Published:Updated:

`ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத 8 பேர்; தனியொருவனாய்ப் போராடிய ரஸல்!' - சி.எஸ்.கே-வுக்கு 109 ரன்கள் இலக்கு #CSKvKKR

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது.

`ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத 8 பேர்; தனியொருவனாய்ப் போராடிய ரஸல்!' - சி.எஸ்.கே-வுக்கு 109 ரன்கள் இலக்கு #CSKvKKR

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ், கேப்டன் தோனி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். அதன்படி, கொல்கத்தா அணிக்கு க்ரிஷ் லின் மற்றும் சுனில் நரேன் இணை துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை வீசிய தீபக் சஹார், லினை எல்பிடபுள்யூ  முறையில் அவுட்டாக்கி வெளியேற்றினார். அடுத்ததாகக் களமிறங்கிய உத்தப்பா, நரேனுடன் கைகோத்தார்.

`ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத 8 பேர்; தனியொருவனாய்ப் போராடிய ரஸல்!' - சி.எஸ்.கே-வுக்கு 109 ரன்கள் இலக்கு #CSKvKKR

அடுத்த ஓவரில்  ஹர்பஜன்சிங் பந்தை நரேன் தூக்கி அடிக்க, அது தீபக் சஹார் கைக்குள் ஐக்கியமானது. 2 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்களைச் சேர்த்திருந்தது கொல்கத்தா. அடுத்ததாக மைதானத்துக்கு வந்த நித்திஷ் ரானா ஃபேஸ் செய்த 3 பந்துகளிலே அவுட்டானார். உத்தப்பாவும் கூடவே நடையைக்கட்ட, பவர் ப்ளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. இம்ரான் தாஹிர், தினேஷ்கார்த்திக்கை பெவிலியனுக்கு அனுப்ப, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் களத்துக்கு வந்தார். மறுமுனையில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் ஸ்டம்பிக் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாகக் கைகோத்த சாவ்லா- ரஸல் இணை, விக்கெட்டுகள் சரிவால் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தனர். 12 ஓவரில் ரஸல் கொடுத்த கேட்சை ஹர்பஜன் மிஸ் செய்தது, ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 15 ஓவரில் சாவ்லாவும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த குல்தீப் முதல் பந்திலே ரன்அவுட்டாக, 76 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கொல்கத்தா. ரஸல் மட்டும் மறுமுனையில் நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 44 பந்துகளில் 50 ரன்களைச் சேர்ந்து, அணியின் ஸ்கோர் அதிகரிக்கக் காரணமாக இருந்தார். சென்னை தரப்பில் சஹார் 3 விக்கெட்டையும், ஹர்பஜன் சிங், தாஹிர் தலா 2 விக்கெட்டையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.