Published:Updated:

தவானின் டெல்லி ரிட்டர்ன்... ஆர்.சி.பி-யின் அதகள ஷாப்பிங்... இது ஐ.பி.எல் டிரான்ஸ்ஃபர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தவானின் டெல்லி ரிட்டர்ன்... ஆர்.சி.பி-யின் அதகள ஷாப்பிங்... இது ஐ.பி.எல் டிரான்ஸ்ஃபர்!
தவானின் டெல்லி ரிட்டர்ன்... ஆர்.சி.பி-யின் அதகள ஷாப்பிங்... இது ஐ.பி.எல் டிரான்ஸ்ஃபர்!

தவானின் டெல்லி ரிட்டர்ன்... ஆர்.சி.பி-யின் அதகள ஷாப்பிங்... இது ஐ.பி.எல் டிரான்ஸ்ஃபர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளார் ஷிகர் தவான். 2019 சீசனுக்கு முன்பான டிரான்ஸ்ஃபர் விண்டோவில் தவானை ஒப்பந்தம் செய்யுள்ளது டெல்லி அணி. அவர் மட்டுமல்லாமல் டி காக், விஜய் ஷங்கர், ஸ்டாய்னிஸ் எனப் பல வீரர்கள் அணி மாறிக்கொண்டிருக்கிறார்கள். 

ஐ.பி.எல் தொடரில் ஏலம் தவிர்த்து, Transfer Window மூலம் வீரர்கள் அணி மாறுவது வழக்கம். இது இரண்டாவது சீசனிலிருந்து நடைமுறையில் இருக்கிறது. ஒரு சீசன் முடிந்து, அடுத்த தொடருக்கான ஏலம் நடக்கும்வரை ஒரு டிரான்ஸ்ஃபர் விண்டோ நடைமுறையில் இருக்கும். ஏலம் முடிந்ததும் தொடங்கும் இரண்டாவது விண்டோ, போட்டி தொடங்கும் ஒரு வாரம் முன்னர்வரை நடைமுறையில் இருக்கும். கடந்த ஆண்டு புதிதாக `மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் விண்டோ'வை அறிமுகம் செய்தது ஐ.பி.எல் நிர்வாகம். தொடருக்கு நடுவிலேயே குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வீரர்களை அணிகள் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், கடந்த சீசனில் அப்படி எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்நிலையில் 2019 ஆண்டுக்கான முதல் டிரான்ஸ்ஃபர் விண்டோவில் சில அணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுள் ஒருவரான டி காக்கை பெங்களூரு அணி எக்ஸ்சேஞ்ச் செய்துள்ளது. 2.8 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினரால் ஏலம் எடுக்கப்பட்ட டி காக், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். இதுவரை பெங்களூரு அணிக்காக 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள டி காக், 201 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கெனவே, இஷான் கிஷான், ஆதித்யா தாரே என இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ள நிலையில், டி காக் இணைந்திருப்பதன் காரணம் புரியவில்லை. சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிய நிலையில் அவர் எப்படியும் தன் ஓப்பனிங் ஸ்லாட்டைத் தக்கவைத்துக்கொள்வார். அப்படி இருக்கும்போது டி காக், ஈவின் லூயிஸுக்கான மாற்றாக இருக்கவேண்டும். அப்படி இல்லையேல் இவரே மாற்று வீரராக இருக்கவேண்டும். ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மாற்று வீரராக அமர்வது ஐ.பி.எல் தொடருக்கு நல்லதல்ல. 

டி காக்குக்கு பதிலாக மும்பை அணியிலிருந்து  வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் (2.2 கோடி), சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா (50 லட்சம்) ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலும் அதிரடியாக களம் இறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கோப்பையை நழுவவிடுவது வழக்கம். 2018 சீசனில், அவர்களின் ஓப்பனிங்  பார்ட்னர்ஷிப்கள் அனைத்துமே சொதப்பல். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரண்டன் மெக்கலம் சோபிக்காத நிலையில், அணியிலிருந்து டி காக்கை வெளியேற்றிய ஆர்.சி.பியின் திட்டம் என்ன என்பது தெரியவில்லை.

அதேசமயம் ஒரு நல்ல வியாபாரமும் செய்துள்ளது ஆர்.சி.பி. மந்தீப் சிங்குக்குப் பதிலாக ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸை ஒப்பந்தம் செய்துள்ளது. 2018 ஐபிஎல் சீசனில், 252 ரன்கள் எடுத்து ஆர்.சி.பியின் மூன்றாவது லீடிங் ரன் ஸ்கோரரான மந்தீப் சிங், கிங்ஸ் லெவன் அணியில் இணைந்துள்ளார். ஏலத்தின் போது 6.20 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியில் தக்க வைக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், பெங்களூருவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் பங்கேற்ற ஸ்டாய்னிஸ், வெறும் 99 ரன்கள்தான் எடுத்தார். காஸ்ட்லியான ப்ளேயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால், டிரான்ஸ்ஃபர் செய்ய பஞ்சாப் அணி முடிவு செய்துள்ளது. ஆனால், சரியான பௌலிங் ஆப்ஷன், மிடில் ஆர்டர் இல்லாமல் தவிக்கும் பெங்களூரு அணிக்கு இது பாசிடிவ்தான். அதேசமயம் ஏற்கெனவே அங்கு இருக்கும் கோரி ஆண்டர்சன், காலின் டி கிராந்தோம் ஆகியோர் குறித்து விரைந்து முடிவெடுக்கவேண்டும். வெறும் ஆல் ரவுண்டர்களை வைத்துக்கொண்டும் கோப்பை வாங்க முடியாதே! 

இந்த சீசனின் மிகப்பெரிய டிரான்ஸ்ஃபர் தவான். ஐபில் 11-வது சீசனில், சன்ரைஸர்ஸ் அணிக்காக விளையாடிய ஷிகர் தவான், பங்கேற்ற 16 போட்டிகளில் 497 ரன்கள் விளாசி, அணியின் இரண்டாவது லீடிங் ஸ்கோரராக இருந்தார். 5.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட தவான், ஹைதராபாத் அணியிலிருந்து மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. விஜய் சங்கர் (3.2கோடி), ஷபாஸ் நதீம் (3.2 கோடி), அபிஷேக் ஷர்மா (55 லட்சம்) ஆகியோர் ஹைதராபாத்துக்கு மாற, தவான் டெல்லி அணியுடன் இணைந்துள்ளார். ஹைதராபாத்தின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்த தவான், 11 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். 

இந்த டிரான்ஸ்ஃபர் இரண்டு அணிகளுக்குமே சாதகம்தான். பிரித்வி - தவான் எனப் பலமான ஓப்பனிங் கூட்டணி டெல்லி அணிக்கு அமையும். தவானின் இடத்தை, தடைக்குப் பிறகு திரும்பும் வார்னர் நிரப்பி விடுவார். அதேசமயம் விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா இருவராலும் அவர்களின் பலவீனமான ஏரியாவாக இருந்த மிடில் ஆர்டர் பலப்படும். U-19 ஆல்-ரவுண்டராக அசத்திய அபிஷேக் ஷர்மா, டில்லி டேர்டெவில்ஸ் அணிக்காகப் பங்கேற்ற அறிமுகப் போட்டியில் வெறும் 19 பந்துகளில் 46* ரன்கள் விளாசினார். ஷபாஸ் நதீப் இருப்பதால் ஸ்பின் ஆப்ஷனும் அதிகரிக்கும், ரஷீத் கான் மீதான நெருக்கடியும் குறையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு