Published:Updated:

இது பௌலிங் தவறு அல்ல... கேப்டன் கோலியின் தவறு! #RCBvKKR #DreRuss

கார்த்தி

5 போட்டிகள் விளையாடி எதிலும் வெல்லாமல் புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருக்கிறது கோலியின் அணி.

இது பௌலிங் தவறு அல்ல... கேப்டன் கோலியின் தவறு! #RCBvKKR  #DreRuss
இது பௌலிங் தவறு அல்ல... கேப்டன் கோலியின் தவறு! #RCBvKKR #DreRuss

வழக்கம் போல ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு இந்தப் போட்டியில் தோற்றிருக்கிறது எனக் கடந்து செல்ல முடியவில்லை. இந்த சீசனில் முதல்முறையாக கோலியும், டி வில்லியர்ஸும் நிலைத்து நின்று சிறப்பான இன்னிங்ஸ் ஆடி இருக்கிறார்கள். பார்த்திவ் - கோலியின் தொடக்க ஆட்டமும் சிறப்பாகவே இருந்தது. 200 ரன்கள் அடித்தும் தோற்றிருக்கிறது கோலியின் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு. ``கடைசி நான்கு ஓவர்களில் 75 ரன்களை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், 100 ரன்களைக் கூட உங்களால் கட்டுபடுத்த முடியாது . என்ன தவறு என்று பேசலாம். ஆனால் பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. இது மிகவும் மோசமான சீசன்" எனப் போட்டி முடிந்ததும் சொற்கள் உதிர்த்திருக்கிறார் ராயல் சாலஞ்சர்ஸ் கேப்டன் கோலி. ஆனால், சொல்லிக்கொள்ள ஆயிரம் விஷயம் இருக்கிறது கோலி.
ஒரு நாள், டி20 போட்டிகளில் தோனிதான் கோலிக்கு அறிவுரைகள் வழங்குகிறார் என தோனி ரசிகர்கள் முதல் பலரும் சொல்வது வாடிக்கை. டெஸ்ட் போட்டிகளில் தோனி இல்லாமலே வெல்வதன் மூலம்தான் கோலி இது போன்ற சில விமர்சனங்களைத் தவிர்த்து வருகிறார். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் கோலியின் கேப்டன்சி மிகவும் வருத்தம் கொள்ளச் செய்கிறது. மற்ற போட்டிகளைக்கூட விடுவோம். கொல்கத்தா இந்தப் போட்டியில் 14 ஓவர்கள் ஸ்பின் வீசியிருக்கிறது. எக்கானமி 8.2 . ராயல் சாலஞ்சர்ஸ் என்ன செய்திருக்கும் என நினைக்கிறீர்கள்? அதுவும் போட்டி நடப்பது பெங்களூருவில். மேட்ச் ரிப்போர்ட்டை பார்ப்போம்.
 

இது பௌலிங் தவறு அல்ல... கேப்டன் கோலியின் தவறு! #RCBvKKR  #DreRussஐந்து நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் களமிறங்கியது கொல்கத்தா. டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங் தேர்வு செய்தது. உமேஷ் யாதவுக்கு பதிலாக பவான் நெகியும், ஹெட்மெய்ருக்கு பதிலாக டிம் சௌத்தியும் பெங்களூருவில் களம் இறங்கினார்கள். `டிம் சவுத்தி வந்துட்டாண்டா' என ஆத்தோரமாய் ஆரவாரம் கொண்டது பெங்களூரு ரசிகர்கள். `யார டீம்ல எடுத்தா என்ன ,பௌலர்ஸ் ரொட்டேட் நாந்தான பண்ணப் போறேன்' என கோலியின் மைண்ட் வாய்ஸ் இருந்திருக்கும் போல.

முதல் பாலிலிருந்து அடிக்க முயற்சி செய்தது கோலி - பார்த்திவ் இணை. பார்த்திவ் விருட்டு விருட்டு என்று அடித்தாலும், பந்து பெரும்பாலும் ஃபீல்டர் இருக்கும் இடத்தில்தான் சுற்றிக்கொண்டிருந்தது. ஐபிஎல் நாசமாப் போனா எனக்கென்ன, கோலி இப்படி ஆடிக்கொண்டிருந்தால், உலக கோப்பை என்னாகும் எனத் தீவிர யோசனையில் இருந்த ரசிகர்களுக்கு நேற்று செம்ம தீனி போட்டார் கோலி. பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் அவர் அடித்த பௌண்டரி அதிஅற்புதம். நானே சாட்சி! கேப்பில் அவ்வளவு அழகான பிளேஸ்மென்ட் அது. #KohliIsBack 

இது பௌலிங் தவறு அல்ல... கேப்டன் கோலியின் தவறு! #RCBvKKR  #DreRussபவர்ப்ளே முடிவில் விக்கெட் இழக்காமல் 53 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு. ரானா பந்துவீச்சில் பார்த்திவ் தன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கினார் வில்லியர்ஸ். சற்று கடினமான கேட்ச் என்றாலும், வில்லியர்ஸை டிராப் செய்தார் ஃபெர்கஸன். 28 பந்துகளில் அரைசதம் கடந்தார் வில்லியர்ஸ். இந்த சீசனில் இருவரும் அரைசதம் அடித்த முதல் போட்டி இது. ரஸலின் முதல் ஓவரிலேயே வில்லி அடித்த இரண்டு சிக்ஸர்களும் இந்த அரைசதத்தில் அடக்கம்.

பெர்கஸன் வீசிய இரண்டாவது ஓவரில் 19 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. குல்தீப் பந்துவீச்சில் கோலியும், நரைன் பந்துவீச்சில் வில்லியர்ஸூம் அடுத்தடுத்த அவுட்டாக 19 ஓவர் இறுதியில் 187/3 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் ஸ்டாய்னிஸின் அதிரடியில் 205 ரன்கள் எடுத்திருந்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா.

கொல்கத்தா இந்தப் போட்டியில் 14 ஓவர்கள் ஸ்பின் வீசியிருக்கிறது. எக்கானமி 8.2. வேகப்பந்து வீச்சார்களின் பந்துகள் அனைத்துமே பௌண்டரிகளாகப் பறந்தன. போட்டி ஆரம்பிக்கும் போது எங்களிடம் 7 பௌலிங் ஆப்சன் இருக்கிறது என்றார் கோலி. ஆனால், போட்டி நடக்கும் 3 மணி நேரத்தில் அது அவருக்கு நினைவுக்கு வராமல் போனதுதான் துரதிர்ஷடம்.

இது பௌலிங் தவறு அல்ல... கேப்டன் கோலியின் தவறு! #RCBvKKR  #DreRuss

அப்படியும் அதிர்ஷ்டம் பெங்களூருக்குச் சாதகமாக இருந்தது. சைனி வீசிய முதல் ஓவரிலேயே 10 ரன்களுக்கு நரைன் அவுட்டானார். பவர் ப்ளே இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. சஹல் தன் முதலிரண்டு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.
பவன் நெகி வீசிய முதல் ஓவரிலேயே உத்தப்பா அவுட். அந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் நெகி. நெகியின் அடுத்த ஓவரில் நன்றாக செட்டிலான லின்னும் அவுட், இந்த ஓவரில் நெகி விட்டது நான்கு ரன்கள். 17 ஓவர் இறுதியில் 153/5 என்கிற நிலையில் இருந்தது கொல்கத்தா. 18 பந்துகளில் 53 ரன்கள் தேவை.சன்ரைஸர்ஸ்க்கு எதிரான போட்டியில் ரஸலும், சுப்மான் கில்லும் 3 ஓவரில் 53 ரன்களை அடித்தது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. சஹல் அதற்கு முந்தைய ஓவரில் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ரானாவின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொயின் அலியை இந்தப் போட்டியில் பந்துவீச அழைக்கவே இல்லை கோலி. ஸ்பின்னர்களுக்கு நன்றாகத்தானே செல்கிறது பிறகு ஏன் இந்த முடிவு என்பதற்கு பதில் இல்லை. நெகி, ஸ்டாய்னிஸ், சிராஜ், சௌத்தி, அலி என இருந்த பௌலிங் ஆப்சனில், கோலி பெங்களுக்குத் தந்த அதிசய பொருள் சிராஜ். பேட்டிங்கில் இருப்பது ரஸல். ஸ்பின்னர்களுக்கு எதிராக ரஸலின் ஸ்டிரைக் ரேட் குறைவு என்பது எல்லோரும் அறிந்ததே. முதல் மூன்று பந்துகளில் இரண்டு பீமர்களை சிராஜ் வீச, அவர் வீசுவதற்கு தடை என்றார் அம்பயர். அந்த ஓவரை கம்ப்ளீட் செய்ய ஸ்டாய்னிஸ் அழைக்கப்பட்டார். மொத்தம் அந்த ஓவரில் வீசப்பட்ட 9 பந்துகளில் 3 சிக்ஸர் உட்பட 23 ரன்கள் அடிக்கப்பட்டிருந்தது. 

இது பௌலிங் தவறு அல்ல... கேப்டன் கோலியின் தவறு! #RCBvKKR  #DreRussபெனல்ட்டிமேட் ஓவரை அனுபவ வீரர் டிம் சவுத்தி வீசினார். ஒருமுறை டிவில்லியர்ஸ் ஸ்டெய்னின் பந்துவீச்சை நொறுக்கியது போல் ஆனது அந்த ஓவர். 90ஸ் கிட்ஸுக்கு கிரிக்கெட் பேட்டில் ஸ்பிரிங் கதை போல், ரஸலின் உடம்புக்குள் ரோபோ இருக்குமோ என்றெல்லாம் இனி பேசுவார்கள். 12 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த ஸ்கோர்போர்டை லெவல் செய்திவிட்டார் ரஸல். ஆம், ஆறு பந்துகளில் 4 சிக்ஸர் உட்பட 29 ரன்கள்.

கடைசி ஓவரில் அடிக்க வேண்டிய ஒரு ரன்னுக்காக ஸ்பின்னர் நெகி தேர்வு செய்யப்பட்டார். வாஷிங்டன் சுந்தர் என்னும் ஸ்பின்னரை எதற்க்கு ஸ்குவாடில் கோலி வைத்திருக்கிறார் என யாருக்கும் தெரியாது. பௌலிங் கோச் நெஹ்ராவுக்காவது தெரிந்தால் பரவாயில்லை.

13 பந்துகளில் 48 ரன்கள் (1*4 7*6 SR 369) வெளுத்த ரஸல் ஆட்ட நாயகான தேர்வு செய்யப்பட்டார். கொல்கத்தா விளையாடிய நான்கு போட்டிகளிலும் ரஸல் 40+ அடித்திருக்கிறார். அரைசதம் கடந்த போட்டியில் மட்டும் கொல்கத்தா தோற்றிருக்கிறது. மற்ற போட்டிகளில் முறையே 48,49*.49*. ரஸல் இனி அரைசதம் அடிக்காவிட்டால் கொல்கத்தா ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள் போல. 

இது பௌலிங் தவறு அல்ல... கேப்டன் கோலியின் தவறு! #RCBvKKR  #DreRuss


எதிரணி ஒரு சிக்ஸ் அடித்துவிட்டால்கூட கோலி தரும் முகபாவனைகள் அச்சமூட்டுகிறது. பௌலரிடம் கவுன்சலிங் கொடுத்து வீசச் சொல்ல வேண்டிய கேப்டனே ஒடுங்கிப்போய் விடுவது பீதி தருகிறது. அதுவும் கோலி மாதிரியான அக்ரஸிவ் பிளேயர் இப்படி உடைந்து விடுவது அபாயகரமானது. கோலி தன் கிரிக்கெட் கேரியரில் இப்படியான தோல்விகளை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. மேனேஜ்மென்ட் அழுத்தமா, இல்லை தோல்விகள் தரும் வலியா, ஒரு சிக்ஸ் சென்றால் கூட, கோலியைத்தான் பிற வீரர்கள் தேற்ற வேண்டியிருக்கிறது. அவர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கேப்டனாக இருக்கும் போது, அவ்வளவு திணறுகிறார். இருக்கும் டீமை வைத்தே தோனி ஒவ்வொரு முறையும் ப்ளே ஆஃப் வரை வந்தது உண்மையிலேயே கேப்டன்சி என ஒன்று இருக்கிறது என கோலியும், கோலியின் ரசிகர்களும் இனியாவது புரிந்துகொள்ளுதல் அவசியம்.

5 போட்டிகள் விளையாடி எதிலும் வெல்லாமல் புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருக்கிறது கோலியின் அணி. ராயலும் சாலஞ்சும் டீம் பேரிலிருந்து மட்டும் என்ன செய்ய கோலி அவர்களே?