Published:Updated:

16-வது ஓவரில் முதல் சிக்ஸ்... மிடில் ஆர்டருக்கு என்னதான் ஆச்சு... ஹைதராபாத் தோல்வி ஏன்?! #KXIPvSRH

கார்த்தி
16-வது ஓவரில் முதல் சிக்ஸ்... மிடில் ஆர்டருக்கு என்னதான் ஆச்சு... ஹைதராபாத் தோல்வி ஏன்?! #KXIPvSRH
16-வது ஓவரில் முதல் சிக்ஸ்... மிடில் ஆர்டருக்கு என்னதான் ஆச்சு... ஹைதராபாத் தோல்வி ஏன்?! #KXIPvSRH

ஹைதராபாத் அணி தன் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து நிற்கிறது. பெங்களூரு அணி ஆறு போட்டிகள் தோற்றபின் இருக்கும் பீதியைவிட, மிடில் ஆர்டரை எண்ணி பீதியில் இருக்கிறது ஹைதராபாத். `ஃபெயில் ஆகுற பையன் ஜாலியா இருப்பான், 70 மார்க் வாங்குறவன்தான் அழுதுட்டு இருப்பான்’ என்னும் பழமொழியை உணர்த்துகிறது இந்த இரண்டு அண்டை மாநில அணிகளும்...

மேற்கு இந்தியத் தீவு வீரர்கள்தாம் பெரும்பாலும் இந்த ஐ.பி.எல்-ல் சாதித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக 40+ ரன்கள் அடிக்கும் ரஸல், முதல் போட்டியிலேயே ஆறு விக்கெட் வீழ்த்தும் அல்சாரி ஜோசப் என இந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்துவது கரீபிய தீவுகள்தாம். அதேபோல், நேற்று நடந்த ஐபிஎல் போட்டி ஆப்கான் வீரர்களுக்கானது. ஒருபக்கம் முஜிபுர் ரஹ்மான், இன்னொரு பக்கம் ரஷித் கான், நபி. மூவருமே ஐ.பி.எல்-ன் சிறந்த பெளலர்கள். இந்த சீசனின் ஸ்பெஷல் சர்ச்சை அஷ்வின் மேன்கட் செய்ததுதான். ஆனால், நேற்றைய போட்டியில் சிறப்பானதொரு ரன் அவுட்டைச் செய்தார். கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் பஞ்சாப், ஹைதராபாத் மோதிய போட்டியில் கெயில் அதிரடியாக 63 பந்துகளில் 104 ரன்கள் வெளுத்து, `லாலி லாலோ' என பேட்டை வைத்து தாலாட்டு பாடிய வீடியோ எல்லாம் நினைவுக்கு வந்தது.

16-வது ஓவரில் முதல் சிக்ஸ்... மிடில் ஆர்டருக்கு என்னதான் ஆச்சு... ஹைதராபாத் தோல்வி ஏன்?! #KXIPvSRH


இந்த சீசனில் பல போட்டிகள் `லோ ஸ்கோரிங்’ போட்டிகளாகவே இருந்து வருகின்றன. கிரிக்கெட் என்பது பாலுக்கும், பேட்டுக்கும் போட்டி என்பதெல்லாம் காலாவதியாகி, அதுவொரு பேட்ஸ்மேன்களின் கேமாகி பல ஆண்டுகளாகிவிட்டது. ஆனால், சமீபத்திய போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மை பேட்டிங் செய்வதற்கு அவ்வளவு சாதகமாக இருப்பதில்லை. கோலி, வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஸ்டார் பேட்ஸ்மேன்களே ரன்கள் அடிக்க சிரமப்படுகின்றனர். டியூ ஃபேக்டர் கொடூரத்துக்கு இருக்கிறது. நேற்றைய போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல.

 பஞ்சாப் இந்த சீசனில் அதன் சொந்த மைதானத்தில் தோற்றதில்லை என்பதால், டாஸ் வென்ற அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் அங்கித் ராஜ்புட், முஜிபுர் ரஹ்மான் இருவரும் வாய்ப்புப் பெற்றனர். மிடில் ஆர்டரில் யானை புகும் அளவுக்கு ஓட்டை வைத்திருக்கும் ஹைதராபாத் அதே ப்ளேயிங் லெவனுடன் களமிறங்கியது. கேன் வில்லியம்சன் எப்போது Perfectly Alright என்பதை காலம்தான் பதில் சொல்லும் போல!

16-வது ஓவரில் முதல் சிக்ஸ்... மிடில் ஆர்டருக்கு என்னதான் ஆச்சு... ஹைதராபாத் தோல்வி ஏன்?! #KXIPvSRH


முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக 100 ரன்கள் அடித்து அசத்திய வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி மீது யார் கண் பட்டதோ... அடுத்தடுத்த போட்டிகளில் ரன்ரேட் அப்படியே குறைந்துவிட்டது. நேற்றும் சோகமே மிஞ்சியது. முஜிபிர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோ தன் விக்கெட்டை இழந்தார். `ராகுல் காந்தி தமிழகத்தில் பேசும்போது, வார்த்தைகளை கேட்ச் செய்யக் காத்திருந்த தங்கபாலு’ போல, அஷ்வின் ரெடியாக ஷார்ட் மிட் விக்கெட்டில் கைகளை வைத்திருக்க, `பால்... கேட்ச்...' என ஆறு பந்துகள் பிடித்து ஒரு ரன்னுக்கு அவுட்டானார் பேர்ஸ்டோ.

வார்னருடன் ஒன் டவுனில் ஜோடி சேர்ந்த விஜய் ஷங்கர் பெரிதாக ஒன்றும் பண்ணவில்லை. வார்னரே தவழ்ந்துகொண்டிருக்கும்போது, விஜய் ஷங்கர் மட்டும் தாவவா முடியும்? பவர் ப்ளே முடிவில் 27 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத். விஜய் ஷங்கரும் 26 (27b 2x4 0x6 SR: 96.29) ஸ்டம்பிங் முறையில் வெளியேற, முகமது நபியை முன்னராக அனுப்பினார் கேப்டன் புவி. ஆனாலும், எந்தவொரு புண்ணியமும் இல்லை. 

16-வது ஓவரில் முதல் சிக்ஸ்... மிடில் ஆர்டருக்கு என்னதான் ஆச்சு... ஹைதராபாத் தோல்வி ஏன்?! #KXIPvSRH


அஷ்வினின் `மேன்கட்’ சர்ச்சைக்குப் பின் சில பேட்ஸ்மேன்கள் மிகவும் உஷாராக இருக்கின்றனர். ட்விட்டரில் @PeterDellaPenna என்பவர் முஜிபுர் ரஹ்மான் பௌலிங் செய்யும்போது, வார்னர் `நான் ஸ்ட்ரைக்கர்’ எண்டில் நிற்கும் போஸையும், அஷ்வின் பெளலிங் செய்யும்போது `நான் ஸ்ட்ரைக்கர்’ எண்டில் நிற்கும் போஸையும் பதிவு செய்திருந்தார். `பயோம் அஷ்வின்னா பயோம்!’ அஷ்வின் வீசிய பந்தை மீண்டும் அஷ்வின் பக்கமே அடித்தார் வார்னர். அதைவைத்து மிகவும் லாகவமாக க்ரீஸை விட்டு வெளியே நிற்கும் நபியை ரன் அவுட் செய்தார் அஷ்வின். 

ஆட்டத்தின் 16-வது ஓவரில்தான் முதல் சிக்ஸ் அடிக்கப்பட்டது என்பதெல்லாம் டி - 20 போட்டிக்கு எவ்வளவு பெரிய கேவலம்! ஆனால், முந்தைய போட்டிகளில் நடைபெற்ற மிடில் ஆர்டர் சொதப்பல்களால் கொடூரமாக அடக்கி வாசித்தது ஹைதராபாத். இன்னிங்ஸின் கடைசி மூன்று பந்துகளில் தீபக் ஹூடா இரண்டு பௌண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, ஸ்கோர் 151 ரன்களை எட்டியது. வார்னர் 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

`வழக்கம்போல ராகுல் அவுட் ஆகிவிடுவார்; பேர்ஸ்டோ ரன் வெளுப்பார்’ என நம்பி ட்ரீம் 11-ல் பைசா காட்டிய பலருக்கு நேற்று துக்க தினம். பேர்ஸ்டோ சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாக, ராகுல் இறுதி வரை இருந்து போட்டியை முடித்துக்கொடுத்தார். அதிலும், கடைசி ஓவரில் பதற்றப்படாமல் லாங் ஆஃபில் பௌண்டரி அடித்தார். அழகாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தார்.  `ஏப்ரல் 15-ம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்’ என அறிவிப்பு வெளியான நிலையில், ராகுல் ஆடிய இந்த இன்னிங்ஸ் ரொம்பவே கவனிக்கத்தக்கது. ராகுலின் இந்த ஆட்டத்தைப் பார்த்து, `இந்திய அணியின் நம்பர் -4’ இடத்துக்கு ராகுலை புக் செய்து விட்டார்கள் நெட்டிசன்கள்.

16-வது ஓவரில் முதல் சிக்ஸ்... மிடில் ஆர்டருக்கு என்னதான் ஆச்சு... ஹைதராபாத் தோல்வி ஏன்?! #KXIPvSRH


புவி, சந்தீப், நபி, கௌல், ரஷித் மட்டும்தான் பந்துவீசுவார்கள் என்னும் லாஜிக்படியே ஒருவர் பின் ஒருவராக வந்து பந்து வீசிக்கொண்டிருந்தனர். கெயில் ஒரு பௌண்டரி, சிக்ஸ் அடித்துவிட்டு, ரஷித் கானின் பந்துவீச்சுக்கு ரெடியாக இருந்தார். 2018-ம் ஆண்டு நடந்த போட்டியில் ரஷித் கான் வீசிய 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார் கெயில். கெயிலின் அன்றைய ஸ்கோர் 104* (5x0 4x1 1x2 6x6 ). அன்று ரஷித் வீசிய முதல் பந்திலேயே அவுட் ஆகியிருக்க வேண்டியவர், சஹாவின் டிராப் கேட்ச்சால் சதம் அடிப்பார். வரலாறு அப்படியே மீண்டும் திரும்பியது. ரஷித் கான் வீசிய முதல் பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸுக்கு அனுப்பினார் கெயில். ஆனால், தீபக் ஹூடாவின் அபாரமான கேட்ச்சால் அவுட்டானார்.

கடந்த சீசன்களில் எல்லாம் ஹைதராபாத்தின் பந்துவீச்சுதான் அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருக்கும். 150 அடித்துவிட்டால், ஹைதராபாத்தை சேஸ் செய்வது கடினம். இந்தமுறையும் அதே பெளலிங் லைன் அப்தான். ராகுலையோ, ஒன் டவுனில் வந்த மயாங்க் அகர்வாலையோ அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மிகவும் சுலபமாக வென்றுவிடும் என்கிற நிலையில், பஞ்சாபும் ஐ.பி.எல் சுவாரஸ்யத்து ஏற்ப அடுத்தடுத்து மயாங்க், மில்லர், மந்தீப் சிங்கின் விக்கெட்டுகளை இழந்தது. `இது ஒரு போட்டியா’ எனக் கலைந்தகூட்டம் மீண்டும் ஹாட் ஸ்டாரில் தஞ்சம் புகுந்தது. 3.5 மில்லியன் பார்வையாளர்கள் சில நிமிடங்களில் 4.5 மில்லியனைத் தொட்டது. `இதற்காகத்தானே காத்திருக்கிறேன் நிக்ஸா’ என்பது போல் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை. குட்டி பையன் சாம் குர்ரானும், ராகுலும் இருக்கிறார்கள். சுலபமாக வென்றிருக்க வேண்டிய போட்டியை (இரண்டு விக்கெட்டுக்கு முதல் இன்னிங்ஸில் அஷ்வின் அவுட் கேட்கவில்லை) கடைசி ஓவர் வரை இழுத்தது பஞ்சாப். அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்!

16-வது ஓவரில் முதல் சிக்ஸ்... மிடில் ஆர்டருக்கு என்னதான் ஆச்சு... ஹைதராபாத் தோல்வி ஏன்?! #KXIPvSRH


இறுதியாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது. ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் அடித்து வெற்றிக்காக பெரிதும் பாடுபட்ட ராகுல் ஆட்டநாயகான தேர்வு செய்யப்பட்டார். ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் பஞ்சாப் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஹைதராபாத் அணி முற்றிலுமாக மிடில் ஆர்டர் பயத்தில் இருக்கிறது. வார்னர் எந்தவித அதிரடியும் காட்டாமல், அமைதி காப்பதற்கு அது பெரும் காரணம். தீபக் ஹூடா பரவாயில்லை... பேட்டைச் சுழற்றி சில ரன்களும், சில சூப்பர் கேட்ச்களும் பிடிக்கிறார். யூசப் பதான் பௌலிங்கும் போடவில்லை. பேட்டிங்கும் ஹும்ம்ம், எளிதான ஒரு கேட்ச்சையும் கோட்டைவிட்டார்.

ஆர்ஞ்சு கேப் : டேவிட் வார்னர் 349 ரன்கள்

அதிக டாட் பால்கள் : ரஷித் கான் 65 டாட் பால்  6 இன்னிங்ஸ்