Published:Updated:

`அம்மாவாக இருப்பதில் கவனம் செலுத்தப்போகிறேன்!' - ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ்

செரினா வில்லியம்ஸ்

``சில நேரங்களில் வாழ்க்கையில் நாம் வேறு திசை நோக்கி நகர்வதை முடிவு செய்ய வேண்டும். ஒன்றை நீங்கள் விரும்பும்போது அந்த நகர்வு உங்களுக்குக் கடினமாக இருக்கும். டென்னிஸ் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.’’

23 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான அமெரிக்காவின் சிறந்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், தான் இறங்கிய பல களங்களில் வெற்றிவாகை சூடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

செரினா
செரினா

இந்நிலையில், செரினா வில்லியம்ஸ் தான் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை ஆகஸ்ட் 9-ம் அறிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செரினாவின் இந்த அறிவிப்பை `வோக் (Vogue)' செப்டம்பர் இதழ் வெளியிட்டுள்ளது. 40 வயதாகும் டென்னிஸ் நட்சத்திரமா செரினா விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதையும், தன் குடும்பத்தின் மீது கவனம் செலுத்த உள்ளதையும் அந்த இதழில் பகிர்ந்துள்ளார்.

``சில நேரங்களில் வாழ்க்கையில் நாம் வேறு திசை நோக்கி நகர்வதை முடிவு செய்ய வேண்டும். ஒன்றை நீங்கள் விரும்பும் போது அந்த நகர்வு உங்களுக்குக் கடினமாக இருக்கும். டென்னிஸ் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.

அம்மா செரினா வில்லியம்ஸ்!
அம்மா செரினா வில்லியம்ஸ்!

ஓர் அம்மாவாக இருப்பதில் கவனம் செலுத்தப்போகிறேன். என்னுடைய ஆன்மிக இலக்குகள் இறுதியாக, வித்தியாசமான தற்போதுள்ள செரினாவை கண்டுபிடித்துள்ளன’ என செரினா தெரிவித்துள்ளார்.

செரினாவின் இந்தத் திடீர் முடிவு அவருடைய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.