Published:Updated:

``SBI வங்கியே... அதானிக்கு கடன் தராதே!" - கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைந்த எதிர்ப்புக்குரல்!

Protesters hold up banners
Protesters hold up banners ( AP Photo/Rick Rycroft )

லைவில் இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.

Protesters hold up banners as they interrupt the one day international cricket match between India and Australia at the Sydney Cricket Ground in Sydney, Australia
Protesters hold up banners as they interrupt the one day international cricket match between India and Australia at the Sydney Cricket Ground in Sydney, Australia
AP Photo/Rick Rycroft

இதில் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் - ஆரோன் பின்ச் ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில் 7-வது ஓவரின்போது மைதானத்துக்குள் திடீரென பதாகைகளுடன் நுழைந்த இரு ஆஸ்திரேலியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் ஏந்தி வந்த பதாகையில் `SBI வங்கியே அதானிக்கு கடன் தராதே' என்ற வாசகம் இருந்தது. இதனால் ஒட்டுமொத்த மைதானமும் சலசப்புக்குள்ளானது. இதையடுத்து காவலர்களால் அவர்கள் மைதானத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். லைவில் இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

India's Navdeep Saini, left, gestures to Australia's Aaron Finch as Steve Smith watches following the one day international cricket match between India and Australia at the Sydney Cricket Ground in Sydney, Australia
India's Navdeep Saini, left, gestures to Australia's Aaron Finch as Steve Smith watches following the one day international cricket match between India and Australia at the Sydney Cricket Ground in Sydney, Australia
AP Photo/Rick Rycroft

அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கவிருக்கிறது. இதற்கு ஆஸ்திரேலிய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அதானி குழுமத்திற்கு கடனாக வழங்கவுள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து ஏற்கனெவே ஆஸ்திரேலியாவில் பல்வேறு போராட்டங்கள் நடந்துவரும் சூழலில், இருவர் கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைந்து தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்கின்றனர். இதையடுத்து இந்த அதானி - SBI விவகாரம் மீண்டும் பெரியளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள கீழே உள்ள கட்டுரையைப் படிக்கவும்.

SBI-க்கு ஸ்கெட்ச் போடும் அதானி குழுமம், வலுக்கும் எதிர்ப்பு... ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது?
அடுத்த கட்டுரைக்கு