Published:Updated:

கரீபியன் கிங்ஸ்!

கரீபியன் கிங்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
கரீபியன் கிங்ஸ்!

கரீபியன் கிங்ஸ்!

கரீபியன் கிங்ஸ்!

கரீபியன் கிங்ஸ்!

Published:Updated:
கரீபியன் கிங்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
கரீபியன் கிங்ஸ்!
கரீபியன் கிங்ஸ்!

பிஎல் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கி கொண்டாட்டங்களுடன் அரங்கேறிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் திருவிழா. வெற்றி, தோல்வி, வலி, ஏமாற்றம், சாதனை என எண்ணற்ற உணர்ச்சிகள் கலந்திருந்தாலும் மகிழ்ச்சி ஒன்றே ஐபிஎல்லின் ஆதர்சமாய் இருக்கிறது. இந்திய வீரர்களைப் பொறுத்த மட்டில் கொண்டாட்டம் என்பது கோப்பை பரிசளிப்பின் போது நிகழ்வது தான். ஆனால், கொண்டாட்டங்களுக்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு விக்கெட் எடுத்தாலே கொண்டாட்டம் தான். கேட்ச் பிடித்தால் கிரவுண்டில் குட்டிக்கரணம் போடுவதிலிருந்து கோப்பை வெல்லும் போது கங்கம் ஸ்டைலில் ஆட்டம் போடுவது வரை எங்கும் எதிலும் கொண்டாட்டம் தான். அதே கொண்டாட்டம் தான் இவ்வாண்டு ஐபிஎல்லிலும் நிகழ்ந்தது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஏதாவது ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் தன்னை உலகிற்கு அறிவித்துக் கொண்டே இருந்தார். போட்டியின் முடிவில் இவர்கள் போடும் ஆட்டம் இந்தியன் ப்ரீமியர் லீக்கை ஒரு நொடியில் கரீபியன் ப்ரீமியர் லீக்காக மாற்றிவிடுகிறது. அதைத்தான்‌ பாமர கிரிக்கெட் ரசிகனும் விரும்புகிறான். கொண்டாட்டத்தைத் தாண்டி வெஸ்ட் இண்டீஸ் வீரர் இல்லாமல் ஒரு மேட்ச் கூட ஆடாத அளவிற்கு ஐபிஎல்லிற்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்குமான பந்தம் அடர்த்தியாகிக் கொண்டே வருகிறது. முன்பு போல் அல்லாமல் இவ்வாண்டு கொண்டாட்டத்தோடு சேர்த்து பொறுப்புணர்வுடன் ஆடத்தொடங்கி இருக்கின்றனர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.

கரீபியன் கிங்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரீபியன் கிங்ஸ்!

அல்சாரி ஜோசப்

டந்த சீசன் வரை பொல்லார்டு மட்டும் தான் மும்பையின் கரீபியன் நம்பிக்கை. அதற்கு முன்பு டுவைன் ஸ்மித் போன்ற சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இருந்தாலும் அவர்களால் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. சில சீசன்களாக பொல்லார்டும் சொதப்ப சரியான வெஸ்ட் இண்டீஸ் வீரர் இல்லாமல் தவித்த மும்பைக்கு வரமாய் வந்திருக்கிறார் அறிமுக வீரர் அல்சாரி ஜோசப். இலக்காக நிர்ணயித்த 136 ரன்களைக் கூட சேஸ் செய்யவிடாமல் 96 ரன்களில் எதிரணியை சுருட்டிய வீரர். யார்கர், பவுன்சர், ஸ்லோ பால் என வேரியேஷன்களால் விக்கெட் எடுப்பவர்‌. மும்பையின் டெத் ஓவர் கிங்ஸ் பும்ராவும், மலிங்காவும் கூட “யாரு சாமி இவன்?” எனக் கேட்கும் அளவிற்கு இவரது ஸ்பெல் இருக்கிறது. தனது முதல் டெலிவரிலேயே டேவிட் வார்னரை அவுட்டாகி அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார் ஜோசப். கடைசி வரை ஏலத்தில் விலை போகாத ஜோசப்பை நியூசிலாந்து வீரர் ஆடம் மில்னிற்கு பதிலாக எடுத்துக் கொண்ட மும்பை அணிக்கு தற்போது நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்குகிறார் ஜோசப்.  முதல் போட்டியிலேயே சோகைல் தன்வீரின் ஐபிஎல் சாதனையை அசால்ட்டாக 6/12 என முறியடித்தார். ஏற்கெனவே அதிக பலத்துடன் இருக்கும் மும்பை அணிக்கு ஜோசப்பின் வருகை அசுர பலத்தை கொடுத்துள்ளது.

கரீபியன் கிங்ஸ்!

பொல்லார்ட்

2010-ல்
இருந்து அணியில் இருக்கும் ஒரே வெஸ்ட் இண்டீஸ் வீரர். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரின் பலமாக திகழ்ந்தவர். கண்ணை மூடிக்கொண்டு மட்டையை சுழற்றினால் எதிரணிக்கு கிலி தான். அணியில் சச்சின் இருந்த போதே பொல்லார்டிற்கு ரசிகப்பட்டாளம் ஏராளம். பேட்டிங் மட்டும் அல்லாமல் பெளலிங்கிலும் ஸ்லோ பால்களாக போட்டு விக்கெட் எடுப்பது, ஃபீல்டிங்கிலும் விழுந்து விழுந்து கேட்ச் பிடிப்பது என 360° ப்ளேயராக விளங்கியவர் பொல்லார்ட் . ‌ஆனால்  கடந்த சில சீசன்களில் இவரின் பெர்மாமன்ஸ் பிலோ ஆவரேஜ் நிலையில் தான் இருந்தது. ஆனால், இந்த சீசனில் ‘கீ ப்ளேயர்’ என்னும் தகுதியை மீண்டும் பெற்றுள்ளார். முக்கியமாக பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் ஒற்றை ஆளாக நின்று 198 ரன்களை சேஸ் செய்தார். பவுண்டரிகளைக் காட்டிலும் சிக்சர்களையே அதிகம் அடித்து தனக்குள் இருக்கும் அந்த ‘விண்டேஜ்’ பொல்லார்டை மீண்டும் காண்பித்தார். அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக காலியான நிலையில் 31 பந்துகளில் 83 ரன்கள் என வெளுத்து வாங்கி தனது ஃபார்மின் மீது அதிருப்தி தெரிவித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அவரின் பீல்ட்டிங்கும் தற்போது சிறப்பாக உள்ளது. சென்னைக்கு எதிரான போட்டியில் ரெய்னா அடித்த பந்தை பவுண்டரி லைனிற்கு வெகு அருகில் இவர் பாய்ந்து பிடித்த கேட்ச் தான் ஆட்டத்தின்‌ போக்கையே மாற்றி மும்பைக்கு வெற்றியை தந்தது. இன்றளவும் இவரின் முரட்டுத்தனமான ஆட்டம் பல அணிகளுக்கு கிலியைத்தான் ஏற்படுத்துகின்றன. இதே வகையான சிறப்பான ஆட்டத்தை பொல்லார்ட் தொடரும் பட்சத்தில் மும்பையை அவ்வளவு எளிதாக யாராலும் நெருங்க முடியாது.

கரீபியன் கிங்ஸ்!

ஜோஃப்ரா ஆர்ச்சர்

பிஎல்லின் முதல் சாம்பியன் என்பதைத் தவிர வேறெதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இந்த சீசனில் ராயல்ஸின் கரீபியன் நம்பிக்கை என்றால் அது ஆர்ச்சர்தான். ஜோஃப்ரா ஆர்ச்சர் இப்போது இங்கிலாந்து வீரர்தான்  என்றாலும் இவரின் பிறப்பிடம் மேற்கு இந்தியத் தீவுகள். 

பேட்டிங்கில் ஸ்டோக்ஸ், ரகானே, பட்லர் என பெரிய நட்சத்திரங்கள் ராஜஸ்தான் ராயல்ஸில் இருந்தாலும் பெளலிங்கில் இருந்த குறையை போக்க வந்துள்ளார் ஆர்ச்சர். முக்கியமாக பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகள் போதும் அணியில் அவரின் முக்கியத்துவத்தை உணர்த்த. பவர்ப்ளே ஓவர்களாகட்டும், டெத் ஓவர்களாகட்டும் அவரின் பந்துவீச்சு சிறப்பானதாகவே இருக்கிறது. அதிக ரன்கள் விட்டுக் கொடுக்காமல் பந்துவீசுகிறார்‌. மேலும் சென்னைக்கெதிரான முதல் போட்டியில் கடைசி நேரத்தில் வந்து 11 பந்துகளில் அவர் அடித்த 24 ரன்கள் ராயல்ஸை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றது. அதன் பின்னான போட்டிகளில் அவரால் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. ஃபீல்டிங்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. சென்னைக்கு எதிரான போட்டியில் ரெய்னாவுக்கு அவர் செய்த ரன் அவுட்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. பெளலிங் ஃபீல்டிங் என கலக்கும் இந்த ஆர்ச்சர் பேட்டிங்கிலும் கொஞ்சம் மெனக்கெட்டால் ராயல்ஸின் அரணாக விளங்குவார்.

கரீபியன் கிங்ஸ்!

கீமோ பால்

டெல்லி - இந்த சீசனில் புது அடையாளத்துடன் களமிறங்கியிருக்கிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளில் டெல்லிக்கென ஆடிய கரீபியன் வீரர் என ஒருத்தரை கூட குறிப்பிட்டு சொல்ல முடியாது.  ஆனால், கீமோ பால் அதை தற்போது மாற்றியமைத்துள்ளார். ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்டுகள் மூன்று முக்கிய‌ கேட்ச்சுகள் என கலக்கி ஆட்டநாயகன் விருது பெற்றார். விக்கெட்டுகள் அதிகம் எடுக்காவிட்டாலும் எக்கனாமிக்கலாக பௌலிங் செய்வதில் இவர் கில்லி. போல்ட், மோரிஸ் என நட்சத்திர பெளலர்கள் இருந்தாலும் சூழ்நிலையைக் கருதி பந்துவீசுவது என்னவோ பால் மட்டும் தான்.

கரீபியன் கிங்ஸ்!

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயிலிற்கும் ஐபிஎல்லிற்கும் அதிரடிக்கும் இருக்கும் தொடர்பு நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப் என அணிகள் மாறினாலும் கெயிலின் அதிரடி மாறவில்லை. ஆரம்பக் காலங்களில் அத்தனை போட்டிகளிலும் அதிரடி ஆட்டம் ஆடியவர் தற்போது சில போட்டிகளில் தான் சரவெடிக்கிறார். ஆனால், ரசிகர்களை அவர் எப்பொழுதும் ஏமாற்றியதில்லை. 40 வயதை நெருங்கும் வீரரிடம் நாம் என்ன எதிர்பார்த்துவிட முடியும் என்று நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியத்தை அளிக்கிறார் கெயில். இப்போதெல்லாம் மூன்று போட்டிகளில் ஆட வேண்டிய ஆட்டத்தை ஓரே போட்டியில் ஆடி முடித்துவிடுகிறார். இந்த சீசனில் முக்கியமாக பெங்களூர் மற்றும் டெல்லிக்கு எதிரான போட்டிகளில் சிக்சர்களால் பந்தை நாலாப் பக்கமும் சிதறடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இன்றளவும் ஐந்து ஓவர்களுக்கு மேல் அவர் களத்தில் நின்றுவிட்டால் வெற்றி அவர் பக்கமே என்ற உண்மை எதிரணிக்கு நன்கு தெரிந்ததே. மேலும், கெயிலின் விக்கெட்டை எடுக்க போட்டிப் போட்டுக் கொண்டு பந்துவீசுகின்றனர் எதிரணி பெளலர்கள். ஏனெனில் கெயில் என்பது வெறும் பெயரல்ல எதிரணிக்கான சிம்மசொப்பனம். இவரோடு சேர்த்து அணியில் இருக்கும் இன்னொரு கரீபியன் வீரரான நிக்கோலஸ் பூரனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அணிக்கு பெரும்பலம்.

கரீபியன் கிங்ஸ்!
கரீபியன் கிங்ஸ்!

ஆண்ட்ரே ரஸல்

பிஎல் 2019ன் பிரம்மாண்டம். சீசனின் தொடக்கத்தில் அனைவரும் கண்களும் பிராவோ, கெயில் என வழக்கமான வீரர்களின் மேலிருக்க ஒரே ஒரு போட்டியின் மூலம் அதை தன் பக்கம் திருப்பினார் ரஸல். அதன்பின் ரசிகர்கள் அவர்மீது வைத்த கண்ணை எடுக்கவே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் ரஸலின் அதிரடியைக் காண கூட்டம் எகிறிக் கொண்டுதான் இருந்தது. கெயில், பொல்லார்ட்டின் மேல் இருந்த அந்த அதிரடிக்கான க்ரேஸ் இப்போது முழுவதும் ரஸலின் பக்கம். ஆனால், ரஸலோ கெயிலை போல் கீரிஸில் இருந்து இறங்கி வந்து ஷாட் அடிப்பதெல்லாம் இல்லை. அவரின் கால்கள் எப்பொழுதும் கீரிஸிற்கு உள்ளே ஸ்டம்பின் அருகே தான் இருக்கும். ஆனால், அவர் அடித்த பந்துகளோ 100மீட்டர்கள் தாண்டி விழும். ஒரு காலத்தில் நரைன் ஒற்றை ஆளாக அணியை காத்துக் கொண்டிருந்தார். ஆனால், தற்போது அந்த வேலையை ரஸல் செய்கிறார். ஒரு ஆட்டத்தின் ‘கேம் சேஞ்சர்’ என இவரை கூறுவதற்கு ஒரு உதாரணம் போதும். பெங்களூருக்கு எதிரான முதல் போட்டி 203 ரன்கள் இலக்கு. 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவைப்பட மட்டையை நாலாப்பக்கமும் சுழற்றியடித்தார் ரஸல். 13 பந்துகளில் 7 சிக்சர்கள் உள்பட 48 ரன்கள் அடித்து அசால்ட் காட்டினார். இந்தப் போட்டியிலிருந்து அவரைக் கண்டு பெளலர்கள் சற்று மிரளத் தொடங்கினர். எவ்வளவுதான் இலக்கு கடினமாக இருந்தாலும் தான் இருந்தால் வெற்றிக்கும் வான வேடிக்கைக்கும் பஞ்சமிருக்காது என்பது இந்த சீசனில் ரஸல் ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியின் முடிவும் சொன்னது.

கரீபியன் கிங்ஸ்!

சுனில் நரைன்:

ஒரு காலத்தில் ஒற்றை ஆளாக கொல்கத்தா அணியைத் தன் தோளில் சுமந்து கொண்டு பேட்டிங் பெளலிங் இரண்டிலும் கலக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று அடுத்தடுத்த சீசன்களில் சொதப்பலான ஆட்டம். விட்ட ஃபார்மை மீண்டும் பிடிக்க இந்த சீசனில் போராடிக் கொண்டுதான் இருந்தர். எவ்வளவு தான் இருந்தாலும் பெரிய‌ விக்கெட்டை எடுத்தாலும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தன் வேலையிலேயே குறியாய் இருக்கும் நரைன் இப்போதும் பெரும்பாலோனர்களுக்கு ஆல் டைம் ஃபேவரைட்தான். 

கரீபியன் கிங்ஸ்!

கார்லோஸ் பிராத்வொயிட்:

2016-ல் இருந்து ஐபிஎல் ஆடிக் கொண்டிருக்கிறார். இன்னும் முறையான முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை. பேட்டிங்கிலும் சரி பெளலிங்கிலும் சரி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஃபார்மிற்கு வந்தால், ரஸல், நரைன், பிராத்வொயிட் என கொல்கத்தாவிற்கும், ஷாரூக்கானிற்கும் ட்ரிபிள் தமாக்கா.

கரீபியன் கிங்ஸ்!

ஷிம்ரான் ஹிட்மேயர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ல்லாவற்றிலும் சபிக்கப்பட்ட அணியாக திகழும் ஆர்சிபிக்கு இதிலும் பெரும் பின்னடைவு தான். இவ்வளவு நாள் கெயில் அதிரடிக் காட்டிய அணியில் பெயரளவுக்கு விளையாடும் வீரர் என்றால் அது ஹிட்மேயர் மட்டும்தான். ஆர்சிபியின் அந்தம காலத்தில்தான் இந்த சீசனில்தான் ஹிட்மேயருக்கு வாய்ப்பும் வந்தது, அவரும் ஃபார்முக்கு வந்தார். 

பொ.மாரியப்பன்