Published:Updated:

IND vs ENG:"நாங்கள் சிறப்பாக விளையாடத் தவறிவிட்டோம் "- மனம் திறந்த ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்
News
ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தோல்வி குறித்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார்.

Published:Updated:

IND vs ENG:"நாங்கள் சிறப்பாக விளையாடத் தவறிவிட்டோம் "- மனம் திறந்த ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தோல்வி குறித்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார்.

ராகுல் டிராவிட்
News
ராகுல் டிராவிட்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறின.

இதனிடையே நேற்று நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட இந்திய அணியின் தோல்வி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது தோல்வி குறித்து கேள்வி எழுப்பியப் போது, “இது தோல்வி கிடையாது. ஆனால் ஏமாற்றம்தான். உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்பு  வரை இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் இன்று இது எங்களுக்கான நாளாக இல்லை.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

இங்கிலாந்து அணியின் கேப்டன் திறமையான வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரும் அலெக்ஸ் ஹேல்ஸும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியதால் அவர்களால் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. தற்போது இங்கிலாந்து சிறப்பான அணியாக இருக்கிறது. நாங்கள் சிறப்பாக விளையாடத் தவறிவிட்டோம். ஆட்டத்தையும் இழந்து விட்டோம்" என்று கூறியிருக்கிறார்.

பின் , Big Bash போன்ற வெளிநாட்டு டி20 லீக்களில் இந்திய வீரர்களை இடம் பெற அனுமதிப்பது பற்றிக் கேட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், ``நம்முடைய  வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளுக்குச் சென்றால், அது ரஞ்சி டிராபி போன்ற உள்நாட்டு கிரிக்கெட்டை பாதிக்கும். நமது டெஸ்ட் கிரிக்கெட்டும்  பாதிக்கப்படும். நாங்கள் அந்தப் பாதையில் செல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.