Published:Updated:

இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி

இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி
இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி
இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை: ஐ.பி.எல். 6வது தொடரின் குவாலிபையர் 2வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை 26ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதுகிறது.

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டிராவிட் 43 ரன்களை எடுத்தார். பின்னர் ஆடிய மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

நடப்பு ஐ.பி.எல். 6வது தொடர் கடந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 9

##~~##
அணிகள் பங்கேற்று விளையாடின. கடந்த 19ஆம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. பிளேஆப் தகுதி சுற்றில் நடந்த குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்று வெளியேறியது. நேற்று கொல்கத்தாவில் நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியேறியுள்ளது.

ஐ.பி.எல். சூதாட்டம் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு அணிகளும் நாளை இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுகிறது. சென்னை அணி இரண்டு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது.

மும்பை அணி முதல்முறையாக கோப்பையை வெல்ல ஆர்வமாக இருக்கிறது. ஏற்கனவே இறுதிபோட்டியில் 2011ல் நடந்த போட்டியில் சென்னை அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை நழுவ விட்டுள்ளது. சென்னை அணியும் 2012ல் சென்னையில் நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியிடம் கோப்பையை நழுவவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.