Election bannerElection banner
Published:Updated:

மூன்றே பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய பிராவோ... டெல்லி பௌலர்களுக்கு ஒரு பாடம்! #CSKvDC

மூன்றே பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய பிராவோ... டெல்லி பௌலர்களுக்கு ஒரு பாடம்! #CSKvDC
மூன்றே பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய பிராவோ... டெல்லி பௌலர்களுக்கு ஒரு பாடம்! #CSKvDC

முதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்திருந்தாலும், எதையும் அலட்டிக்கொள்ளாமல், தன் வழக்கமான பந்துவீச்சைத் தொடர்ந்தார் பிராவோ. ஷார்ட் லென்த் மற்றும் குட் லென்த்தில் பிட்சான ஸ்லோ பால்களாகவே வீசினார். அதற்கான பலன் அவரது இரண்டாவது ஓவரில் கிடைத்தது. 3 பந்து இடைவெளியில் பன்ட், இங்ரம் அவுட். டெல்லி அணியின் திட்டத்தில் பெரிய குண்டு வைத்து தகர்த்தார் பிராவோ.

வழக்கம்போல், சீக்கிரம் முடிக்க வேண்டிய போட்டியைக் கடைசிவரை இழுத்துச் சென்று வெற்றி பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மிகவும் ஸ்லோவான அந்த ஆடுகளத்தில் இப்படியான ஓர் ஆட்டத்தை எளிதில் குறைசொல்லிவிடவும் முடியாது. தோனி - கேதர் ஜாதவ் ஜோடி இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருக்கலாம். 18-வது, 19-வது ஓவருக்குள் ஆட்டத்தை முடிக்கப் பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஆடிய ஆட்டம் தவறில்லை. 

 58 பந்துகளில், 7 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்திருந்தாலும், ஆட்டம் எந்தப் பக்கமும் மாறியிருக்கும். டெல்லி அணி கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்ததும், முந்தைய நாள் ராஜஸ்தான் ராயல்ஸ், 16 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்ததும் ஞாபகம் இருக்கலாம். அதனால், இதுபோன்ற ஆடுகளங்களில் ரன்ரேட் பற்றி யோசிக்காமல் நிதானமான ஆட்டம் ஆடுவது முக்கியம். அதை அந்தக் கூட்டணி மிகச் சரியாகச் செய்திருக்கிறது. 

மூன்றே பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய பிராவோ... டெல்லி பௌலர்களுக்கு ஒரு பாடம்! #CSKvDC

தவான் ஆடியதும் கிட்டத்தட்ட இப்படியான ஆட்டம்தான். டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் ஐயர், ``ஆடுகளம் போகப்போக ஸ்லோவாகிவிடும். 170 - 180 ரன்கள் நல்ல ஸ்கோராக இருக்கும்’’ என்று சொல்லியிருந்தார். அதைத்தான் இலக்காகக் கொண்டு களமிறங்கியது டெல்லி கேபிடல்ஸ். முதல் 10 ஓவர்களில் இன்னிங்ஸைக் கட்டமைக்க நினைத்தனர். ஸ்கோர் 65-1. அடுத்த 5 ஓவர்களில் ரன்ரேட்டை உயர்த்த நினைத்தனர். 15 ஓவர்களில் 118-2. 6.5-ல் இருந்த ரன்ரேட் 7.87 வரை உயர்ந்தது. இந்தப் பிளானை சாத்தியப்படுத்தியது தவானின் அந்த நிதானமான இன்னிங்ஸ்தான். 

டெல்லி அணி இத்தனை நாள்களாக இழந்திருந்த `Anchor’ ரோலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் `கபார்.’ பன்ட், இங்ரம் போன்ற அதிரடி வீரர்கள் மிடில் ஆர்டரில் இருக்கும்போது, நல்ல தொடக்கம் இருந்தால் போதும். கடந்த சீஸனில் அது கிடைக்காமல்தான், மேக்ஸ்வெல்கூட சில போட்டிகளில் ஓப்பனராகக் களமிறங்கினார். தவான், கடந்த இரண்டு போட்டிகளிலும் நிலைத்து நின்று ஆடியிருக்கிறார்.

மூன்றே பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய பிராவோ... டெல்லி பௌலர்களுக்கு ஒரு பாடம்! #CSKvDC

47 பந்துகளில் 51 ரன்கள் என்றாலும், அந்த இன்னிங்ஸ் அற்புதமாக இருந்தது. தான் எப்போதும் ஆடாத ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்கூட ஆடினார் தவான். ஆனால், இம்ரான் தாஹிர் வீசிய வைட் கூக்ளியை, இறங்கி வந்திருந்தபோதும், கைகளை நீட்டி, கிராஸ் பேட் கொண்டு அடித்த அந்த ஸ்ட்ரெயிட் பௌண்டரி... அதுதான் ஷாட் ஆஃப் தி டே! அதேபோல், பிராவோ வீசிய புல்டாஸ் பந்தை ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடியதும் பார்க்க அழகாக இருந்தது. தவான் இந்த ஆட்டத்தைத் தொடர்வது, டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு மிகமுக்கியம். 

ஆனால், 13-வது ஓவருக்குப் பின் தவான் அடித்து ஆட முற்பட்டபோது, எல்லா பந்துகளையும் அவரால் அடித்து ஆட முடியவில்லை. சமீபத்தில் அவர் 'மிஸ்‌ரீட்' செய்துகொண்டிருப்பதுபோல் சில பந்துகளைத் தவறாகக் கணித்தார். அப்போதே ஆடுகளத்தின் தன்மையை உணரமுடிந்தது. இப்படியான ஆடுகளத்தில் அட்டகாசமான அதிரடி பெர்ஃபாமன்ஸ் காட்டியதற்காகத்தான் ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார் ஷேன் வாட்சன். 26 பந்துகளில் 44 ரன்கள். பழைய வாட்சனை கண்முன் கொண்டுவந்துவிட்டது.

மூன்றே பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய பிராவோ... டெல்லி பௌலர்களுக்கு ஒரு பாடம்! #CSKvDC

வாட்சனுக்கு டெல்லி பௌலர்கள் வீசிய லென்த்

பொதுவாக வாட்சனுக்கு பந்துவீச இரண்டு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். 

1. அவரைச் சீண்டக் கூடாது

2. ஷார்ட் பால் அறவே கூடாது

ஆனால், டெல்லி பௌலர்கள் அதைத்தான் செய்தனர். ககிசோ ரபாடா, இஷாந்த் ஷர்மா இருவரும் அவரை வம்பிழுத்ததுமட்டுமல்லாமல், ஷார்ட் பாலாக வீசி அவருக்கு விருந்து படைத்தனர். தனக்கு ஏதுவான பந்துகள் வரும்போது சும்மா இருப்பாரா வாட்சன்! வழக்கமாக மிட் விக்கெட் பக்கம் அசால்டாக புல் ஷாட் ஆடுபவர், கொஞ்சம் சிரமப்பட்டு ஃபைன் லெக் திசையில் புல் ஷாட் அடித்தார். கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஷாட்களுள் ஒன்று வாட்சனின் புல் ஷாட். சென்னையில் தவறிய அதை, டெல்லியில் கண்டுகளித்தனர் சூப்பர் கிங்ஸ் வெறியர்கள். 

மூன்றே பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய பிராவோ... டெல்லி பௌலர்களுக்கு ஒரு பாடம்! #CSKvDC

வாட்சன், தவான் பேட்டில் செய்த வித்தைகள் இருக்கட்டும். ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்னவோ பிராவோ வீசிய இரண்டு ஓவர்கள்தான். முன்பு சொன்னதுபோல், 15 ஓவர்கள்வரை என்ன இலக்கை அடைய வேண்டும் என்று நினைத்தார்களோ, அதை டெல்லி கேபிடல்ஸ் அணியினர் அடைந்துவிட்டனர். கடைசி 5 ஓவர்களுக்கான அவர்களின் திட்டம் - குறைந்தபட்சம் 50 ரன்கள். அப்படி அடித்தால், ஷ்ரேயாஷ் சொன்னதுபோல் 170 ரன்கள் வந்துவிடும். களத்தில் ரிசப் பன்ட், ஷிகர் தவான். அடுத்து காலின் இங்ரம், கீமோ பால், அக்சர் படேல் என ஹிட்டர்கள் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில், கடைசி 5 ஓவர்களில் 50 என்பது மிகவும் எளிதான இலக்கு. அதை அடித்திருந்தால் போட்டியின் முடிவு மொத்தமாக மாறியிருக்கும். 170 ரன்களை சேஸ் செய்வது சென்னைக்குச் சிரமமாக இருந்திருக்கும். அப்படியொரு கடினமான சூழ்நிலையைத் தவிர்த்த கேம் சேஞ்சர் பிராவோதான். 

மூன்றே பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய பிராவோ... டெல்லி பௌலர்களுக்கு ஒரு பாடம்! #CSKvDC

முதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்திருந்தாலும், எதையும் அலட்டிக்கொள்ளாமல், தன் வழக்கமான பந்துவீச்சைத் தொடர்ந்தார் பிராவோ. ஷார்ட் லென்த் மற்றும் குட் லென்த்தில் பிட்சான ஸ்லோ பால்களாகவே வீசினார். அதற்கான பலன் அவரது இரண்டாவது ஓவரில் கிடைத்தது. 3 பந்து இடைவெளியில் பன்ட், இங்ரம் அவுட். டெல்லி அணியின் திட்டத்தில் பெரிய குண்டு வைத்து தகர்த்தார் பிராவோ. அடுத்த ஓவரில் கீமோ பால் வெளியேறுகிறார். ரன்ரேட் குறையத் தொடங்குகிறது. ஆட்டத்தைத் தன் கையில் எடுக்க நினைத்து எட்ஜாகி வெளியேறினார். அந்த இடத்திலேயே ஆட்டம் சூப்பர் கிங்ஸ் கைக்கு மாறத்தொடங்கியது. 

டெல்லி வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடும், பிராவோவின் செயல்பாடுமே, இந்த வெற்றியின் வித்யாசத்தை உணர்த்திவிடும். ஸ்லோவான ஆடுகளத்தில், ஸ்லோ பால்களை மட்டுமே வீசினார் பிராவோ. வழக்கமாகவே அவர் அப்படித்தான் பந்துவீசுவார் என்றாலும், நேற்று `அந்த 17 ரன்’ முதல் ஓவருக்குப் பின்பும் அவர் அதைத் தொடர்ந்தது பாராட்டுக்குரியது. இரண்டு வைட் உள்பட, அவர் வீசிய 26 பந்துகளில், 12 பந்துகள், மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்துக்கும் குறைவாகவே வீசப்பட்டன. அவரது பந்துவீச்சின் சராசரி வேகம் 124 கி.மீ.

மூன்றே பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய பிராவோ... டெல்லி பௌலர்களுக்கு ஒரு பாடம்! #CSKvDC

பிராவோ வீசிய நான்கு ஓவர்களின் பிட்ச் மேப்

டெல்லி பௌலர்கள் இந்த விஷயத்தில் அப்படியே மாறுபடுகின்றனர். ரபாடாவின் சராசரி வேகம், மணிக்கு 142.8 கிலோமிட்டர். இஷாந்த் - 138.7. இத்தனைக்கும் ரபாடா 151 வரையெல்லாம் பந்துவீசினார். இதுபோன்ற ஆடுகளத்தில் இவ்வளவு வேகமாகப் பந்துவீசுவது பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவே அமையும். பவர்பிளே ஓவர்களில் ரெய்னா, வாட்சன் இருவரும் அதைப் பயன்படுத்தி எளிதாக ரன் சேர்த்து விட்டனர். அந்த இடத்திலேயே டெல்லி அடிபணிந்துவிட்டது. 

டெல்லி அணி மாற்றிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. பிளேயிங் லெவன் தேர்வு செய்வது, பௌலர்கள் ஆடுகள தன்மைக்கு ஏற்ப பந்துவீசுவது, 19-வது ஓவர் வரை மிஷ்ராவுக்கு ஓவர் மீதம் வைத்திருந்த ஸ்ரேயாஷின் கேப்டன்ஷிப் என முன்னேற வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இவையெல்லாம் நடந்தால், அடுத்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும். சென்னையைப் பொறுத்தவரை ஒரு சிக்கலும் இல்லை. மூன்றே வெளிநாட்டு வீரர்களை வைத்து கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிவிட்டனர். அவர்களை வீழ்த்துவது எதிரணிகளுக்குக் கடினமான விஷயம்தான்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு