Published:Updated:

`அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP

`அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP
News
`அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP

மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கும் பொழுது ரஸல் அந்த பஞ்சாப் வீரர் யாரு, எவருன்னு தெரியல, ஆனா நன்றி என்றார். ரஸல் அதிகம் சிரித்திருப்பார்., அஷ்வின் இன்னும், அதிகமாய்க் கடுப்பாகி இருப்பார். ஆனால், எல்லாமே ரூல் புக்கில் இருக்கே அஷ்வின் என்ன செய்வது!

கொல்கத்தாவுக்கும், பஞ்சாபுக்குமான போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இரு அணிகளுமே வென்று இருப்பதால், இன்று ஜெய்க்கும் அணி, இரண்டாம் வெற்றியைப் பதிவு செய்து முதலிடம் நோக்கி முன்னேறலாம் என்பதால், ஆர்வமாக இருக்குமா என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. காட்டடி மன்னர்கள் கெயில் ஓர் அணி, இன்னோர் அணியில் ரஸல். இருவரும் முதல் போட்டியிலேயே அடி வெளுத்து இருக்கிறார்கள் என்பதால், சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இருக்காது எனப் பலர் டிவி முன் ஆஜரானார்கள்.

ஷாரூக்கும், உஷா உதுப் சகிதம் தன் டீமோடு ஆஜராகிவிடப் போட்டி இனிதே ஆரம்பித்தது. டாஸ் வென்ற அஷ்வின் பௌவுலிங் தேர்வு செய்தார். தோற்ற அணியைக்கூட மாற்றாமல் விளையாடும் அணிகளுக்கு மத்தியில், முதல் போட்டியில் வென்ற அணியையே `கோலி'த்தனமாய் மாற்றங்கள் செய்து வைத்தார் அஷ்வின். பஞ்சாப் சார்பாக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரது ஆரம்பத் தொகையான 20 லட்சத்திலிருந்து, அணிகள் வருணுக்குப் போட்டி போட அவரை இறுதியாக 8.40 கோடி ரூபாய்க்கு எடுத்தது பஞ்சாப். இந்த மிஸ்டரி ஸ்பின்னருக்கு பஞ்சாப் கொடுத்த விலை இவ்வளவா என்றால், 2015 கொல்கத்தா இன்னொரு மிஸ்ட்டரி ஸ்பின்னரான கரியப்பாவுக்கு அவரது ஆரம்ப விலையை விட 24 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டார். இருவரின் சாதனைகளையும் வேறொரு நாள் விமர்சிப்போம். ஆட்டத்துக்கு வருவோம்.

`அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP

8.40 கோடி ரூபாய்க்கு 7 விதமாகப் பந்தை ஸ்பின் செய்யும் மிஸ்ட்டரி புகழ் வருண் சக்ரவர்த்தி தன் முதல் ஓவரை வீச வந்தார். நீ படிச்ச மிஸ்ட்டரி ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா என்பது போல், சீனியர் மிஸ்ட்டரி ஸ்பின்னரான சுனில் நரைன் அந்த ஓவரில் மூன்று சிக்ஸ் விளாசினார். நாங்க வந்த வேலை முடிஞ்சுடுச்சு என்பது போல், லின்னும் நரைனும் ஆட்டமிழக்க ராபின் உத்தப்பாவுடன், ஜோடி சேர்ந்தார் ரானா. `ஐ ஜாலி அஷ்வின் அண்ணா ஓவர்' என்பது போல் ஜாலி மோடுக்குச் சென்றார் ரானா. அவர் வீசும் எல்லா ஓவரிலும் சிக்ஸ். அதுவும் அஷ்வினின் நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸ். அஷ்வின் 3 ரன்களில் அரைசதம் வாங்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 4-0-47-0

11 பேர் தான் ஒரு போட்டிக்கு என்றாலும், ஒரு கேப்டன் அணியை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால், டி20 போட்டிகளில் ஆறாவது பௌவுலர் ஆப்சன் இல்லாமல் கூட அணியைத் தேர்வு செய்வது என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை அஷ்வின், கோலி போன்றவர்கள் உணர்வதே இல்லை. எல்லா பௌவுலர்களையும், ரானாவும் ராபியும் அடித்து வெளுக்க, ஆட்கள் பற்றாக்குறையால் பார்ட் டைமரான மந்தீப் சிங்கை பந்து வீச அழைத்தார் அஷ்வின். வாய் மேல் பலன். அந்த ஓவரிலும் 18 ரன்கள். 28 பந்துகளில் அரைசதம் கடந்த ரானா, இறுதியாக 63 ரன்களுக்கு வருண் பந்தில் ஆட்டமிழந்தார். 63 (34b 2x4 7x6) SR: 185.29 . அடுத்து வர இருப்பது ரஸல் என்பதால், ரசிகர்கள் அவுட்டுக்கு சோக ஸ்மைலிக்கள் கூட போடவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
`அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP

மூன்றாவது ஓவரில் ஷமியின் யார்க்கர் லைன் பந்துகளில் அத்தனை துல்லியம். உத்தப்பா, ரஸல் இருவருமே திணறினர். அந்த ஓவரின் ஐந்தாவது பால், மற்றுமோர் அட்டகாசமான யார்க்கர். ஒட்டுமொத்த பஞ்சாபும் துள்ளிக்குதிக்க, ரஸல் அவுட். ஆனால், அங்குதான் கர்மா என்பது மன்கட் விதி ரூபத்தில் வந்தது. போன மேட்ச் ரூல்ஸ்த்தான நான் ஃபாலோ பண்ணினேன் என தம்ஸ் அப் காட்டிய அஷ்வினுக்கு கிரிக்கெட்டின் மற்றுமொரு முக்கியமான விதி போட்டுத்தாக்கியது. இன்சைட் தி சர்க்கிளில் மூன்று வீரர்களை மட்டுமே அஷ்வின் நிறுத்தியிருந்தார், குறைந்தது நான்கு வீரர்களாவது இருக்க வேண்டும். (சொல்லவேயில்ல!) நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப வேண்டிய ரஸலுக்கு அடித்தது ஜாக்பாட். 17 ஓவரில் 163/3 என இருந்த ஸ்கோர் முற்றிலுமாக மாறியது இதற்குப் பிறகு தான். ரஸல்லின் ஸ்டிரைக் ரேட் ஸ்பின்னர்களிடம் 138, அதே பேஸ் பௌலர்களிடம் 180. ஆனால், அஷ்வின் பேஸர்களை மட்டுமே தொடர்ந்து இறக்கினார்.

2- 0- 7 -0 என இருந்த ஆண்டிரூயூ டையின் அடுத்த ஓவரில் 22 ரன்கள். ஷமியின் கடைசி ஓவரில் 25 ரன்கள். அதில் ஹாட்ரிக் சிக்ஸும் அடங்கும். மூன்றாவது ஓவரை அவ்வளவு ஃபெர்பெக்ட்டாக வீசிய ஷமி, இதில் வீசியதெல்லாம் ,மரண லெவல் ஓபிக்கள். எதற்கு அத்தனை புல் டாஸ்!. யார்க்கர் மிஸ்ஸாகிறது என்றாலும், அவன்தான் அடிக்கிறது தெரியுதுல்ல அப்புறம் மறுக்கா மறுக்கா ஃபுல் டாஸ் போடுவதெல்லாம்...

 ரஸல் அடித்த சில சிக்ஸ் எல்லாம் இது ஈடன் கார்டன் தானா என்பதை கேள்விக்குள்ளாக்கியது. இந்தியாவின் மிகப்பெரிய மைதானமான ஈடன் கார்டனில் அப்படிச் சின்ன சிக்ஸ் எல்லாம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இரண்டாம் இன்னிங்ஸில் மயாங்க் அகர்வால் அடித்த லாங் லெக் 61 மீட்டர் என்பது வேறு கதை. அரைசதம் அடிக்கக்கூடாது என ஏதேனும் சபதம் எடுத்திருக்கிறாரோ என்னவோ, இதிலும் முதல் போட்டியை  (49* 19 பந்துகள் 4x4 4x6 ) போலவே 48 ரன்களுக்கு அவுட். 48 (17b 3x4 5x6) SR: 282.35 . இறுதியாக கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் அடித்தது. கடைசி 19 பந்துகளில் 56 ரன்களை வாரி வழங்கியிருந்தது பஞ்சாப்.

`அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP

ஷமி டூ ரஸல்

கெயில், அதிரடி சரவெடி ராகுல், சர்பராஸ், மயாங்க் அகர்வால் என ராயல் சேலஞ்சர்ஸின் பேட்டிங் ஆர்டர் அப்படியே பஞ்சாபுக்கு இறங்கியது. அங்கே அவர்கள் என்ன செய்வார்களோ அதையேதான் இங்கு செய்தார்கள். நம்மள வேற ரொம்ப நம்பறாய்ங்களோ என்னும் அதீத பொறுப்புணர்வுடன் இறங்கினார் கெய்ல். பஞ்சாபில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஒரு ரன்னுக்கு வெளியேற, ஒன் டவுனில் இறங்கினார் மயாங்க் அகர்வால். 
 

200 ரன்களை சேஸ் செய்யும் பொழுது கெயிலின் ரெக்கார்டு வேற கண் முன்னர் வந்துபோனது.

0 - Lost
0 - Lost
10 - Lost
76 - Lost
32 - Lost
21 - Lost

`அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP

ரஸல் பந்துவீச்சில் கெயில் 20 ரன்களுக்கு, சர்பராஸ் கான் 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, தேவைப்படும் ரன் ரேட் 13ஐ கடந்திருந்தது. மில்லரும், அகர்வாலும் எவ்வளவு அடித்தாலும் அது ரன்ரேட்டுக்குப் போதுமானதாக இல்லை. 2015 க்குப் பிறகு மயாங்க் அரைசதம் ஒன்றைப் பதிவு செய்தார்,. பஞ்சாபின் விஸ்வாச வீரரான டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் அடித்திருந்தார். மான்கட் பற்றி இவ்வளவு நடந்தும் ரஸல் பந்துவீசும் பொழுது, மயாங்க் அகர்வால் க்ரீஸைவிட்டு பல இஞ்சுகள் தள்ளித்தான் நின்று இருந்தார். கிரிக்கெட் என்பது ஒரு பேட்ஸ்மேன் ஆதிக்க விளையாட்டு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறோம்.

`அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP

அரைசதம் எடுத்தபோதும்கூட, அவர் எந்தவித செலிப்ரேசனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபின் மற்றுமொரு விஸ்வாச மீட்பர் ஷான் மார்ஷ் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ்க்கு வில்லியர்ஸ் எப்படியோ, அப்படித்தான் பஞ்சாபுக்கு மில்லரும். Right man in the wrong team! 

`அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP

உத்தப்பா, ரானா, மில்லர், அகர்வால் என நால்வர் அரைசதம் எடுத்திருந்தாலும் , ரஸலின் 48 ரன்கள்தாம் இந்தப் போட்டிக்கான வின்னிங் மொமன்ட். அதுவும் மூன்று ரன்களில் அவுட்டான ஒரு நபருக்கு இந்தப் போட்டியில் நடந்தது எல்லாம். மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கும் பொழுது ரஸல் அந்த பஞ்சாப் வீரர் யாரு, எவருன்னு தெரியல, ஆனா நன்றி என்றார். ரஸல் அதிகம் சிரித்திருப்பார்., அஷ்வின் இன்னும், அதிகமாய்க் கடுப்பாகி இருப்பார். ஆனால், எல்லாமே ரூல் புக்கில் இருக்கே அஷ்வின் என்ன செய்வது!

மேன் ஆஃப் தி மேட்ச் : ரஸல் 

ஆரஞ்சு கேப் : ரானா (131 ரன்கள் )

அதிக சிக்ஸ் : ரானா 10 (2 இன்னிங்ஸ்)