Published:Updated:

ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 3 வீரர்கள் கைதாகிறார்கள்!

ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 3 வீரர்கள் கைதாகிறார்கள்!
ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 3 வீரர்கள் கைதாகிறார்கள்!
ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 3 வீரர்கள் கைதாகிறார்கள்!

புதுடெல்லி: கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய மேலும் மூன்று வீரர்களை கைது செய்யப் போவதாக டெல்லி காவல்துறை கமிஷனர் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தி்ல் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் மேலும் மூன்று வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும்,  அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதால் அவர்களை விரைவில் கைது செய்வோம் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறினார்.

மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவிர்த்து பிற கிரிக்கெட் அணிகளையும் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

##~~##
இந்த விவகாரத்தில் மற்ற அணிகளின் தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த நீரஜ் குமார், அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டால் அது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே, அவற்றை வெளியிட நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறினார்.
எனினும் தொடர்ந்து நாங்கள் எங்கள் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அதில் நாங்கள் வெற்றி அடையலாம் அல்லது தோல்வியும் அடையலாம் என்றும் நீரஜ் குமார் தெரிவித்தார்.