Published:Updated:

இது IPL இல்லை, WIPL! - மும்பை vs ஹைதராபாத் மேட்ச் ரிப்போர்ட்

"பவர்ஃபுல் பீபிள் கம் ஃப்ரம் பவர்ஃபுல் ப்ளேஸஸ்" என்ற கருத்தை உறுதிப்படுத்தவே கரீபியன் கடற்கரையிலிருந்து வந்திருந்தார் அல்ஸாரி ஜோசப்.

இது IPL இல்லை, WIPL! - மும்பை vs ஹைதராபாத் மேட்ச் ரிப்போர்ட்
இது IPL இல்லை, WIPL! - மும்பை vs ஹைதராபாத் மேட்ச் ரிப்போர்ட்

ந்த சீசன் IPL-ன் 19வது மேட்சில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டேவிட் வார்னர் - பெர்ஸ்டொவ் இணை, இந்த மேட்சிலும் வழக்கம்போல் எதிரணியின் வயிற்றில் புளியைக் கரைக்குமா அல்லது சீக்கிரமே அவுட்டாகி பாலை வார்க்குமா என ஆவலோடு அமர்ந்தார்கள் ஐ.பி.எல் ரசிகர்கள். மும்பை அணியில் யுவ்ராஜ் மற்றும் மலிங்காவுக்கு பதிலாக, இஷன் கிஷன் மற்றும் அறிமுக பவுலர் அல்ஸாரி ஆகியோர் இடம்பிடித்தனர். "வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறோம், வெட்டியாய் எதற்கு டீமை மாற்ற வேண்டும்" என்ற நோக்கில், ஹைதராபாத் அணி எந்தவித மாற்றமின்றி களமிறங்கியது. டாஸ் ஜெயித்த ஹைதராபாத் அணி, பவுலிங் தேர்வு செய்தது. 

இது IPL இல்லை, WIPL! - மும்பை vs ஹைதராபாத் மேட்ச் ரிப்போர்ட்

முதல் ஓவர், கேப்டன் வெர்சஸ் கேப்டன். புவி வீசிய முதல் ஐந்து பந்துகளையும் பொறுமையாக `டாட்' பந்துகளாக மாற்றிவிட்டு, கடைசி பந்தில் பேட்டை `படார்' எனச் சுழற்றினார் ரோகித். பேட்டில் பட்ட பந்து நேராகக் கவுலை நோக்கிச் செல்ல, அப்போது மின் விளக்குகளின் வெளிச்சம் கவுலின் கண்களில் மின்னலென பாய, கேட்ச்சை கோட்டைவிட்டார். விக்கெட் மெய்டனாக முடிந்திருக்க வேண்டிய முதல் ஓவர், விக்கெட்டும் இல்லாமல், மெய்டனும் இல்லாமல் ஒரு ரன்னோடு முடிந்தது. சந்தீப் விசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தை, டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு விரட்டினார் ரோகித். கவுலை கொலைவெறியுடன் பார்த்தது ஹைதராபாத் அணி. 

இது IPL இல்லை, WIPL! - மும்பை vs ஹைதராபாத் மேட்ச் ரிப்போர்ட்

ஆட்டத்தின்  மூண்றாவது ஓவரில் குயின்டன் டி காக், தன் பங்குக்கு ஒரு சிக்ஸ்ரை விளாசினார். நான்காவது ஓவர் வீச உள்ளே நுழைந்தார் நபி. ஹைதராபாத் அணிக்கு விக்கெட்களை அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கும் வள்ளல் நபி, இந்தமுறையும் அதை செய்ய தவறவில்லை. ரோகித்தின் விக்கெட்டை கழட்டி, கெத்துக்காட்டினார். இதற்கு அடுத்த ஓவரிலேயே சந்தீப் விசிய பந்தில் எல்.பி.டபிள்யு ஆகி, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் சூர்யகுமார் யாதவ். பவர் ப்ளேயின் முடிவில் இரண்டு விக்கெட்களை இழந்து, வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபகரமான நிலையில் இருந்தது மும்பை அணி. தான் வீசிய ஆட்டத்தின் 9வது ஓவரில், குயின்டன் டி காக்கின் விக்கெட்டை கழட்டி, கொலைவெறியைக் கொஞ்சம் தணித்தார் சித்தார்த் கவுல். அப்படியே, 12வது ஓவரில் க்ருணால் பாண்டியாவின் விக்கெட்டையும் தூக்கி, சன்ரைசர்ஸ் அணியின் செல்லைப்பிள்ளை ஆனார் கவுல். அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷனும் ரன் அவுட். 

இது IPL இல்லை, WIPL! - மும்பை vs ஹைதராபாத் மேட்ச் ரிப்போர்ட்

மும்பை அணியின் முரட்டு ஜோடி பொலார்டும் ஹர்திக் பாண்டியாவும் விதியின் விளையாட்டால் மீண்டும் இணைந்தது. போன மேட்ச் போல, இந்த மேட்சிலும் ஹர்திக் அதிரடி காட்டி ஆர்ம்ஸைக் காட்டுவார் என ஆவலோடு காத்திருந்தார்கள் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள். ஆனால், 14 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார் ஹர்திக். இந்த ஜோடியைப் பிரித்ததில் காண்டாகி, ஹைதராபாத் பவுலர்களை விட்டுப்பிரிக்கத் தொடங்கினார் பொல்லார்ட். கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்களை, பொல்லார்டு மட்டும் தனி ஆளாக ஆடிக்கொடுக்க, 136-7 என இன்னிங்ஸை நிறைவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இது IPL இல்லை, WIPL! - மும்பை vs ஹைதராபாத் மேட்ச் ரிப்போர்ட்

"ஹிஹி, ஈ ஸ்கோரு வார்னர்-பேர்ஸ்டோக்கே சரிபோது" என சன்ரைசர்ஸ் ரசிகர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். "சின்ன ஸ்கோர், பொறுமையாக ஆடி முடிப்போம்" என வார்னர்-பேர்ஸ்டோ ஜோடி அமைதியாக ஆடத் துவங்கியது. "இந்த சீசனில் இதுவரை ஒருமுறைக்கூட பவர்ப்ளேயில் தகர்ந்தது இல்லை இந்த பார்ட்னர்ஷிப்" என சன்ரைஸர்ஸ் ரசிகர்கள் நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கேப்பில், ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே அவுட்டாகி அதிரவைத்தார் பேர்ஸ்டோ. ராகுல் சாஹர் வீசிய பந்தை பும்ராவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். 

இது IPL இல்லை, WIPL! - மும்பை vs ஹைதராபாத் மேட்ச் ரிப்போர்ட்

"பவர்ஃபுல் பீபிள் கம் ஃப்ரம் பவர்ஃபுல் ப்ளேஸஸ்" என்ற கருத்தை உறுதிப்படுத்தவே கரீபியன் கடற்கரையிலிருந்து வந்திருந்தார் அல்ஸாரி ஜோசப். தன் முதல் ஐ.பி.எல் மேட்சில் முதல் பந்தில், டேவிட் வார்னரின் விக்கெட்டை கழட்டினார். இதில் ஹைதராபாத் ரசிகர்களை விட, மும்பை ரசிகர்கள்தான் அதிகம் அதிர்ச்சியாகினார். தான் வீசிய அடுத்த ஓவரில் நெல்லைக்காரர் விஜய் சங்கருக்கு, அல்வா கொடுத்து அனுப்பினார் அல்ஸாரி. அப்படியே, 16வது ஓவரில் தீபக் ஹூடாவையும் பவுல்டாக்கிவிட்டு, ரஷித் கானுக்கும் தங்க முட்டையைப் பரிசாக கொடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார் இந்த அல்ஸாரி. 18வது ஓவரில் புவி மற்றும் கவுலின் விக்கெட்களையும் கழட்டி, ஐ.பி.எல் உலகில் 12 ஆண்டுகள் நிலைத்து நின்ற சாதனையை தன் முதல் மேட்சிலேயே தலையில் தட்டி ஓடவிட்டார் அல்ஸாரி ஜோசப். சோஹைல் தன்வீரின் 14-6 என்பதே இதுவரை ஐ.பி.எல்லின் பெஸ்ட் பவுலிங் ஃபிகராக இருந்தது. இந்த மேட்சில் அல்ஸாரியின் பவுலிங் ஃபிகர், 12-6. வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சன்ரைசர்ஸ். `வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு" என கர்ஜித்தது மும்பை இந்தியன்ஸ். 

இது IPL இல்லை, WIPL! - மும்பை vs ஹைதராபாத் மேட்ச் ரிப்போர்ட்

ஆட்டநாயகன் விருது அன் அப்போஸ்டில் அல்ஸாரிக்கு வழங்கப்பட்டது. IPL என்ற பெயரை, பேசாமல் WIPL என மாற்றிவிடலாம் போல. இந்தியன் ப்ளேயர்களை விட வெஸ்ட் இந்தியன் ப்ளேயர்கள்தான் கலக்கியெடுக்கிறார்கள். ஆமாம், இந்த ஹெட்மயரும் வெஸ்ட் இந்தியன்தானே! துயரத்த...