Election bannerElection banner
Published:Updated:

மூன்றில் இரண்டு சொந்த மண்ணில் தோல்வி... டெல்லி சுதாரிக்க வேண்டிய நேரம் இது! #DCvSRH

மூன்றில் இரண்டு சொந்த மண்ணில் தோல்வி... டெல்லி சுதாரிக்க வேண்டிய நேரம் இது! #DCvSRH
மூன்றில் இரண்டு சொந்த மண்ணில் தோல்வி... டெல்லி சுதாரிக்க வேண்டிய நேரம் இது! #DCvSRH

மூன்றில் இரண்டு சொந்த மண்ணில் தோல்வி... டெல்லி சுதாரிக்க வேண்டிய நேரம் இது! #DCvSRH

2019 ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அடுத்தடுத்த போட்டிகளில் வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில், `பேட்டிங் மட்டுமல்ல பெளலிங்கிலும் மாஸ்’ என்பதை நிரூபித்த சன் ரைசர்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. #DCvSRH

ஈடன் கார்டனில் கொல்கத்தாவுக்கு எதிராக 183 ரன் சேஸ் செய்தபோது, 2 ரன்களில் வெற்றியை இழந்தது ஹைதராபாத். ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளும் ஹைதராபாத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்றன. இந்த இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத், 200+ ஸ்கோரை அசால்டாக எடுத்தது. வார்னர் - பேர்ஸ்டோ இணை அதிரடி ஃபார்மில் இருக்க, பெரிதும் சொதப்பல் இல்லாத மிடில் ஆர்டரில் விஜய் ஷங்கர், யூசப் பதான் இறங்க, பேட்டிங் பற்றிய கவலை ஹைதராபாத்துக்குப் பெரிதாக இல்லை.

முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிதும் சோபிக்காத ஹைதராபாத் பெளலிங் யூனிட், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கவனிக்க வைத்தது. `ரஷித் கான் மட்டுமல்ல நானும் இருக்கேன். சுழலில் பின்னிப் பெடலெடுப்பேன்’ என அடித்துச் சொல்லியிருக்கிறார் மற்றுமொரு ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி. மூன்றாவது ஐபிஎல் சீசனில் பங்கேற்றிருக்கும் நபி, ஹைதராபாத் அணிக்காக இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த 7 போட்டிகளிலுமே ஹைதராபாத்துக்கு வெற்றி. நபி விளையாடினால், ஹைதராபாத்துக்கு வெற்றி நிச்சயம் என்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தப் போட்டியில் நடந்ததும் அதேதான்.

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார், பெளலிங்கை தேர்வு செய்தார். கடைசி இரண்டு போட்டிகளில் சேஸ் செய்த டெல்லி அணி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ப்ரித்வி ஷா, தவான் இணை சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி 36 ரன்களுக்கு 2 விக்கெட்டும், ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 62 ரன்களும் எடுத்திருந்தது. அப்போதே போட்டி ஹைதராபாத் பக்கம் சாய்ந்துவிட்டது.

பவர்ப்ளேவுக்குப் பிறகான ஓவர்களிலும், டெல்லி அணியின் ரன் ரேட் 6-ஐத் தாண்டவில்லை. பிட்ச் தன்மையை உணர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பன்ட் இணை சிங்கிள்ஸ், டபுள்ஸ் எடுத்து அணியின் ஸ்கோரை தேற்றினர். 9-வது ஓவரில் முகமது நபி திரும்ப பந்துவீச வந்தபோது, ஷ்ரேயாஸ் - பன்ட் கூட்டணி முறிந்தது. முகமது நபியின் பந்தை லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் அடிக்க முயன்று தீபக் ஹுடாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் பன்ட். நேற்றைய போட்டியில் பெளலிங் மட்டுமல்ல, ஃபீல்டிங்கும் ஹைதராபாத் அணிக்கு வலு சேர்த்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பன்ட், இங்ராம், தெவேதியா மூவரும் தலா 5 ரன்களில் வெளியேறினர். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவர் முடிவில், 129 ரன்களுக்குச் சுருண்டது டெல்லி கேப்பிடல்ஸ்.

எளிதான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய ஹைதராபாத்துக்கு பேர்ஸ்டோ அசத்தில் ஓப்பனிங் கொடுத்தார். பேர்ஸ்டோவின் அதிரடிக்குத் துணை நின்ற வார்னர், நிதானமாக விளையாடினார். முதல் 6 ஓவர்களில் வெளுத்து வாங்கிய ஹைதராபாத், பவர்ப்ளே முடிவதற்குள் பாதி இலக்கை அடைந்தது. 28 பந்துகளில் 48 எடுத்த பேர்ஸ்டோ தெவேதியாவின் யார்க்கரில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்த ஓவரிலேயே வார்னரும் வெளியேற, 8 ஓவர் முடிவில் ஹைதராபாத் 68/2.

இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்களை வெளியேற்றிய டெல்லி கேப்பிடல்ஸ், ஹைதராபாத்தின் மிடில் ஆர்டரை காலி செய்யத் திட்டமிட்டது. அடுத்தடுத்த மூன்று ஓவர்களில், விஜய் சங்கர், பாண்டே, ஹூடாவின் விக்கெட்டுகள் சரிந்தது. இருந்தாலும், முகமது நபி, யுசுஃப் பதான் இருவரும் கடைசி வரை களத்தில் நின்று எளிதான இந்த இலக்கை சேஸ் செய்தனர்.

ஐந்தில் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். அதில் இரண்டு சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வி. நேற்று மேட்ச் முடிந்ததும் டெல்லி அணியின் ஆலோசகர் செளரவ் கங்குலி, ஃபெரோஷா கேட்லா மைதானத்தின் பிட்ச் கியூரேட்டரை ஆடுகளத்துக்கு அழைத்துச் சென்று, பிராக்டிஸ் பிட்ச்சை சுட்டிக் காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தார். நேற்று மேட்ச் நடந்த பிட்ச் பயங்கர ஸ்லோ. அது திறமையான ஸ்பின்னர்களைக் கொண்ட ஹைதராபாத் அணி, பிட்ச்சின் தன்மையைப் புரிந்து அதை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டது. ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர்கள் கூட அதிவேகத்தில் பந்துவீசவில்லை. ஆனால், சொந்த மண்ணை டெல்லி தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளவில்லை. 

பொதுவாக, அணிகள் தங்கள் சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் வெற்றிபெறுவதில் முனைப்பாக இருக்கும். அதற்கேற்ப பிட்ச் தயார் செய்யப்படும். ஃபெரோஷா கோட்லா பிட்ச் இதேமாதிரி நீடித்தால், டெல்லிக்கு இனி அடுத்து வரும் போட்டிகள் கடும் சவாலாக இருக்கும். `பிட்ச்’ குறித்த கேள்விக்கு டெல்லிப் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், ``இரு அணிகளுக்கும் ஒரே பிட்ச்தானே. ஹைதராபாத் ஒரு பிட்ச்சில் ஆடியபோது, நாங்கள் வேறொரு பிட்ச்சில் ஆட முடியாதே. ஹைதராபாத் அணி பிட்ச்சை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. அவர்களது வேகப்பந்துவீச்சாளர்கள் கூட ஸ்லோவாகத்தான் பந்துவீசினர். இதுபோன்ற பிட்ச்சில் ஸ்லோ பால்களைக் கூட தூக்கி அடிப்பது கஷ்டம். பிட்ச் இதே நிலை நீடித்தால் அடுத்த போட்டிகளில் நாங்கள் அணித் தேர்வில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்’’ என்றார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு