Published:Updated:

`செம பீலிங் வித் மச்சான் தோனி, மாப்ள ரெய்னா' - முஸ்தபா... முஸ்தபா...  பாடும் ஹர்பஜன் சிங்!

மலையரசு
`செம பீலிங் வித் மச்சான் தோனி, மாப்ள ரெய்னா' - முஸ்தபா... முஸ்தபா...  பாடும் ஹர்பஜன் சிங்!
`செம பீலிங் வித் மச்சான் தோனி, மாப்ள ரெய்னா' - முஸ்தபா... முஸ்தபா...  பாடும் ஹர்பஜன் சிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள 2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் திருவிழா சென்னையில் 23 -ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. அண்மையில் ஐ.பி.எல் தொடரின் முதல் 17 போட்டிகளின் அட்டவணையை பி.சி.சி.ஐ வெளியிட்டது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த உற்சாகத்தை நேற்று நடந்த டிக்கெட் விற்பனையிலேயே காணமுடிந்தது. முதல் போட்டியில் விளையாடவுள்ள சென்னை அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெய்னா உள்ளிட்ட சில வீரர்கள் இரண்டு வாரத்துக்கு முன்பாகவே சென்னை வந்தனர். 

இந்த நிலையில் தோனி, கேதர் ஜாதவ், ஹர்பஜன் உள்ளிட்ட மற்ற வீரர்கள் அணியுடன் இணைந்துள்ளனர். இதற்கிடையே, அணியை பிரபலப்படுத்தும் வகையில் தற்போது விளம்பர ஷூட்டிங் பணிகள் நடந்து வருகின்றன. தோனி, கேதர் ஜாதவ், ஹர்பஜன், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ள வீடியோ ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹர்பஜன், ``வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல தோனி பாட்டு போட நான்விஜய், ஜாதவ் டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க. ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான். ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த சென்னையோட ஆட்டத்த" எனப் பதிவிட்டிருந்தார். 

இதேபோல் ரெய்னா உடன் உள்ள ஒருபுகைப்படத்தை பதிவிட்டு, ``நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு" என முஸ்தபா... முஸ்தபா... பாடலின் வரிகளைக் குறிப்பிட்டு, ``செம பீலிங் வித் மச்சான் தோனி, மாப்ள ரெய்னா" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.