Published:Updated:

`ஆசிய அணியில் 5 இந்திய வீரர்கள்; பாக் வீரர்கள் இல்லை!’ - ஆசிய XI vs உலக XI டி20 அப்டேட்ஸ்

இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அதில் கலந்துகொள்வதில் சிக்கல் இருக்கும்!

கோலி தோனி
கோலி தோனி ( AP )

வங்கதேசத்தில் மார்ச் மாதம் 18 மற்றும் 21-ம் தேதிகளில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. கொல்கத்தாவில் இந்தியா வங்கதேச அணிகள் மோதிய பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின்போது வங்கதேச கிரிக்கெட் போர்டு சார்பில் ஆசிய லெவன் அணியில் விளயாட தோனி, பும்ரா, கோலி உள்ளிட்ட வீரர்களை அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

பிங்க் நிறத்தில் ஜொலிக்கும்  ஈடன் கார்டன் மைதானம்
பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் ஈடன் கார்டன் மைதானம்
Twitter

எனினும், இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவார்களா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறப்போவதில்லை என்ற தகவல் வெளியானது. தற்போது 5 இந்திய வீரர்கள் ஆசிய லெவன் அணிக்காக விளையாடப் போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் அப்போது பி.எஸ்.எல் தொடர் நடக்கும் காரணத்தால் தான் பாகிஸ்தான் அணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை என பாகிஸ்தான் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது.

எனினும், வீரர்களின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்தப் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அதில் கலந்துகொள்வதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தோனி
தோனி

தோனி அணிக்குத் திரும்பாதபட்சத்தில் அவர் கலந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. வங்கதேச நாட்டின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக இந்த டி20 தொடர் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.