Published:Updated:

`ஹர்பஜனின் டபுள் விக்கெட் மெய்டன்; கடைசி ஓவர்களில் அசத்திய குகலெயின்!' - 150-வது போட்டியில் சி.எஸ்.கே அசத்தல் வெற்றி #CSKvKXIP

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. 

`ஹர்பஜனின் டபுள் விக்கெட் மெய்டன்; கடைசி ஓவர்களில் அசத்திய குகலெயின்!' - 150-வது போட்டியில் சி.எஸ்.கே அசத்தல் வெற்றி #CSKvKXIP

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் வாய்ப்பைப் பெற்ற டூப்ளசிஸ் 54 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 37 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அந்த அணியின் கேப்டன் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

161 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடங்கினர். ஹர்பஜன் சிங் வீசிய இரண்டாவது ஓவரில் பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரில் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இரண்டு விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது. 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமல்லாமல் அந்த ஓவரை மெய்டனாகவும் வீசி அசத்தினார் ஹர்பஜன் சிங். 2 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி, 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து கே.எல்.ராகுலுடன் சர்ப்ராஸ் கான் கைகோத்தார். இந்த ஜோடி மெதுவாக ரன் குவிக்கத் தொடங்கியது. இதனால் பஞ்சாப் அணி சரிவிலிருந்து மீண்டது. 

`ஹர்பஜனின் டபுள் விக்கெட் மெய்டன்; கடைசி ஓவர்களில் அசத்திய குகலெயின்!' - 150-வது போட்டியில் சி.எஸ்.கே அசத்தல் வெற்றி #CSKvKXIP

இரண்டாவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில், இந்த ஜோடி பிரிந்தது. குகலெயின் வீசிய 18வது ஓவரில் 55 ரன்களுடன் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். இதையடுத்து, அப்போது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 16 பந்துகளில் 44 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இதையடுத்து களமிறங்கிய மில்லர், தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தீபக் சஹார் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் அவர் போல்டாகி வெளியேறினார். 5 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். பஞ்சாப் அணியின் வெற்றிக்குக் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், குகலெயின் பந்துவீச வந்தார். சர்ஃப்ராஸ் கான், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகள் டாட்பாலாகவே மைதானத்தில் கரவொலி எழுந்தது. நான்காவது பந்தில் சர்ப்ராஸ் கான் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5வது பந்தில் ஒரு ரன் மற்றும் கடைசிப் பந்து டாட் பாலாக அமைந்தது. கடைசி ஓவரில் மொத்தம் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட சென்னை அணி, 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கேவுக்கு இது 150வது போட்டியாகும்.