Published:Updated:

வீராட் கோலி, ஹர்பஜன்சிங்குடன் தொடர்பு: விண்டூ தாரா சிங் வாக்குமூலம்

வீராட் கோலி, ஹர்பஜன்சிங்குடன் தொடர்பு:  விண்டூ தாரா சிங் வாக்குமூலம்
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்குடன் தொடர்பு: விண்டூ தாரா சிங் வாக்குமூலம்
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்குடன் தொடர்பு:  விண்டூ தாரா சிங் வாக்குமூலம்

சென்னை/மும்பை: வீராட் கோலி, ஹர்பஜன்சிங், மன்பிரித் கோனி ஆகிய வீரர்களுடன் தொடர்பு இருந்ததாக கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி கைதான பாலிவுட் நடிகர் விண்டூ தாரா சிங் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

மும்பை போலீசார் நடத்திய விசாரணையின்போது இதனை தெரிவித்த தாரா சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான குருநாத் மெய்யப்பன் சார்பில் தாம் ஐபிஎல் கிரிக்கெட்  சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், சூதாட்ட புகாரில் கைதான பாலிவுட் நடிகர் விண்டூ தாரா சிங் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் மெய்யப்பன் சுமார் 1 கோடி வரை இழந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில்,  ஸ்பாட் பிக்சிங்குக்காக மாடல் அழகிகளை அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

சூதாட்ட ரகசியங்களை பெறுவதற்காக சூதாட்ட தரகர்களுக்கு 2 மாடல் அழகிகளை அவர் அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த 2 அழகிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

வீராட் கோலி, ஹர்பஜன்சிங்

இந்த நிலையில் வீராட் கோலி, ஹர்பஜன்சிங், மன்பிரித் கோனி ஆகிய வீரர்களுடன் விண்டூ தாராசிங்குக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இந்த 3 பேருடன் தான் மிகவும் நெருக்கமாக இருந்ததாக விண்டூ போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வீராட் கோலி பெங்களூர் அணி கேப்டனாக உள்ளார். ஹர்பஜன் மும்பை அணியிலும், மன்பிரீத் கோனி பஞ்சாப் அணியிலும் விளையாடுகிறார்கள். இந்த 3 வீரர்களுக்கும் ஐ.பி.எல். பெட்டிங்கில் தொடர்பு உள்ளதா என்பது பற்றி எங்களுக்கு இன்னும் முழுமையாக எதுவும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீனிவாசன் மறுப்பு

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் என்ற அங்கீகாரம் உள்ளபோதிலும், அதன் நடவடிக்கைகளில் மெய்யப்பனுக்கு முறைப்படி எவ்வித தொடர்பும் இல்லை என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

##~~##
இந்நிலையில் இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பிய பின்னரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் தலைவர் பதவியிலிருந்து விலக ஸ்ரீனிவாசன் மறுத்து வருகிறார். தாம் எவ்வித தவறும் செய்யவில்லை என்றும், சூதாட்ட புகார் தொடர்பான விசாரணை முடியும் வரை காத்திருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.