Published:Updated:

61/5 டு 185/8; ரஸல் - தினேஷ் கார்த்திக் மேஜிக்! - டெல்லிக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா #DCvKKR

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

61/5 டு 185/8; ரஸல் - தினேஷ் கார்த்திக் மேஜிக்! - டெல்லிக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா  #DCvKKR

ஐ.பி.எல் தொடரில் 10வது லீக்கில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. பெரோஸா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நிகில் நாயக், கிறிஸ் லின் இணை தொடக்கம் தந்தது. இந்த ஜோடி மந்தமாக ஆடியது. நாயக் 16 பந்துகள் பிடித்து 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதேபோல் கிறிஸ் லின்னும் 20 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த உத்தப்பா மற்றும் ராணா ஆகியோர் இந்த முறை கைகொடுக்க தவறினர். ராணா ஒரு ரன்னிலும், உத்தப்பா 11 ரன்களிலும் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது. 

61/5 டு 185/8; ரஸல் - தினேஷ் கார்த்திக் மேஜிக்! - டெல்லிக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா  #DCvKKR

இருப்பினும் அதிரடி வீரர் ரஸ்ஸல் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் இருவரும் அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தனர். குறிப்பாக ரஸ்ஸல் டெல்லி அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார். 28 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து ரஸ்ஸல் அவுட் ஆனார். இதேபோல் தினேஷ் கார்த்திக்கும் 50 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரின் ஒத்துழைப்பால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்குக் கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.