Published:Updated:

பொல்லார்ட் தலைமையில் களமிறங்கும் மும்பை! - பஞ்சாப் பேட்டிங் #MIvKXIP

பொல்லார்ட் தலைமையில் களமிறங்கும் மும்பை! - பஞ்சாப் பேட்டிங் #MIvKXIP
பொல்லார்ட் தலைமையில் களமிறங்கும் மும்பை! - பஞ்சாப் பேட்டிங் #MIvKXIP

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

நேற்றைய பயிற்சியின்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இன்றைய போட்டியில் அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக பொல்லார்ட் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். பயிற்சியின்போது ரோஹித் ஷர்மாவுக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அந்த காயத்தில் இருந்து அவர் மீண்டு வருவதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அணி தெரிவித்திருக்கிறது. 

மும்பை அணியில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் சித்தேஷ் லாட் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருக்கிறார். அதேபோல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கடந்த போட்டியில் காயமடைந்த மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக கருண் நாயரும் முஜிபுர் ரஹ்மானுக்குப் பதிலாக ஹார்டுஸ் வில்ஜியோனும் களமிறங்குகின்றனர்.