Published:Updated:

ஆறுதல் பொல்லார்ட், அசத்தல் பௌலிங் எஸ்.ஆர்.ஹெச்... - எளிய இலக்கை எட்டுமா ஹோம் டீம்? #SRHvMI

ஆறுதல் பொல்லார்ட், அசத்தல் பௌலிங் எஸ்.ஆர்.ஹெச்... - எளிய இலக்கை எட்டுமா ஹோம் டீம்? #SRHvMI
ஆறுதல் பொல்லார்ட், அசத்தல் பௌலிங் எஸ்.ஆர்.ஹெச்... - எளிய இலக்கை எட்டுமா ஹோம் டீம்? #SRHvMI

ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. 

ஆறுதல் பொல்லார்ட், அசத்தல் பௌலிங் எஸ்.ஆர்.ஹெச்... - எளிய இலக்கை எட்டுமா ஹோம் டீம்? #SRHvMI

ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதேவீரர்களுடன் களமிறங்குகிறது. மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மலிங்கா இலங்கை திரும்பியிருப்பதால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. அதேபோல், யுவராஜுக்கும் இன்றைய பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்குப் பதிலாக இஷான் கிஷான் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 

ஆறுதல் பொல்லார்ட், அசத்தல் பௌலிங் எஸ்.ஆர்.ஹெச்... - எளிய இலக்கை எட்டுமா ஹோம் டீம்? #SRHvMI

மும்பை அணியின் இன்னிங்ஸை கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் டிகாக் ஆகியோர் தொடங்கினர். முகமது நபி வீசிய 4வது ஓவரில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 10வது ஓவரில் 50 ரன்களைக் கடந்த மும்பை அணி, 18.1 ஓவரில்தான் 100 ரன்களை எட்டியது. 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே மும்பை எடுத்திருந்தது. கடைசி 3 ஓவர்களில் பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் சித்தார்த் கௌல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.