Published:Updated:

5 கோடி பெற்றுத்தந்த 5 சிக்ஸர்கள்... 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 15 வயது வீரர்..! #IPLAuction

5 கோடி பெற்றுத்தந்த 5 சிக்ஸர்கள்... 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 15 வயது வீரர்..! #IPLAuction

சமீப காலமாகச் சிறப்பாக விளையாடிவரும் தூபே, எப்படியும் ஓர் அணியால் வாங்கப்பட்டிருப்பார். ஆனால், இவ்வளவு தொகை போயிருக்குமா தெரியவில்லை. ஆனால், அந்த ஐந்து பந்துகள் அவருக்கு 5 கோடியைப் பெற்றுத்தந்துவிட்டன.

5 கோடி பெற்றுத்தந்த 5 சிக்ஸர்கள்... 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 15 வயது வீரர்..! #IPLAuction

சமீப காலமாகச் சிறப்பாக விளையாடிவரும் தூபே, எப்படியும் ஓர் அணியால் வாங்கப்பட்டிருப்பார். ஆனால், இவ்வளவு தொகை போயிருக்குமா தெரியவில்லை. ஆனால், அந்த ஐந்து பந்துகள் அவருக்கு 5 கோடியைப் பெற்றுத்தந்துவிட்டன.

Published:Updated:
5 கோடி பெற்றுத்தந்த 5 சிக்ஸர்கள்... 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 15 வயது வீரர்..! #IPLAuction

ஷிம்ரான் ஹிட்மேயர், சாம் கரண், ஜெய்தெவ் உனத்கட் போன்ற வீரர்கள் எதிர்பார்த்ததுபோல் கோடீஸ்வரர்களாக, யாருமே எதிர்பார்க்காத வகையில் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன சில இளம் நட்சத்திரங்கள். வருண் சக்ரவர்த்தி, ஷிவம் தூபே, சிம்ரன் சிங், பிரயாஸ் ராய் பர்மான் என பல உள்ளூர் வீரர்கள் 2019 ஐ.பி.எல் ஏலத்தில் பெரும் தொகைக்கு ஏலம் போயிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏலம் போகாத மலிங்கா, இஷாந்த் ஷர்மா போன்ற வீரர்கள் இந்த முறை ஏலம் போக, அலெக்ஸ் ஹேல்ஸ், மெக்கல்லம் போன்ற நட்சத்திர வீரர்களை யாரும் எடுக்க முன்வரவில்லை. இப்படி வழக்கம்போல் இந்த ஏலத்திலும் பல ஆச்சர்யங்கள் #IPLAuction

11 ஆண்டுகள் ஐ.பி.எல் ஏலத்தை நடத்திய ரிச்சர்ட் மேட்லி இந்த முறை ஏலத்தை நடத்தவில்லை. அவருக்குப் பதில் ஹூக் எட்மீடஸ் இந்த ஏலத்தை நடத்தினார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காஸ்ட்லி வீரர் பட்டத்தை ஜெய்தேவ் உனத்கட் பெற்றுள்ளார். மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே 8.4 கோடி ரூபாய் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. அவரை வாங்குவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக ஆர்வம் காட்டியது. ராஜஸ்தான் அணியோடு தொடர்ந்து போட்டிபோட்டது. ஆனால், அவர்களின் இருப்புத் தொகையான 8.4 கோடியை உனத்கட் எட்டிவிட்டதால், அவர்களால் அதற்கு மேல் கேட்கமுடியவில்லை. ராஜஸ்தான் அவரை மீட்டுக்கொண்டது. உனத்கட் அதிக விலைக்குப் போனது பெரிய ஆச்சர்யமில்லை. ஆனால், அதே தொகைக்கு ஏலம் போய் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தார் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி.

5 கோடி பெற்றுத்தந்த 5 சிக்ஸர்கள்... 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 15 வயது வீரர்..! #IPLAuction

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`மிஸ்ட்ரி' ஸ்பின்னர் என்ற அடையாளம் கொண்டிருந்த வருணை வாங்க 5 அணிகள் போட்டிபோட்டன. சென்னை அணி, இந்த முறையும் போதிய பணம் இல்லாததால் பாதியில் பின்வாங்கியது. டெல்லி, ராஜஸ்தான் அணிகள் ஒருகட்டத்தில் ஒதுங்கிக்கொள்ள, கிங்ஸ் லெவன், நைட்ரைடர்ஸ் அணிகள் தொடர்ந்து போட்டி போட்டன. கிட்டத்தட்ட பாதி அணியை வாங்கவேண்டிய நிலையில், வெறும் 10.4 கோடி மட்டுமே கையிருப்பாக இருந்தபோதும், 8.2 கோடிவரை போட்டியிட்டது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். அவரை எடுக்கவேண்டும் என்பதில் அவ்வளவு தீர்க்கமாக இருந்தார் தினேஷ் கார்த்திக். ஆனால், அஷ்வின் கேப்டனாக இருக்கும் பஞ்சாப் அணி அதற்கு விடவில்லை. 8.4 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன uncapped வீரர் இவர்தான்!

இந்த ஏலத்தில், கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் கவலையையும் நிவர்த்தி செய்தது மும்பை இந்தியன்ஸ். யுவ்ராஜ் சிங் முதல் கட்ட ஏலத்தில் விலைபோகாததால், அவரது ஐ.பி.எல் சகாப்தம் முடிந்துவிட்டது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், இரண்டாவது சுற்றில், அவரை அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு வாங்கி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ். பஞ்சாப், புனே, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு விளையாடியுள்ள யுவ்ராஜ், இப்போது தன் ஆறாவது அணியில் இணைந்துள்ளார்.

5 கோடி பெற்றுத்தந்த 5 சிக்ஸர்கள்... 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 15 வயது வீரர்..! #IPLAuction

உலகக் கோப்பை பயிற்சிக்காக, ஐ.பி.எல் முடியும் முன்னரே சென்றுவிடுவார்கள் என்பதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணி வீரர்களை எடுப்பதில் அனைத்து அணிகளும் தயக்கம் காட்டின. சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ, ஹென்ரிச் கிளாசன் தவிர்த்து மற்ற வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை. கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஹஷிம் அம்லா போன்ற முன்னணி வீரர்கள் பலரும் ஏலம் போகவில்லை. அதேசமயம், இந்த தொடர் முழுதும் ஆடுவார்கள் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலரும் ஐ.பி.எல் அணிகளால் வாங்கப்பட்டனர்.

இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரான் ஹிட்மேயரை, பெங்களூரு அணி 4.2 கோடிக்கு வாங்கியது. மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரண் அதே விலைக்கு கிங்ஸ் லெவன் அணியால் வாங்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி-20 கேப்டன் கார்லோஸ் பிராத்வெயிட்டை 5 கோடி ரூபாய்க்குக் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வாங்கியது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பட்டையைக் கிளப்பிய இளம் இங்கிலாந்து வீரர் சாம் கரண் 7.2 கோடிக்கு ஏலம் போனார். அவரை கிங்ஸ் லெவன் அணி வாங்கியது. பலமுறை ஐ.பி.எல் ஏலத்தில் இடம்பெற்றிருந்தும், ஒருமுறைகூட விளையாடாத தென்னாப்பிரிக்க வீரர் காலின் இங்க்ரம் முதல் முறையாக, ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோனார். அவரை 6.4 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் (டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய பெயர்) அணி வாங்கியது. இவர் தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் அணியில் ஆடமாட்டார் என்பதால், இவரை வாங்க பல அணிகள் போட்டி போட்டன.

5 கோடி பெற்றுத்தந்த 5 சிக்ஸர்கள்... 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 15 வயது வீரர்..! #IPLAuction

இந்த ஏலத்தில், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்குக் கடும் கிராக்கி இருந்தது. உனத்கட் மட்டுமல்லாமல், முகமது ஷமி, மோஹித் ஷர்மா ஆகியோருக்கும் நல்ல போட்டி நிலவியது. ஷமியை 4.8 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. 5 கோடி கொடுத்து, மோஹித்தை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்தது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். கடந்த ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாத வருண் ஆரோன், 2.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இஷாந்த் ஷர்மாவை டெல்லி அணி 1.1 கோடி கொடுத்து வாங்கியது. பரிந்தர் ஸ்ரனை (3.4 கோடி) மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்தது.

ஏற்கெனவே, நிறைய வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டிருந்த மும்பை அணி, கடந்த ஆண்டு தங்களின் பந்துவீச்சு ஆலோசகராக இருந்த லசித் மலிங்காவை மீண்டும் ஏலத்தில் எடுத்தது. ஆசிய கோப்பை தொடரில் கம்பேக் கொடுத்து, சிறப்பாகச் செயல்பட்டதால், அவர்மீது நம்பிக்கை வைத்து அந்த அணி இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால், டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் போன்ற சீனியர் வீரர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. பாகிஸ்தான் சூப்பர் லீகில் ஏலம் போகாத பிரெண்டன் மெக்கல்லம், இங்கும் ஏலம் போகவில்லை.

5 கோடி பெற்றுத்தந்த 5 சிக்ஸர்கள்... 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 15 வயது வீரர்..! #IPLAuction

நேற்று முன்தினம், பரோடா அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து அசத்திய மும்பை வீரர் ஷிவம் தூபே, 5 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார். அவரை வாங்க டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், மும்பை அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. சமீப காலமாக சிறப்பாக விளையாடிவரும் தூபே, எப்படியும் ஓர் அணியால் வாங்கப்பட்டிருப்பார். ஆனால், இவ்வளவு தொகை போயிருக்குமா தெரியவில்லை. ஆனால், அந்த ஐந்து பந்துகள் அவருக்கு 5 கோடியைப் பெற்றுத்தந்துவிட்டன.

இந்த ஏலத்தின் இன்னோர் ஆச்சர்யம் : இளம் ஐ.பி.எல் வீரர் பிரயாஸ் ரே பர்மான். 15 வயதேயான இந்த ஆல்ரவுண்டரை 1.5 கோடி ரூபாய்  கொடுத்து வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ். கடந்த விஜய் ஹசாரே சீசனில், பெங்கால் அணிக்காக அறிமுகமான இவர் லெக் ஸ்பின்னர். இதுவரை பெரிதாக தன்னை நிரூபிக்காவிட்டாலும், ஐ.பி.எல் தொடரில் ஆடும் மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றுவிட்டார் இந்த இளம் வீரர்!

நேற்று நடந்த முடிந்த இந்த ஏலத்தில், மொத்தம் 60 வீரர்கள் ஐ.பி.எல் அணிகளால் வாங்கப்பட்டனர். அவர்களில் 40 பேர் இந்திய வீரர்கள். இந்த 60 வீரர்களை வாங்க, எட்டு அணிகளும் மொத்தமாக 106.8 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism