Published:Updated:

ரஸலை நம்பி சேஸிங்கில் களமிறங்கும் கொல்கத்தா! - ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் பேட்டிங் #RRvKKR

ரஸலை நம்பி சேஸிங்கில் களமிறங்கும் கொல்கத்தா! - ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் பேட்டிங் #RRvKKR
ரஸலை நம்பி சேஸிங்கில் களமிறங்கும் கொல்கத்தா! - ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் பேட்டிங் #RRvKKR

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பெர்குசனுக்குப் பதிலாக ஹேரி கர்னி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்டூவர்ட் பின்னி மற்றும் வருண் ஆரோன் ஆகியோருக்குப் பதிலாக பிரசாந்த் சோப்ரா மற்றும் மிதுன் ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர். 

டாஸின்போது பேசிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், `இந்த ஆடுகளத்தில் சேஸிங் செய்ய விரும்புகிறோம். ஐபிஎல் தொடரின் ஆரம்ப நாள்களில் இருக்கிறோம். தொடர்ச்சியான வெற்றி என்ற இந்தநிலையைத் தொடர விரும்புகிறோம்' என்றார். ரஹானே பேசுகையில், `5 நாள்களில் 3 போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். இந்த இடவெளி அவசியமானது. எனவே, வீரர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பதே முக்கியமானது' என்றார். ரஸல் குறித்த கேள்விக்கு அவருக்கு எதிராக ஆக்ரோஷமாகப் பந்துவீச வேண்டும் என்று ரஹானே பதிலளித்தார்.