Published:Updated:

ஒலிம்பிக் 2021: உகாண்டாவிலிருந்து வந்த வீரருக்கு கோவிட் உறுதி; புதிய சிக்கலில் ஒலிம்பிக்!

கடந்த சில நாள்களாக ஜப்பானிலும் உகாண்டாவிலும் கொரோனா தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை சற்று உயர்ந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, உகாண்டாவில் பாதிப்பு அதிகரிப்பதால், தளர்வுகள் திரும்பப்பெறப்பட்டு ஊரடங்கு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜப்பானில் சென்ற ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த வருடத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு, வரும் ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் வந்தடைந்த உகாண்டா நாடு அணியினருள் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக ஜப்பானிலும் உகாண்டாவிலும் கொரோனா தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை சற்று உயர்ந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, உகாண்டாவில் பாதிப்பு அதிகரிப்பதால், தளர்வுகள் திரும்பப் பெறப்பட்டு ஊரடங்கு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Tokyo Olympics
Tokyo Olympics
`ஒலிம்பிக் போட்டிகளால் மற்றொரு வீரியமான வேரியன்ட் உருவாகலாம்!' - புதிய அச்சமும் நிபுணர் விளக்கமும்

உகாண்டாவின் ஒன்பது பேர் கொண்ட அணியைச் சேர்ந்தவர்தான் இப்போது தொற்றுக்குள்ளாகி இருக்கும் வீரர். அவர்கள் அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழு குத்துச்சண்டை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கியது. உகாண்டாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு இவர்களுக்குச் செய்யப்பட்ட கோவிட் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட்தான் வந்தது. இருப்பினும், அவர்களில் ஒருவர் சனிக்கிழமையன்று டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தில் சோதிக்கப்பட்டபோது பாசிட்டிவ் ரிசல்ட் வந்துவிட்டது. உடனே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மீதமுள்ள அணியினர் மேற்கு ஜப்பானில் உள்ள ஒசாகாவுக்கு பேருந்தில் புறப்பட்டனர். அங்கு அவர்கள் பயிற்சி பெற உள்ளனர். போட்டிக்கு முன்னதாகப் பயிற்சிக்காக வந்த வெளிநாட்டு விளையாட்டு வீரர்களின் இரண்டாவது குழுதான் உகாண்டா. ஆஸ்திரேலிய மகளிர் மென்பந்து அணி ஜூன் 1 அன்று வந்தது.

வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளைக் காண தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு ரசிகர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றே ஜப்பானிய அதிகாரிகள் விரும்புகின்றனர்.

டோக்கியோவில் 376 கோவிட் தொற்றுகளும் ஒரு மரணமும் ஜூன் 20 அன்று பதிவாகியுள்ளது. இது ஒரு வாரத்துக்கு முன் இருந்ததைவிட தொற்றுகளின் எண்ணிக்கையில் 72 அதிகம்.

Olympics
Olympics
AP
விரைவில் இந்தியாவில் ஒலிம்பிக்... அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்தான் டார்கெட்டா?

மெதுவாக நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதில் பொதுமக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றே உள்ளூர் ஊடகங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பலர் ஒலிம்பிக் போட்டி நடைபெறாது என்றே நினைக்கிறார்கள்.

மே மாதம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 70 சதவிகித ஜப்பானியர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டாம் என்றே தெரிவித்தனர். ஆனால், ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வதோ, தள்ளிவைப்பதோ ஜப்பானின் கைகளில் இல்லை. இறுதி முடிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிதான் எடுக்க முடியும் என்றே ஒலிம்பிக் ஒப்பந்தம் சொல்கிறது. ஏற்கெனவே, ஓராண்டு தள்ளிப்போடப்பட்டுவிட்டதால், இப்போது எப்பாடுபட்டாவது போட்டிகளை நடத்திவிட நினைக்கிறது ஒலிம்பிக் கமிட்டி. அதனால்தான் பார்வையாளர்களே இல்லையென்றாலும் பரவாயில்லை என்கிற முடிவுக்கு அது வந்துவிட்டது.

இது ஜப்பான் நிலவரம்!

ஜப்பானின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 16% மட்டுமே இதுவரை கோவிட்- 19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.

- எஸ்.சங்கீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு