Published:Updated:

RCB-க்கு ஈ சாலாவும் கப் நமது இல்லபோல! #RCBvSRH

கார்த்தி
RCB-க்கு ஈ சாலாவும் கப் நமது இல்லபோல! #RCBvSRH
RCB-க்கு ஈ சாலாவும் கப் நமது இல்லபோல! #RCBvSRH

பேர்ஸ்டோ 114... RCB 113... இந்த ஆர்சிபிக்கு ஒரு நல்லதே நடக்க மாட்டேங்குது #RCBvSRH

RCB-க்கு என்னதான் ஆச்சு! 'சாம்பல் மேடுகளும் புகைமண்டலங்களும்' என்றெல்லாம் யாரும் ஷாக் ஆவதில்லை. என்ன வழக்கம்போல 'மௌக்கா மௌக்காதான' என்பது போலத்தான் RCB-யின் இந்தத் தோல்வியைக் கடந்துபோகிறார்கள். RCB, பஞ்சாப், டெல்லி போன்ற அணிகள் இதுவரை ஐ.பி.எல் கப் வென்றதில்லை. ஆனாலும், பஞ்சாப் டெல்லி அணிகளை எல்லாம் யாரும் RCB-யை அளவுக்கு நக்கல் அடிப்பதில்லை. ` ஈ சாலா கப் நமதே’ என RCB ரசிகர்கள் அகஸ்மாத்தாய் கம்பு சுற்றும்போதெல்லாம் பொதுமாத்து பலமாய் விழுகிறது. கப் வெல்லும் சென்னை, மும்பைக்கு அடுத்தபடியாக வாய் அதிகம் பேசுவது RCB ரசிகர்கள்தான். `வாய் பேசற பிள்ளைதான் வாய் மேலயே வாங்கும்’ எனப் புதுமொழிக்கு ஏற்ப இவர்களைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய ஷிவன் மனசு வச்சது அவ்ளோதான்!

டாஸ் வென்ற பெங்களூரு பௌலிங் தேர்வு செய்தது. ஹைதராபத்தில் கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக முகமது நபியும் ஷபாஷ் நதிமுக்குப் பதிலாக தீபக் ஹூடாவும் களமிறங்கினார்கள். பெங்களூருவில் இந்த ஐ.பி.எல் வரலாற்றின் சோட்டா வயது பிளேயரான பெங்காலின் பர்மான் களமிறங்கினார். விஜய் ஹசாரே தொடரில் அசத்திய பந்துவீச்சாளருக்கு இந்த முதல் போட்டி மறக்க வேண்டிய ஒன்றாகிவிட்டதுதான் பெருஞ்சோகம். 

RCB-க்கு ஈ சாலாவும் கப் நமது இல்லபோல! #RCBvSRHஇந்த ஐ.பி.எல்-லின் அதிரடி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மீண்டும் களமிறங்கியது. கொல்கத்தாவுக்கு எதிராக 118, ராஜஸ்தானுக்கு எதிராக 110 என வார்னர் பேர்ஸ்டோ ஜோடியின் அதிரடி இந்த மீண்டும் இன்னும் உக்கிரமாக இருந்தது.

மொயின் அலியின் முதல் ஓவரே 14 ரன்களுக்குச் செல்ல, `அடை மழை வெளுத்து வாங்கப்போகுதுடா’ என ஜெர்க் ஆக ஆரம்பித்தது பெங்களூரு. பவர் பிளே முடிவில் ரன்ரேட் பத்தைத் தொட்டு நின்றது. 59/0 வார்னர் 27* பேர்ஸ்டோ 32*. டீமில் இருக்கும் பௌலர்களில் யார் வீசினாலும் பவுண்டரியும் சிக்ஸரும் குறைந்தபாடில்லை. எப்போதும் 100 ரன் பார்டனர்ஷிப் வைக்கும் இந்த ஜோடி, இந்த முறை 200 ரன் பார்ட்னர்ஷிப் நோக்கி விரைந்தது.

இறுதியாக சஹல் பந்தில் பேர்ஸ்டோ உமேஷிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 114 (56b 12x4 7x6) SR: 203.57 ரன்களுக்கு பேர்ஸ்ட்டோ அவுட்டாகும்போது, பெங்களூரு அணி இதைக்கூட அடிக்காது என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், பெங்களூரு அதைச் செய்துகாட்டியது. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 185 ரன்கள் எடுத்து சாதனை செய்தது. இதற்கு முந்தைய ரெக்கார்டு கவுதம் கம்பீர், கிறிஸ் லின் 184.

RCB-க்கு ஈ சாலாவும் கப் நமது இல்லபோல! #RCBvSRH'ஏப்ப சாப்பையா ஆள் கிடைச்சா எல்லாவனும் அடிக்கத்தான் பாஸ் செய்வான்' என்பதாக விஜய் ஷங்கரும் வந்த முதல் பாலே சிக்ஸ். பிண்டு இரண்டு ரன்களுக்கு ஆசைப்பட்டு ஓட, ரன் அவுட்டானார். வார்னர் இருக்கார் பார்த்துக்கொள்வார் என விக்கெட் தியாகம் செய்தார் விஜய். ஓராண்டுத் தடைக்குப் பின்னர் வார்னரின் விஸ்வரூபம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. டேவிட் வார்னர் நான்காவது சதத்தை ஐ.பி.எல்-லில் ஸ்கோர் செய்தார். இறுதியாக 231 ரன்களை டார்க்கெட்டாக பெங்களூருவுக்குக் கொடுத்தது அந்தப் பக்கத்து மாநிலம்.

'இவ்வளவு பெரிய இமாலய ஸ்கோர் எடுக்க நாம் என்ன பண்ணணும்' என யோசனையில் இருந்தார்களா தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் 'அம்பயர்கள் கண் திறந்து பார்க்க வேண்டும். இது கிளப் கிரிக்கெட் இல்லை ஐ.பி.எல்' என கடுமையாக விமர்சித்து இருந்தார், இந்திய கேப்டன் கோலி. அதுவும் 7 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் நோ பாலை அம்பயர் பார்க்கவில்லை என்பதால். ஆனால், நேற்று கோலி அணி ஆடியதெல்லாம், கோலி அணியினர் ஐ.பி.எல் போட்டிகளை கிளப் அணி என நினைத்தாவது சீரியஸாக ஆடலாம். ஒரு கட்டத்துக்கு மேல் ஆர்.சி.பி 20 ஓவர்கள் தாக்குப்பிடித்துவிட்டாலே போதும் என்று இருந்தது.

பார்த்தீவ் பட்டேல், ஹெட்மெய்ர், ஏபிடி என மூவரது விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த ஓவர்களில் முடித்துக்கட்டினார் நபி. அதுவும் ஏபிடிக்கு அவர் போட்ட பந்தை பேட்டைக் கடந்து, ஸ்டம்பைப் பதம் பார்த்ததை ஏபிடி ஆச்சர்யத்தோடு பார்த்தார். கவர் டிரைவ் செல்லும் என நினைத்த பந்து ஸ்டம்பை நோக்கி நகரும் என ஏபிடி சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

RCB-க்கு ஈ சாலாவும் கப் நமது இல்லபோல! #RCBvSRHசந்தீப் ஷர்மாவின் பந்தில் கோலி அவுட்டாவது முதல்முறை அல்ல. ஆனால், இக்கட்டான இத்தருணத்தில் இப்படி அவுட்டாவது வேதனை அளிக்கிறது. சந்தீப் கோலிக்கு வீசிய 42 பந்துகளில் ஆறாவது முறையாக அவுட்டாகிறார் கோலி.

இத்தனை போட்டிகளில் கிராண்ட் ஹோம் ஏன் விளையாடுகிறார் என யாருக்கும் தெரியாது. இந்தப் போட்டியில், `நான் இருக்கிறேன் ஷெல்வமே’ என விளையாடிக்கொண்டே இருந்தார். 32 பந்துகளில் 37 ரன்கள் எடுத்ததுக்கு அவர் மிகவும் பெருமைப்பட்டிருப்பார். ஆனால், அந்த இன்னிங்ஸில் ஆச்சர்யம் கொள்ள எதுவுமில்லை.

இறுதியாக 19.5 ஓவரில் 113 ரன்களுக்கு (பேர்ஸ்டோ அடித்ததைவிட ஒரு ரன் குறைவு ) ஆட்டமிழந்தது பெங்களூரு.

'இதுதான் எங்களுது மோசமான தோல்வி' என்றார் கோலி. உண்மையில் இதுதான் இந்த அணியின் மோசமான தோல்வியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இதைவிடவும் கேவலமாக தோற்றுவிடாதீர்கள் கோலி.

ஈ சாலாவும் ஐபிஎல் கப்பு, ராயல் சாலஞ்சர்ஸைவிட்டு விலக ஆரம்பித்துவிட்டது. ஏதேனும் செய்யுங்கள் கோலி!

ஆரஞ்சு கேப் : டேவிட் வார்னர் 254 ரன்கள் 3 இன்னிங்ஸ்

அதிக பட்ச ஸ்கோர் : பேர்ஸ்டோ 114

அதிக பவுண்டரி : 23 டேவிட் வார்னர் 3 இன்னிங்ஸ்

பின் செல்ல