Published:Updated:

3 மாற்றங்களுடன் களமிறங்கும் சி.எஸ்.கே! - டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த தோனி #CSKvKXIP

3 மாற்றங்களுடன் களமிறங்கும் சி.எஸ்.கே! - டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த தோனி #CSKvKXIP
3 மாற்றங்களுடன் களமிறங்கும் சி.எஸ்.கே! - டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த தோனி #CSKvKXIP

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 18-வது லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். 

இன்றைய போட்டியில், சி.எஸ்.கே அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. காயம் காரணமாக டிவைன் பிராவோ விளையாடவில்லை. அதேபோல, மோஹித் ஷர்மா மற்றும் ஸ்ரதுல் தாகுர் ஆகியோர் இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக டூப்ளசிஸ், ஹர்பஜன் மற்றும் சமீபத்தில் அணியில் சேர்க்கப்பட்ட நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் குகலெயின் ஆகியோருக்கு, பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஹர்டூஸ் வில்ஜோன் மற்றும் முஜீப் ஆகியோருக்குப் பதிலாக, கிறிஸ் கெய்ல் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர். டாஸை வென்ற தோனி பேசும்போது, `முதலில் பேட் செய்ய இந்த பிட்ச் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆடுகள பராமரிப்பாளர்கள் சிறப்பாகப் பங்காற்றியிருக்கிறார்கள். நாங்கள் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில், பேட்ஸ்மேனுக்கு சாதகமாக பிட்ச் இருந்தது. மற்ற 3 போட்டிகளிலும் பிட்ச் மெதுவாகப் பந்துவீசுவதற்கு சாதகமாக இருந்தது. பயிற்சியின்போது நீங்கள் எப்படி பேட் செய்கிறீர்கள் என்பது முக்கியமானது' என்றார்.