Election bannerElection banner
Published:Updated:

கபடி விளையாடும் இங்கிலாந்து நட்சத்திர கால்பந்து வீரர்கள் - வைரல் வீடியோ

கபடி விளையாடும் இங்கிலாந்து நட்சத்திர கால்பந்து வீரர்கள் - வைரல் வீடியோ
கபடி விளையாடும் இங்கிலாந்து நட்சத்திர கால்பந்து வீரர்கள் - வைரல் வீடியோ

கபடி விளையாடும் இங்கிலாந்து நட்சத்திர கால்பந்து வீரர்கள் - வைரல் வீடியோ

கிரிக்கெட் போட்டித் தொடங்குவதற்குமுன் ஆட்டத்துக்குத் தயாராகும் வீரர்கள் மனச்சோர்வை போக்கக் கால்பந்து விளையாடுவது வழக்கம். இதேபோல், உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தயாராகும், இங்கிலாந்து வீரர்கள் கபடியை விளையாடி மகிழ்ந்துள்ளனர். 

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த `ஃபிபா உலகக் கோப்பை' இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 14-ம் தேதி தொடங்கும் கால்பந்து போட்டி ஜூலை 15-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜீரியா, செர்பியா, போலந்து உள்ளிட்ட 32 நாடுகள் பங்கேற்கின்றன.

இப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் ரஷ்யாவில் முகாமிட்டு போட்டிகளுக்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில், இங்கிலாந்து அணி வீரர்களும் உலகக் கோப்பை போட்டிக்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், பயிற்சியின் இடையில் தங்களின் மனச்சோர்வைப் போக்கும் விதமாக, தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்றான கபடியை விளையாடி மகிழ்ந்துள்ளனர். 

இவர்கள் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இவற்றில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான ஹரி கனே, டன்னி வெல்பெக், கேரி சகில், ஜெஸ்ஸி லின்கார்டு உள்ளிட்டோர் ஒன்றாகக் கைகோத்து கபடி விளையாடும் காட்சி அனைவரையும் ரசிக்க வைக்கிறது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு