பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

IPL 2021 : நீங்க அடிக்கணும்... நாங்க ரசிக்கணும்... கமான் கெயில்! #ChrisGayle

கிறிஸ் கெயில்
News
கிறிஸ் கெயில்

41 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். ''பஞ்சாப் அணியில் நம்பர் 3 வீரராக களமிறங்குவார்'' என்கிற செய்தியை கெயில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் கிறிஸ் கெய்ல் இல்லையென்றால் IPL-ல் என்டர்டெய்ன்மென்ட் இல்லை.

132 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை 61 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை. சிக்ஸர்கள் சாதனையும் கெயிலிடம்தான் இருக்கிறது.

சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் தான் அவர்கள் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்பதைக் கடந்தும் ஒரு ரசிகர்கூட்டம் இருக்கும். அதனால்தான் கெயிலை யூனிவர்சல் பாஸ் என்கிறார்கள். சில வீரர்களுக்கு மட்டும் கிரிக்கெட் என்பது இயற்கையாகவே வாய்க்கும். அவர்கள் எந்தவொரு பயிற்சியும் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அந்த நாள் அவர்களுடைய நாள் ஆவதற்கு சில நிமிடங்கள் போதுமானதாக இருக்கும்.

கிறிஸ் கெயில்
கிறிஸ் கெயில்

பவர்ஃபுல் ஹிட்டர் என்றதும் சில வீரர்களின் அதிரடி ஆட்டம் நமக்கு நினைவுக்கு வரலாம். அப்படிப்பட்ட வீரர்கள் ஒரு நாள் போட்டிகளின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப வேண்டும். குறைந்த பட்சம் டி20 போட்டியின் முதல் பந்தையேனும் பவுண்டரிக்கு அனுப்ப வேண்டும். ஆனால், டெஸ்ட் போட்டியின் முதல் பந்தை சிக்ஸுக்கு அனுப்பும் லாவகம் எல்லாம் ஒருவருக்கு மட்டுமே அப்போது வாய்த்திருந்தது. அவர் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில்.

டெஸ்ட் போட்டிகளில் முச்சதப் பட்டியலில் வீரர்களின் பெயர் நீளும். ஆனால், இரண்டு முச்சதம் என்றால் அந்தப் பட்டியல் சற்று சுருங்கிவிடும். ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதமும் அதே நிலைதான். டி20 போட்டிகளில் அதிக சதம், அதுவும் 10,000 ரன்கள் என்பதெல்லாம் கெயில் ஒருவரைத்தவிர யாருக்கு வாய்க்கும் என்பதே இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. உலகில் அதிகம் பேர் பார்க்கும் டி20 போட்டியான ஐபிஎல்லில் 349 சிக்ஸர்கள். அதுவும் 132 இன்னிங்ஸ்களில்.

ஃப்ரீலான்சர் என்னும் சொல்லாடலை அதிகம் கேட்கும் காலமிது. கெயில் ஒரு டி20 ஃப்ரீலான்சர். சிட்னி தண்டர், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், தாக்கா கிளாடியேட்டர்ஸ், பரிசால் பர்னர்ஸ், லாகூர் கலாந்தார்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், ஸ்டான்ஃபோர்டு சூப்பர்ஸ்டார்ஸ் என கெயில் விளையாடும் பல அணிகளின் பெயரை எல்லாம் அவர் எப்படி நினைவு வைத்துக் கொள்கிறார் என்பது கூட ஆச்சர்யமாக இருக்கும். அத்தனை நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விளையாடி இருக்கிறார். ஆனால், அது கெயிலுக்கு ஒரு பொருட்டாக இருப்பதே இல்லை. அந்த நாள் எப்போது தன்னுடையதாக மாறுகிறது என்பதை அவர் உணர்வதே இல்லை.

கிறிஸ் கெயில்
கிறிஸ் கெயில்

எந்தவொரு சதமோ, சாதனையோ திட்டமிட்டு செய்ததில்லை என்கிறார். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் ஜமைக்காவின் மற்றொரு உலக சூப்பர் ஸ்டாரான உசைன் போல்ட். ஒலிம்பிக் 100 மீட்டர் மின்னல் வேக கோல்ட் வின்னர் போல்ட் கெயிலுக்கு தெரிந்த அளவில் ஒரு வேகப்பந்து வீச்சாளர். ஒரு சாரிட்டி போட்டியில் இருவரும் எதிர் எதிர் அணிகளுக்கு ஆடி இருக்கிறார்கள். கெயில் இதுவரை சந்தித்ததில் சிறப்பான பவுன்சரை வீசியது போல்ட் தான் என்கிறார். விஷயம் அதுவல்ல, போல்ட் 9.58 நொடிகளில் ஓட வேண்டும் என முன் தீர்மானம் செய்து ஓடுவதில்லை. அது இயல்பாகவே நடக்கிறது என்கிறார் கெயில். ஜமைக்கா மண்ணின் மைந்தர்களுக்கு எல்லாம் இயல்பாகவே நடக்கிறது. பிற வீரர்களுக்கு கிடைக்கும் பயிற்சியோ, வாய்ப்புகளோ அவர்களுக்கு என்றும் கிடைக்கப்போவதில்லை. அதை அவர்கள் கண்டு கொள்வதுமில்லை.

ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகவும் முக்கியமான விஷயம் hand - eye co ordination. எந்தவொரு பயிற்சியும் இல்லாமல், அது நேச்சுரல் கிஃப்ட்டாக இருக்கும் வீரர்களுக்கு இது மிகவும் சுலபமாக வரும். ஷேவாக்கும், கெயிலும் பெளலர்களை அப்படித்தான் டீல் செய்வார்கள். இருவருக்கும் ஃபுட்வொர்க் என்று ஒன்று கிடையாது. பந்து வருகிறது, அதை நாம் அடிக்கிறோம் என்கிற ஒரு ரோபோட்டிக் மனநிலை மட்டுமே எஞ்சி நிற்கும். ஒரு பெளலர் தன்னை சோதிக்கிறார் என முடிவு செய்துவிட்டால், கெயில் க்ரீஸ் லைனில் இருந்து சில் இன்ச் நகர்ந்து வந்து நிற்பார். கெயிலின் ஆஜானுகுபாகு உடலுக்கும், அவரின் இந்த மேனரிஸத்துக்கும் எந்த பெளலருக்குமே சற்று நிலை குலையத்தான் செய்யும்.

Chris Gayle
Chris Gayle

அது ஐசிசி டி20 உலக கோப்பை. மேற்கு இந்தியத் தீவுகளை பெரிய அணியாய் யாரும் மதிக்காத ஒரு காலகட்டம். ஜேம்ஸ் ஃபால்க்னர் போகிற போக்கில், ‘‘எனக்கு அவர்களை எல்லாம் பெரிதாகப் பிடிக்காது’’ என ஸ்டேட்மென்ட் விட, ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் இருக்கும் அனைத்து வேற்றுமைகளைக் ( சம்பள பிரச்னை, அணியில் நிரந்தர இடம்) கடந்து ஒன்றிணைந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே நான்கு பவுண்டரிகள் அடித்து அந்த நாளை ஆரம்பித்து வைத்தார் கெயில்.

கெயிலுக்கு மிகவும் பிடித்த போட்டிகளில் இதுவும் ஒன்று. ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் 19 ரன்கள் அடித்த போதே எல்லாம் முடிந்துவிட்டது என ஆஸ்திரேலியாவுக்குத் தெரியும். இறுதி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டும். பெய்லி ஃபால்க்னரை பந்துவீச அழைக்க, ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸும் வெறியின் உச்சத்தில் இருந்தது. மூன்றாவது பந்தில் லாங் ஆஃப் திசையில் டேரன் சமி ஒரு சிக்ஸ். கெயில் அப்போதே ஆட ஆரம்பித்துவிட்டார். அடுத்த பால் மீண்டும் ஒரு சிக்ஸ். ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் குவிந்துவிட்டது. கக்னம் ஸ்டைலில் இருந்து எல்லாவற்றையும் ஆடியது அந்தக் கூட்டம். அப்போது அவர்கள் கோப்பையை வெல்லவில்லை, ஆனால், ஃபால்க்னர் பேசியது அவர்களை அவ்வளவு காயப்படுத்தியிருந்தது. ஃபால்க்னருக்கான கெயிலின் பதில் இதுதான், ‘‘சுட வேண்டும் என்றால் சுட்டுவிடு. வாய் பேசிக்கொண்டு இருக்காதே.’’

கிறிஸ் கெயில்
கிறிஸ் கெயில்

அது ஐசிசி டி20 உலக கோப்பை. மேற்கு இந்தியத் தீவுகளை பெரிய அணியாய் யாரும் மதிக்காத ஒரு காலகட்டம். ஜேம்ஸ் ஃபால்க்னர் போகிற போக்கில், ‘‘எனக்கு அவர்களை எல்லாம் பெரிதாகப் பிடிக்காது’’ என ஸ்டேட்மென்ட் விட, ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் இருக்கும் அனைத்து வேற்றுமைகளைக் ( சம்பள பிரச்னை, அணியில் நிரந்தர இடம்) கடந்து ஒன்றிணைந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே நான்கு பவுண்டரிகள் அடித்து அந்த நாளை ஆரம்பித்து வைத்தார் கெயில்.

கெயிலுக்கு மிகவும் பிடித்த போட்டிகளில் 53 (35b 6x4 2x6) SR: 151.42 இதுவும் ஒன்று. ஸ்டார்க் வீசிய 19 ஓவரில் 19 ரன்கள் அடித்த போதே எல்லாம் முடிந்துவிட்டது என ஆஸ்திரேலியாவுக்குத் தெரியும்.  இறுதி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டும். பெய்லி ஃபால்க்னரை பந்துவீச அழைக்க, ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸும் வெறியின் உச்சத்தில் இருந்தது. மூன்றாவது பந்தில் லாங் ஆஃப்  திசையில் சமி ஒரு சிக்ஸ். கெயில் அப்போதே ஆட ஆரம்பித்துவிட்டார். அடுத்த பால் மீண்டும் ஒரு சிக்ஸ். ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் குவிந்துவிட்டது. கக்னம் ஸ்டைலில் இருந்து எல்லாவற்றையும் ஆடியது அந்தக் கூட்டம். அப்போது அவர்கள் கோப்பையை வெல்லவில்லை, ஆனால், ஃபால்க்னர் பேசியது அவர்களை அவ்வளவு காயப்படுத்தியிருந்தது. ஆண்டாண்டுகாலமாய் அடிமைப்பட்டு இருந்த கூட்டம் ஒன்று, வெள்ளையாய் இருப்பவர்களைப் பார்த்து, வென்று அவர்களின் மீது ஏறி அமர்ந்து கொக்கானி காட்டும் தருணம் அது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரிக்கெட் பிடிக்க ஆரம்பித்ததே அப்படித்தான். ஃபால்க்னருக்கான கெயிலின் பதில் இதுதான், ‘‘சுட வேண்டும் என்றால் சுட்டுவிடு. வாய் பேசிக்கொண்டு இருக்காதே.’’

IPL Gayle Sixers
IPL Gayle Sixers

புனே வாரியர்ஸ்க்கு எதிராக கெயில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக அடித்த 175 ரன்கள். அந்தப் போட்டியைப் பார்த்த யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. பால் கணக்கில் கெயில் சரியாக 11 ஓவர்கள் பிடித்து இருந்தார். பெளலர்கள் நொந்தது தனிக்கதை என்றால், கெயிலின் வேகத்தை கட்டுப்படுத்த தானே களத்தில் இறங்கிய ஆரோன் ஃபிஞ்சின் நிலைமை தான் இன்னும் மோசம். ஒரு ஓவரில் 29 ரன்கள். டீப் விக்கெட்டில் இரண்டு சிக்ஸ், லாங் ஆனில் இரண்டு சிக்ஸ். அலி முர்தாஸாவின் முதல் ஓவர் 17 ரன்கள் என்றால், இரண்டாம் ஓவரின் இறுதியில் அவரது பெளலிங் கார்டு 45 என்றானது. புனேவின் பயிற்சியாளரான ஆலன் டொனால்டு அந்தப் போட்டியை இவ்வாறு குறிப்பிட்டார், ‘‘அனைத்து வீரர்களின் முகத்திலும் பயத்தை மட்டுமே பார்த்தேன். அப்படியொரு ஆக்ரோஷமான ஆட்டத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அடுத்த போட்டிக்கு இவர்களை எப்படி தயார்படுத்துவேன் என்றே தெரியவில்லை.’’ அது தான் கெயில். அந்தப் போட்டியில் மட்டும் கெயில் அடித்தது 17 சிக்ஸர்கள்.

ஐபிஎல் என்பது கெயிலைப் பொருத்தவரையில், தான் கனவிலும் எதிர்பார்க்காத ஒரு பணத்தை அணியின் உரிமையாளர்கள் தருகிறார்கள். அதற்கு நியாயம் சேர்க்காமல் பென்ச்சை தேய்ப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. கெயிலுக்கு இந்தியா பிடிக்க மற்றுமொரு காரணம், இங்கிருக்கும் ரசிகர்கள். ஒரு சமயம், கெயில் அடித்த ஒரு சிக்ஸ் அரங்கில் இருந்த ஒரு சிறுமியின் மூக்கை பதம் பார்த்தது. போட்டி முடிந்ததும் கெயில் மருத்துவமனைக்கு விரைகிறார். அந்தக் குழந்தையைப் பார்த்து தேம்பி தேம்பி அழுகிறது அந்த மெகா சைஸ் குழந்தை. அந்தச் சிறுமி சிரித்துக்கொண்டே இருந்தாராம். அதைவிட வேடிக்கை, கெயிலின் அடுத்த போட்டியில் அவர் பார்த்த ஒரு ரசிகரின் பேனர், ‘Please Hit me’

அதீத குடிபோதையில் பாழாய்ப்போன அண்ணன்தான் கெயிலுக்கான எச்சரிக்கை மணி. ‌ உணவில்லாத நாள்களில் ஒரு நாள் தான் பிறந்தநாளும். சிறப்பான உணவு கிடைக்கும் ஒரே நாள் கிறிஸ்துமஸ். அவ்வளவு வறுமை. வழக்கம் போல தன் கேப்டனிடம் கடனாக அவரது English பேட்டை கேட்க சதம் அடித்தால் வைத்துக்கொள் என்கிறார் நக்கலாக. ஜமைக்காவின் ரோலிங்டனில் வெறும் கால்களில் சுற்றித் திரியும் ஒரு சிறுவனுக்கு தோற்பதற்கு எதுவுமில்லை. சதமடிக்கிறார்... கெயிலுக்கு பேட் சொந்தமாகிறது. அதன் பின் இந்த வாழ்க்கையும்!

Chris Gayle
Chris Gayle

சில நாடுகளில் கெயில் போன்ற உலகப்புகழ் வீரர்களுக்கு இன்னும் ஓட்டலில் ரூம் தரப்படுவதில்லை. நைட் கிளப்களில் கெயில் நிறத்தில் இருப்பவர்களை உள்ளே அவர்கள் அனுமதிப்பதில்லை. கெயிலின் அத்தனை சாதனைகளும் கூட அந்தக் கதவுகளை ஏனோ திறப்பதில்லை.

கெயில் பார்த்து வியந்த வீரர் அவர். டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடிக்கும் போது அமைதியாக அவர் இருக்கிறார். அந்த போட்டிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். கெயில் அவுட்டானதும் தான் அவர் நிம்மதி கொள்கிறார். கெயிலால் என்றும் மறக்க முடியாத சம்பவம் அது.

ஒரு குறிப்பிட்ட போட்டியில் நாம் தான் பாஸ் என்பதற்கு நாம் எப்போதும் எப்படி விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. நமக்கு அடுத்து அந்தப் பட்டியலில் இருப்பவரின் சாதனைதான், நாம் எவ்வளவு பெரிய டான் என்பதை உணர்த்தும். ஆம், ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர் வரிசையில் கெயிலுக்கு அடுத்து இருப்பது ஏபிடி. கெயிலை விடவும் 38 போட்டிகள் அதிகம் விளையாடி இருக்கிறார். ஆனால், 133 சிக்ஸர்கள் பின் தங்கி இருக்கிறார். லாராவுக்கு அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 10,000 ஒரு நாள் ரன்களை அடித்தவர் கெயில்.

Life starts at forty gayle. Hit us soon!