Published:Updated:

ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ

புதுடெல்லி: சூதாட்டத்தை தடுக்க, ஒவ்வொரு ஐபிஎல் அணியுடனும் ஊழல் தடுப்பு பிரிவு ஒன்றை அனுப்பி வைக்க உள்ளதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெற்றது அம்பலத்திற்கு வந்ததை தொடர்ந்து, எஞ்சிய ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க கோரி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த  சுதர்ஷ் சுவாஸ்தி என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

##~~##
அப்போது பிசிசிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐபிஎல் சூதாட்ட முறைகேடுகளை விசாரிக்க ஒரு நபர் கமிஷன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இனிமேல் ஐபிஎல் போட்டியில் சூதாட்ட முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு ஐபிஎல் அணியுடனும், ஊழல் தடுப்பு பிரிவு ஒன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பி வைக்கும் என்றும் தெரிவித்தார்.