Published:Updated:

ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி: ஐபிஎல் போட்டிக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட்பிக் சிங் சூதாட்டம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து, அப்போட்டியை தடை செய்யக்கோரி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர் சுதர்ஷ் சுவாஸ்தி சார்பில், வழக்கறிஞர் ஜெயின் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஐ.பி.எல். சூதாட்ட முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த விசாரணை முடியும் வரை இறுதிப் போட்டி உள்பட எஞ்சிய 4 ஆட்டங்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

##~~##
இந்நிலையில் இன்று இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்போட்டியில் பங்கேற்றுள்ள சில வீரர்கள் செய்யும் முறைகேடு காரணமாக, போட்டியையே தடை செய்ய வேண்டும் எனக் கோருவதை ஏற்கமுடியாது எனக்கூறி தடை விதிக்க மறுத்துவிட்டது.
அதே சமயம் ஐபிஎல் சூதாட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க பிசிசிஐ அமைத்துள்ள ஒரு நபர் கமிஷன், தனது விசாரணை அறிக்கையை இன்னும் 2 வார காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும். கிரிக்கெட் வாரியம் இவ்விவகாரத்தில் வருத்தப்படுவது போன்ற அணுகுமுறையை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டின் மதிப்பை காப்பது கிரிக்கெட் வாரியத்தின் கடமை.

இவ்விவகாரத்தில் உணர்ச்சிவசப்படாத அறிவியல் பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.