Published:Updated:

ஹோம் கெத்து கொல்கத்தா... நோ பட்லர் ராஜஸ்தான்... எலிமினேட்டர் யார்? #KKRvRR

ஹோம் கெத்து கொல்கத்தா... நோ பட்லர் ராஜஸ்தான்... எலிமினேட்டர் யார்? #KKRvRR

ஹோம் கெத்து கொல்கத்தா... நோ பட்லர் ராஜஸ்தான்... எலிமினேட்டர் யார்? #KKRvRR

ஹோம் கெத்து கொல்கத்தா... நோ பட்லர் ராஜஸ்தான்... எலிமினேட்டர் யார்? #KKRvRR

ஹோம் கெத்து கொல்கத்தா... நோ பட்லர் ராஜஸ்தான்... எலிமினேட்டர் யார்? #KKRvRR

Published:Updated:
ஹோம் கெத்து கொல்கத்தா... நோ பட்லர் ராஜஸ்தான்... எலிமினேட்டர் யார்? #KKRvRR

சென்னை பிளே ஆஃப் வரக் காரணம் என்ன? வாட்சன் - ராயுடு சூப்பர் ஓப்பனிங், தோனியின் அதிரடி, தீபக் சஹார் சூப்பர் பௌலிங்...
சன்ரைசர்ஸ்..? வில்லியம்சனின் ஆசம் பேட்டிங், ஆல்ரவுண்டர் ஷகிப், புவி - ரஷித் - கௌல் கொண்ட வெறித்தன பௌலிங் யூனிட்..
கொல்கத்தா..? நரைனின் சுழல் + காட்டுச்சுத்து, டி.கே-வின் கூல் பேட்டிங், ரஸ்ஸல்
ராஜஸ்தான்..? பட்லர், பட்லர், பட்லர்!

மொத்தமாகக் காலியாகியிருந்த அணியைக் கரைசேர்த்த அந்த ஒற்றை ஆளும் இல்லாமல், நைட் ரைடர்ஸை அதன் சொந்த மண்ணில் எலிமினேட்டரில் எதிர்கொள்ளவிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்தப் போட்டியில் வென்று இறுதிப் போட்டியை நெருங்கப் போவது யார்? தோற்று, தொடரிலிருந்து வெளியேறப்போவது யார்? #KKRvRR

டி.கே vs ரஹானே: வித்தியாச அணுகுமுறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரு அணிகளின் கேப்டன்களின் அணுகுமுறையிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. தன் அணியின் பேட்டிங் ஆர்டர் இதுதான் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார் தினேஷ் கார்த்திக். நரைன் அடிக்கும் ஒவ்வொரு பௌண்டரியும் அணிக்கு போனஸ் என்பதால், கம்பீர் செய்த மாற்றத்தில் கைவைக்காமல் தானும் அதைத் தொடர்ந்தே வருகிறார். ஆனால், ரஹானே அடிக்கடி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை மாற்றிக்கொண்டே இருக்க, ராஜஸ்தான் அணிக்கு இன்று வரை ஒரு நிலையான தொடக்க ஜோடி இல்லை. ஐ.பி.எல் தொடரில் ஓப்பனிங்கில் இறங்கியபோதுதான் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால், ரோஹித் ஷர்மாவைப் போல் கேப்டன் பதவி வந்ததிலிருந்து இவரும் ஓப்பனிங் இறங்கத் தயங்குகிறார். 

ராகுல் திரிபாதியையும் சில போட்டிகளுக்குப் பிறகே அந்த இடத்தில் இறக்கினார். ஒரு போட்டியில் பென் ஸ்டோக்ஸ், ஒரு போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் என ஆட்டத்துக்கு ஆட்டம் `அன்பிரெடிக்டபிள்' அஷ்வினாக மாறிக்கொண்டிருக்கிறார் அஜிங்க்யா! தொடர்ந்து 5 போட்டிகளில் அரைசதம் அடித்த பட்லர் இல்லை.. தங்கள் அணியைக் கரைசேர்த்த ஓப்பனிங் ஸ்லாட்டில் ஓட்டை... இதுபோன்ற முக்கியமான தருணத்தில் அங்கு பரிசோதனை முயற்சிகள் செய்து பார்ப்பது நல்லதல்ல. அதை ரஹானே உணர்ந்துகொள்ளவேண்டும். திரிபாதி உடன் அவரே ஓப்பனிங் இறங்குவதுதான் சரியான முடிவாக இருக்கும். வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஈடன் ஆடுகளத்தில் அவரது அணுகுமுறை அணிக்குக் கைகொடுக்கலாம். 

பேட்ஸ்மேன்களாகவும் இருவரும் இரு துருவங்களாகவே தெரிகிறார்கள். 14 ஆட்டங்களில் 324 ரன்கள் மட்டுமே (சராசரி : 27) அடித்துள்ள ரஹானே, ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியைத் தவிர்த்து வேறு எந்தப் போட்டியின் முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கவேண்டிய நெருக்கடி அவரைத் தன் `நேச்சுரல் கேம்' ஆடவிடாமல் தடுக்கிறது. டி.கே - வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார். அவரது சிறந்த ஐ.பி.எல் சீசன் இதுவாகத்தான் இருக்கும். வெறும் 19 பேர் கொண்ட அணியை நன்றாகவே வழிநடத்தியதோடு, `கேப்டன் எப்படி விளையாடவேண்டும்' என்பதற்கு உதாரணமாகவும் விளங்குகிறார். பல போட்டிகளில் கடைசிவரை நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற கார்த்திக், 14 போட்டிகளில் 438 ரன்கள் (சராசரி : 54.75) எடுத்து அசத்தியுள்ளார். இவரைப் போல் கேப்டன் இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே தன் அணியை ரஹானே கரைசேர்க்க முடியும். 

பேட்டிங் எப்படி?

ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை திரிபாதி, கிளாசன் இருவரையும் நம்பலாம். தொடக்கத்தில் பட்டையைக் கிளப்பிய சஞ்சு சாம்சன் அப்படியே ஆஃப் ஆகிவிட்டார். அவரும் ரஹானேவைப் போல் தன் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறார். அவர்கள் இருவருமே இன்று தங்கள் கேம் பிளானை மாற்றிக்கொள்ளவேண்டும். அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் டாப் ஆர்டர் ஜொலித்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொடர்ச்சியாகச் சொதப்பிய டார்சி ஷார்ட் பக்கம் ரஹானே மீண்டும் திரும்பாமல் இருப்பது நல்லது. 

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் யாரேனும் ஒருவர் கைகொடுத்துவிடுகிறார். கிறிஸ் லின் தன் 9 கோடி ரூபாய் தொகைக்கு இன்னும் நியாயம் சேர்க்கவில்லை. நரைன் பாணியில் கண்ணை மூடிக்கொண்டு சுற்றுகிறார். அதனால் சில போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறுகிறார். நரைன் அவுட்டாகும் வரையில் இவர் பொறுப்பான இன்னிங்ஸ் ஆடுவது அவசியம். உத்தப்பா பேக் டு ஃபார்ம். நைட்ரைடர்ஸுக்கு நல்ல விஷயம். கேப்டன் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து அசத்துகிறார். ஆனால், நித்திஷ் ராணா, சுப்மான் கில் ஆகியோரால் கன்சிஸ்டென்ட்டாக விளையாட முடிவதில்லை. அவர்களை டி.கே தனக்கு முன்னால் விளையாட விடுவது அவசியம். 

இரண்டு அணிகளையும் சோதிக்கும் பௌலிங்

கொல்கத்தா பேட்டிங்கில் படுமோசமாக விளையாடித் தோற்றதில்லை. அவர்களின் தோல்விகளெல்லாம் மோசமான பௌலிங்கால் வந்ததுதான். மிட்செல் ஸ்டார்க்கின் வெற்றிடத்தை டாம் குர்ரன், ஜான்சன், சியர்லஸ் யாராலும் நிரப்ப முடியவில்லை. ஷிவம் மனி, பிரஷித் கிருஷ்ணா இருவரும் ஓகே ரகம்தான். அதனால் அடிக்கடி ரஸ்ஸல்தான் பார்ட்னர்ஷிப்களை உடைக்கவேண்டியிருக்கிறது. அவர் மீண்டும் காயமடையக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் டி.கே அவரை அதிகமாக பௌலிங்கில் பயன்படுத்துவதில்லை. ஆனால், நாளைய போட்டியில் அவரின் தேவை அதிகமாக இருக்கும். குல்தீப் சரியான நேரத்தில் நன்றாகப் பந்துவீசத் தொடங்கியிருப்பது அந்த அணிக்கு இன்னுமொரு சாதகம். 

11.5 கோடிக்கு எடுக்கப்பட்ட உனத்கட் 11 விக்கெட்டுகள்தாம் எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரன்களை வாரி வழங்குகிறார். அனுபவ வீரர் குல்கர்னி அட்ரெஸே இல்லை. ஈஷ் சோதி, கிருஷ்ணப்பா கௌதம், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் நன்றாகப் பந்துவீசிவருகின்றனர். ஆனால், ஆட்டம் நடக்கும் ஈடன் ஆடுகளம் பெரிதாகச் சுழலுக்கு ஒத்துழைக்காது. அதனால் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது பற்றி ரஹானே யோசிக்க வேண்டும். ஜோஃப்ரா ஆர்ச்சரை மட்டும் பெரிதாக நம்பியிருப்பதும் நல்லதல்ல. அவரது எகானமி அவ்வப்போது எகிறுகிறது. அதுவுமில்லாமல் அவர் அதிகமாக வைட் வீசுகிறார். அதைக் குறைத்துக்கொள்வதும் அவசியம்.

2018 சீசனில் இந்த இரு அணிகளும் மோதிய 2 போட்டிகளிலும் கொல்கத்தாவே வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா சேஸிங்கிலேயே வென்றதால், இந்தப் போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism