புலவர் ஹர்பஜன் சிங் ட்வீட். சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் கே.கே.ஆர். அணியை துவம்சம் செய்த அதே உற்சாகத்தோடு ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சி.எஸ்.கே. இந்த வெற்றிக்குதான் ஹர்பஜன் இப்படி ட்வீட் செய்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்துவீச முடிவு செய்தார். சென்னையோட பௌலிங் அட்டாக் நேற்றும் சிறப்பாகவே இருந்தது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. 

சென்னைக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரிலே ரன் கணக்கைத் தொடங்காமல் வாட்சன் அவுட்டானார். 2 -வது ஓவரில் ரெய்னா தேவையில்லாத ரன்அவுட். தோனி - ராயுடு இருவரின் அட்டகாசமான ஆட்டத்தால் வெற்றியை நோக்கிப் பயணமானது சி.எஸ்.கே. பரபரப்பான கடைசி ஓவரில் ஜடேஜா முதல் பந்தில் சிக்ஸர்.. தோனி 3வது பந்தில் அவுட்.. 5-வது பந்தில் நோபால் சர்ச்சை... கடைசி பந்தில் சாண்ட்னர் சிக்ஸர் விளாச சென்னை அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தை தக்கவைத்துக்குக் கொண்டது. இந்தப்போட்டியில் ஜடேஜா ஐபிஎல் போட்டியில் 100வது விக்கெட்டை எடுத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி தலைமையில் இது நூறாவது வெற்றியாகும்.

Photo Credits: IPLT20.COM

போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் தோனி, ``இது ஒரு அற்புதமான ஆட்டம். ராஜஸ்தான் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்த ஆடுகளத்தைப் பொறுத்தவரையில் இது கொஞ்சம் குறைவான ஸ்கோர்தான். ஆனாலும் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். போட்டி தொடக்கத்திலிருந்து இறுதிவரை வெற்றிக்காகக் கடுமையாகப் போராடினர். இதுபோன்ற ஒரு வெற்றி உங்களுக்கு நிறைய பாடங்களை கற்பிக்கும். வெற்றியைக் கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

Photo Credits: IPLT20.COM

இதுமிகப்பெரிய மைதானம். தனி நபர்கள் தவறு செய்கிறார்கள். ஆனால் தோல்வியடைந்துவிட்டால் ஒட்டுமொத்த பழியும் அணியின் மீது தான் விழும். இந்த மைதானத்தில் எங்களுக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது அவர்களுக்கு நன்றி. நான் மிகப்பெரிய இன்னிங்ஸை இங்கு விளையாடியுள்ளேன். எல்லா போட்டிகளும் பெரிய போட்டிகள்தான்” என்றார்.

‘போடா நம்மல படைத்த அந்த ஆண்டவனே நம்ம பக்கம்தான். எடுடா வண்டிய போடுடா விசில..’ பஞ்ச் வசனங்களைப் பேசும் இம்ரான் தாஹிர் ட்விட்டர் பதிவு இது.


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு