Published:Updated:

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

Published:Updated:
மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR


ஹைதராபாத், சென்னையைத் தொடர்ந்து மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2018 ஐ.பி.எல் சீசனில் இருந்து வெளியேறிய சில மணி நேரத்தில், ஆறாவது முறையாக பிளே ஆஃப் சென்றது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா. #SRHvKKR

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

ஹைதராபாத் அணியில் புவி, பிரத்வெய்ட் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என ஷிவம் மவிக்குப் பதிலாக பியூஸ் சாவ்லாவை டிக் செய்தது கொல்கத்தா. சன்ரைசர்ஸ் ஏற்கெனவே பிளே ஆஃப்க்குள் நுழைந்துவிட்டதால், பரிச்சார்த்த முயற்சியாக கோஸ்வாமியை ஓபனிங் இறக்கிவிட்டது. இந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடிய கோஸ்வாமி, முதன்முறையாக பேட் செய்யும் வாய்ப்பு பெற்றார். அதுவும் ஓப்பனிங். வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த கொல்கத்தாவுக்கு முதல் ஓவரை வீசவந்தவர் நித்திஷ் ராணா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பவர்பிளேவில் எப்படியும் டாப் ஆர்டரை ஆட்டம் காணச் செய்யும் முயற்சியில் இருந்த தினேஷ் கார்த்திக், ஐந்து ஓவர்களில் ராணா, பிரஷித், ரஸெல், சுனில் நரைன், பியூஸ் சாவ்லா என ஐந்து பெளலர்களை மாற்றிவிட்டார். ஆனாலும், விக்கெட் விழவில்லை. மாறாக, ரஸெல் ஓவரில் 20 ரன்கள் சேர்த்தது தவான் – கோஸ்வாமி ஜோடி. சுனில் நரைன் பந்தில் ஷிகர் தவன் சிக்ஸர் பறக்கவிட, பவர்பிளேயில் போதுமான ரன் சேர்த்துவிட்டது ஹைதராபாத். ஆறு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன். ரன்ரேட் 10.

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

குல்தீப் பந்தை இறங்கி வந்து லாங் ஆனில் சிக்ஸர் அடிக்க முயன்ற கோஸ்வாமி, ரஸெலிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், முதலுக்கு மோசமில்லை ரேஞ்சில், ஓபனிங் இறங்கியதற்கு 35 ரன்கள் எடுத்துவிட்டார். ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி, இன்ஃபார்மில் இருப்பதை அறிவித்தார். அதை நிரூபிக்கும்விதமாக குல்தீப் பந்தில் ஸ்லாக் ஸ்வீப் மூலம் டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர் பறக்கவிட்டார். இந்த சீசனில் மற்ற ஃபீல்டர்கள் கஷ்டமான கேட்ச்களை எல்லாம் பறந்துபறந்து பிடித்துக்கொண்டிருக்கையில் கையில் வந்து விழுந்த லட்டு கேட்ச்சை மிஸ் செய்தார் சுனில் நரைன். கண்டம் தப்பினார் ஷிகர் தவன். சியர்லஸ் வீசிய அதே ஓவரில் பேக் டு பேக் சிக்ஸர் பறக்கவிட்ட வில்லியம்சன், மீண்டும் ஒரு சிக்ஸருக்கு ஆசைப்பட்டு டீப் பாயின்ட் திசையில் இருந்த ரஸெலிடம் கேட்ச் கொடுத்தார். வில்லியம்சன் 36 ரன்களில் அவுட்.  

மறுமுனையில் ஷிகர் தவன் சத்தமின்றி அரைசதம் கடந்தார். 50 அடித்த கையோடு பிரஷித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். ரஸெல் பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்தாலும் மணீஷ் பாண்டேவின் டாட் பால் பிரச்னை தீரவேயில்லை. இவரை அணியில் தக்கவைப்பது குறித்து அடுத்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் சிந்திக்க வேண்டிய நேரம் இது என கமென்ட் அடித்தனர் ரசிகர்கள். ஐந்து ஓவர்களே இருக்கிறது. பிரத்வெய்ட்டை இறக்கிவிட்டால் சிக்ஸர்கள் பறக்கவிடுவார். இல்லையெனில் அவரை பிளேயிங் லெவனில் எடுத்ததே வேஸ்ட் என்ற சூழல் இருந்தபோது இறங்கியது யுசுஃப் பதான். வந்த வேகத்தில் அவுட்டாகி தன்னை அந்த இடத்தில் இறக்கியது தவறு என்பதை நிரூபித்தார் யுசுஃப்.

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

மிடில் ஓவர்களில் 10 ரன்ரேட்டை மெயின்டன் செய்த சன்ரைசர்ஸ், டெத் ஓவர்களில் மிடில் ஓவர் ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடியது. மணீஷ் பாண்டே அப்போதும் சிங்கிள் தட்டுவதிலேயே தீவிரமாக இருந்தார். பிரத்வெய்ட் வந்துட்டார். இனி சிக்ஸர் பறக்கும் என எதிர்பார்த்தபோது, அவர் ரஸெல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து  3 ரன்களில்  பெவிலியன் திரும்பினார்.

சிக்ஸர்கள் பறக்கவிட வேண்டிய கடைசி ஓவரில், வழக்கம்போல தெமேவென தூக்கிக் கொடுத்து அவுட்டானார் மணீஷ் (25). பவுண்டரி அடித்த திருப்தியுடன் ஷகிப் வெளியேற, அடுத்த பந்திலேயே ரஷித் கான் அவுட். கடைசி பந்தில் புவி ரன் அவுட். ஆக, கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட். கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. 12.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்திருந்த சன்ரைசர்ஸ் கடைசி 7  ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே எடுத்தது. 31 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சன்ரைசர்ஸின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.  

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

கொல்கத்தா 129 ரன்களை எடுத்துவிட்டால் நெட் ரன்ரேட்டில் ராஜஸ்தானை முந்திவிடலாம் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்ப ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆட முடிவு செய்திருந்தது கிறிஸ் லின் – சுனில் நரைன் ஜோடி. புவி வீசிய முதல் ஓவரில் லின் அட்டகாசமாக இரண்டு பவுண்டரிகள் அடிக்க, சந்தீப் சர்மா பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி, இறங்கி வந்து லாங் ஆனில் சிக்ஸர் என மிரட்டினார் சுனில் நரைன். சித்தார்த் கவுல் பந்தில் மிட் விக்கெட்டில் சிக்ஸர், நக்கிள் பாலில் பவுண்டரி விரட்ட, ஸ்கோர் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41.

வேகப்பந்து எடுபடாததை உணர்ந்து ஸ்பின்னர் ஷகிப் அல் ஹசனிடம் பந்தைக் கொடுத்தார் வில்லியம்சன். ஸ்கொயர் லெக்கில் 4, லாங் ஆனில் சிக்ஸர் பறக்கவிட்ட சுனில் நரைன் அதே சூட்டோடு மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்றபோது மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்தார். நரைன் 10 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட். யார் வந்தாலும் போனாலும் ஸ்ட்ரைக்கில் இருப்பவர்கள், பவர்பிளேவில் ரன்ரேட்டை பத்துக்கும் குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள். பவர்பிளே முடிவில் கே.கே.ஆர் ஸ்கோர் 66/1.

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

ரஷித் கான் ஓவரில் ஹைதராபாத்துக்கு ஒரு திருப்புமுனை கிடைத்திருக்கும். அதை மிஸ் செய்தனர். உத்தப்பா கொடுத்த கேட்ச்சை ரஷித் கோட்டைவிட்டார். சந்தீப் சர்மா பந்தில் லாங் ஆனில் சிக்ஸர் பறக்கவிட்டு அரைசதம் கடந்தார் லின். அணியின் ஸ்கோரும் சதம் தொட்டது. தன் பங்குக்கு ஷகிப் அல் ஹசன் பந்தில் லாங் ஆனில் சிக்ஸர், கட் ஷாட் மூலம் பவுண்டரி என உத்தப்பா ஆக்சிலேட்டரை மிதித்தார். அதற்குள் சித்தார்த் கவுல் பந்தில் மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து லின் வெளியேறினார்

33 பந்தில் 51 ரன் தேவை. கொல்கத்தா வெற்றியை நெருங்க, நெருங்க எல்லாமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது. புவி லைன் அண்ட் லென்த்தை மிஸ் செய்தார். அதை அலட்டாமல் ஃபைன் லெக் பக்கம் சிக்ஸர் அனுப்பினார் டிகே. தினேஷ் கார்த்திக்கும், உத்தப்பாவும் மிட் ஆனில் தட்டிவிட்டு 2 ரன்கள் ஓடினர். ரஷித் ஓவரில் உத்தப்பா 4,6 என வெளுத்துக்கட்டினார். ஆனால், பிரத்வெய்ட் வீசிய ஒரு ஷார்ட் பாலில் விக்கெட்டை இழந்தார் உத்தப்பா (45). வேகமாக மேட்ச்சை முடிக்க நினைத்த ரஸெல், வேகமாக பெவிலியன் திரும்பினார். டிகே- ராணா இருவரும் மேட்ச்சை கடைசி ஓவர் வரை கொண்டுபோக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதுகூட பரவாயில்லை. வெற்றிக்கு ஒரு ரன் தேவை எனும்போது ராணா அவுட்டானார். கொட்டாவி வந்தது. `எப்படா முடிப்பிங்க’ என புலம்பாத குறைதான். ஒருவழியாக, டிகே ஆட்டத்தை முடித்து வைத்தார். கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.