Published:Updated:

ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்

ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்
ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்

ஆன்ரிச் நார்டே - இந்த சீஸனின் புதிய சென்சேஷனாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. பொலிஞ்சர், டிர்க் நானஸ் போல் ஒரு சென்சேஷனல் ஐ.பி.எல் பௌலரை ஒளித்துவைத்திருக்கிறது நைட்ரைடர்ஸ்.

இந்தத் தொடர் நைட் ரைடர்ஸ் அணிக்கு இப்படி ஆரம்பித்திருக்க வேண்டாம். காயத்தால் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை இழந்திருக்கிறது கே.கே.ஆர். மற்ற அணிகள் எல்லாம் பிளேயிங் லெவனைத் தேர்வுசெய்துகொண்டிருக்க, அணியில் சேர்ப்பதற்கு வீரரைத் தேடிக்கொண்டிருக்கிறது அந்த அணி. பிளேயிங் லெவனில் விளையாடப்போவது யார், அணியின் மற்ற இடங்கள் எப்படி இருக்கின்றன? மூன்றாவது முறையாக அந்த அணி கோப்பை வெல்லுமா. அலசுவோம்...

ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்

பேப்பரில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பலமான அணியாகவே இருக்கிறது கே.கே.ஆர். அதிக தொகை கொடுத்து நான்கு வெளிநாட்டு வீரர்களை வாங்கிவிட்டு மற்ற இடங்களில் அடி வாங்கியவர்கள், இந்த முறை கொஞ்சம் சுதாரித்திருக்கிறார்கள். கிறிஸ் லின், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், கார்லோஸ் பிராத்வெயிட் என நான்கு மிரட்டல் வெளிநாட்டு வீரர்களோடு, லாகி ஃபெர்குசன், ஜோ டென்லி, ஆன்ரிச் நார்டே, ஹேரி கார்னி என அட்டகாசமான டி-20 வீரர்களை வாங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஸ்டார்க் காயத்தால் பாதிக்கப்பட்டதைப்போல இந்தமுறை நடக்காது.

ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்

ஆன்ரிச் நார்டே - இந்த சீஸனின் புதிய சென்சேஷனாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த மான்சி சூப்பர் லீக் டி-20 தொடரில், விளையாடிய மூன்று போட்டிகளில் எட்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அவரது மிரட்டலான பந்துவீச்சுக்கு, பேட்ஸ்மேன்கள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினர். அந்த சூப்பர் பர்ஃபாமன்ஸ், தென்னாப்பிரிக்க அணிக்கான கதவுகளைத் திறந்தது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிறப்பாகப் பந்துவீசிக்கொண்டிருக்கிறார். பொலிஞ்சர், டிர்க் நானஸ் போல் ஒரு சென்சேஷனல் ஐ.பி.எல் பௌலரை ஒளித்துவைத்திருக்கிறது நைட் ரைடர்ஸ்.

ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்

வழக்கம்போல் நரைன் - லின் தொடக்க ஜோடியோடுதான் அந்த அணியின் பிளேயிங் லெவன் தொடங்கும். கிறிஸ் லின் சமீபகாலமாகவே நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். தேசிய அணியில் இடம் போய்விட்டது. பிக் பேஷ் தொடரிலும், இதுவரை இல்லாத சொதப்பல் ஆட்டம் ஆடியிருக்கிறார். தன் கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டெடுக்க, இந்தத் தொடர் அவருக்கு முக்கியமானது. முதல் பந்தில் இருந்தே அடிக்கத் தொடங்கும் அவரது ஆட்டிட்யூட்தான் அவருடைய மைனஸ். அதனால்தான் பல போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். மலைபோல் நம்பியிருக்கும் கொல்கத்தா அணிக்கு அவர் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. 

ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்

அதற்கடுத்து உத்தப்பா, நித்தீஷ் ராணா. இருவரும் கடந்த ஆண்டைவிட இன்னும் சற்று அதிகம் ரன் சேர்த்தால், பின்வரிசையில் வரும் அதிரடி வீரர்கள் மீதான நெருக்கடி குறையும். இருவரும் ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்தாலும், களத்தில் அதிக நேரம் நிற்கத் தவறினர். அதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நித்தீஷ் ராணாவின் தற்போதைய ஃபார்ம் கொஞ்சம் மோசமாகவே இருக்கிறது. சையது முஸ்தாக் அலி தொடரில் மிகவும் சுமாராகவே விளையாடியிருக்கிறார். முதல் இரண்டு போட்டிகளுக்குள் அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திவிடுவது நல்லது. இந்த இடம்தான் கொல்கத்தாவின் பலவீனம். உத்தப்பா, ராணா, சுப்மான் கில் யாரேனும் சரியாக விளையாடத் தவறினால், அவர்களை மாற்ற நல்ல பேக் அப் பேட்ஸ்மேன் அவர்களிடத்தில் இல்லை. சொல்லப்போனால் ரிங்கு சிங் தவிர்த்து, வேறு இந்திய பேட்ஸ்மேனே அணியில் இல்லை. 

ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்

தினேஷ் கார்த்திக் - கடந்த ஐ.பி.எல் போட்டி மிகச் சிறப்பாக அமைந்தது. ஆனால், இப்போது அப்படியொரு பெர்ஃபாமன்ஸ் போதாது. ``அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடியதில்லை. இந்திய அணியில், அவரை எப்படி நான்காவது இறக்கிவிட முடியும்?’’ என்று தமிழக முன்னாள் வீரர்களே கேட்கும் நிலையில், 40 நாட் அவுட், 50 நாட் அவுட் போன்ற ஸ்கோர்கள் போதாது. 400 ரன் சீஸனும் போதாது. முதல் இரண்டு வாரங்களுக்குள் ஓரிரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால்தான், உலகக்கோப்பையில் தன் இடத்தை அவரால் நிலைநாட்ட முடியும். 

அதேசமயம் உலகக்கோப்பை தேர்வு குறித்த நெருக்கடியை அவர் சரியாகக் கையாள்வதும் முக்கியம். சில வீரர்களுக்கு அது எதிர்வினையாற்றிவிடும். ஒரு கேப்டன் தடுமாறுவது, ஒட்டுமொத்த அணிக்கும் நல்லதல்ல. அதனால், கார்த்திக் இந்த மிகப்பெரிய நெருக்கடியைக் கூலாகச் சமாளித்தாக வேண்டும். ஆண்ட்ரே ரஸல் - காயம் அடையாமல் இருந்தால் போதும், அவர் ஆடுவதின் பலனை கொல்கத்தா அனுபவித்துவிடும். கார்லோஸ் பிராத்வெயிட் - இதுவரை ஐ.பி.எல் தொடரில் பெரிதாக சோபித்ததில்லை. இவரும் உலகக்கோப்பை அணிக்கான பிளேயிங் லெவனுக்குப் போராடும் நிலைதான் இருக்கிறது. இதுதான் இவருக்கான சரியான வாய்ப்பு. 

ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்

டாப் - 8 வீரர்களில் மூன்று பௌலர்கள் வந்துவிடுவதுதான் கொல்கத்தா அணியின் மிகப்பெரிய பலம். எந்த வகையிலும் பேலன்ஸ் தவறாது. பார்ட் டைம் பந்துவீச ராணாவும் இருக்கிறார். எந்தப் பிரச்னையும் இல்லை. பிளேயிங் லெவனின் கடைசி மூன்று இடங்களை, கடந்த ஆண்டைப்போலவே பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா பெற்றுவிடுவார்கள். நரைன் - குல்தீப் - சாவ்லா சுழல் கூட்டணி கடந்த முறை எதிர்பார்த்ததைவிட ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்துவிட்டனர். பிளே ஆஃப் சுற்றுக்கும் ஃபைனலுக்குமான இடைவெளி அங்குதான் அதிகரித்துவிட்டது. இம்முறை அதை அவர்கள் சரிசெய்ய வேண்டும். 

ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்? ஐ.பி.எல் ரவுண்ட் அப்

நாகர்கோட்டிக்கு ஏற்பட்ட காயத்தால், கடந்த ஆண்டு சில போட்டிகளில் வாய்ப்பு பெற்றார் பிரசீத் கிருஷ்ணா. இப்போதும் அதுவே அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. இளம் வீரர்கள் நாகர்கோட்டி, ஷிவம் மாவி இருவருமே காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்திருக்கிறது. மாற்று வீரராக இப்போதைக்கு சந்தீப் வாரியரை மட்டுமே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இளம் ஆந்திர பந்துவீச்சாளர் பிரித்வி ராஜ் சில வாய்ப்புகள் பெறலாம். இந்த ஒரு பௌலர் கொல்கத்தாவின் வாய்ப்புகளைச் சிதைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதில்தான் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அடங்கியிருக்கிறது. 

Photo Courtesy : twitter.com/KKRiders

அடுத்த கட்டுரைக்கு