Published:Updated:

டிஃபன்ஸ் சரியில்லை, பெனால்டி வாய்ப்புகள் இல்லை... அரையிறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்த இந்தியா!

இந்திய அணி ( Odisha Sports )

இந்தியாவிற்கு ஒரே ஒரு பெனால்டி கார்னர் மட்டுமே கிடைத்தது. அந்த ஒன்றையும் இந்திய அணியால் கோலாக மாற்ற முடியவில்லை.

டிஃபன்ஸ் சரியில்லை, பெனால்டி வாய்ப்புகள் இல்லை... அரையிறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்த இந்தியா!

இந்தியாவிற்கு ஒரே ஒரு பெனால்டி கார்னர் மட்டுமே கிடைத்தது. அந்த ஒன்றையும் இந்திய அணியால் கோலாக மாற்ற முடியவில்லை.

Published:Updated:
இந்திய அணி ( Odisha Sports )

ஆண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவின் புவனேஷ்வரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொடரின் அரையிறுதியில் ஜெர்மனியும் இந்தியாவும் நேற்று மோதியிருந்தன. இந்தப் போட்டியில் ஜெர்மனி 4-2 என இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. தோல்வியுற்ற இந்தியா, மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஃபிரான்ஸுக்கு எதிராக மோதவிருக்கிறது.

காலிறுதியில் வலுவான பெல்ஜியம் அணிக்கு எதிராக இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடியிருந்தது. 1-0 என அந்தப் போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. 21வது நிமிடத்தில் சர்தானந்த் திவாரி கோல் அடித்திருந்தார். அதன்பிறகு, 39 நிமிடங்களுக்கு இந்த ஒரு கோலை வைத்துக் கொண்டு இந்தியா பெல்ஜியமின் அட்டாக்கை டிஃபண்ட் செய்து வென்றிருந்தது. டிஃபண்டர்கள், கோல்கீப்பர் பவன் எல்லாருமே மிகச்சிறப்பாக ஆடியிருந்தனர். இந்திய அணியின் பலவீனமாக அதன் டிஃபன்ஸிவ் டெக்னிக்கே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், காலிறுதியில் அப்படியில்லை. நாங்கள் டிஃபன்ஸிலும் வலுவான பெர்ஃபாமென்ஸை கொடுப்போம் என நிரூபித்திந்தார்கள். ஆனால், ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியாவின் டிஃபன்ஸ் மீண்டும் பயங்கரமாக சொதப்பியிருந்தது.

ஜெர்மனி
ஜெர்மனி
Odisha Sports
ஆட்டத்தின் முதல் பாதியிலேயே ஜெர்மனி அணி ஒட்டுமொத்தமாக 4 கோல்களை அடித்துவிட்டது. குறிப்பாக, இரண்டாவது கால்பகுதியில் மட்டும் 3 கோல்கள்.

பெனால்டி ஸ்ட்ரோக், பெனால்டி கார்னர், ஃபீல்ட் கோல் என அத்தனை விதமாகவும் ஜெர்மனி கோல் அடித்தது. கடந்த போட்டியின் ஹீரோக்களான கீப்பர்கள் பிரசாந்த் சவுஹான், பவன், டிஃபண்டர் மன்ஜித் அனைவருமே கடுமையாக சொதப்பியிருந்தனர்.

முழுக்க முழுக்க 60 நிமிடங்களும் ஜெர்மனியே ஆதிக்கம் செலுத்தியிருந்து. ஆட்டம் தொடங்கிய முதல் 5 நிமிடத்திற்குள்ளேயே ஒரு ஃபீல்ட் கோல் வாய்ப்பும், ஒரு பெனால்டி வாய்ப்பும் அமைந்தது. ஆனால், இரண்டிலும் ஜெர்மனி அணி கோட்டை விட்டிருந்தது. ஃபீல்ட் கோலின் போது இந்திய கோல்கீப்பர் பிரசாந்த் கோல் போஸ்ட்டை விட்டு தள்ளிதான் இருந்தார். ஓப்பன் போஸ்ட்டில் கோல் அடிக்க ஜெர்மனி தடுமாறியிருந்தது. இந்த முதல் கால்பகுதியின் முடிவில் ஜெர்மனிக்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை ஜெர்மனியின் எரிக் எந்த சொதப்பலும் இல்லாமல் கோலாக மாற்றினார். ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது கால்பகுதியில்தான் இரண்டு அணிகளும் இன்னும் கடுமையாக கோலுக்கு முயன்றன. இந்தக் கால்பகுதி நேரத்தில் மட்டும் மொத்தமாக 4 கோல்கள் அடிக்கப்பட்டிருந்தன. ஜெர்மனி 3 கோல்களை இந்தியா ஒரு கோலையும் அடித்திருந்தன. ஜெர்மனி சார்பில் ஃப்ளாட்டன், முல்லர், கட்டர் என மூன்று பேர் கோல் அடித்திருந்தனர்.

இந்த இரண்டாம் கால்பகுதி நேரம் முடிகிற தறுவாயில் இந்திய வீரர் ராகுல் குமார் கொடுத்த அடித்த ஒரு க்ராஸை உத்தம் சிங் சிறப்பாக ஃபினிஷ் செய்து கோலாக்கினார்.
உத்தம் சிங்
உத்தம் சிங்
Odisha sports

ஜெர்மனி 4-1 என முன்னிலையில் இருந்ததோடு முதல் பாதி முடிந்தது. முதல் பாதியில் ஆடியதை விட இரண்டாம் பாதியில் இந்தியா கொஞ்சம் வேகமாக ஆடினாலும் கோல் மட்டும் கிடைக்கவேயில்லை. முதல் பாதியில் இந்தியா 5 முறை மட்டுமே Circle Penetration செய்திருந்தது. ஜெர்மனி 16 முறை முறை செய்திருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் இந்தியா 10 முறை Circle Penetration செய்திருந்தது. ஜெர்மனி 7 முறை மட்டுமே செய்திருந்தது. இரண்டாம் பாதியில் இந்தியா நன்றாக அட்டாக் செய்திருந்தாலும் எதுவுமே சரியாக ஃபினிஷாகி கோலாகவில்லை. ஆட்டம் முடிகிற தறுவாயில் கடைசி நிமிடத்திலேயே பாபி ஒரு கோலை அடித்திருந்தார். ஆனால், இது கோல் வித்தியாசத்தை குறைக்க உதவியதே தவிர போட்டியின் முடிவை மாற்ற உதவவில்லை.

பெனால்டி வாய்ப்புகள் மூலம் இந்தியா நிறைய கோல்களை அடித்துக் கொண்டிருந்தது. பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றும் Conversion rate-ம் இந்திய அணிக்கு அதிகமாக இருந்தது. காலிறுதி போட்டியிலுமே பெல்ஜியம் 3 பெனால்டி கார்னர்களை பெற்று ஒன்றை கூட கோலாக்கியிருக்காது. ஆனால், இந்தியா ஒரே ஒரு பெனால்டி கார்னரை பெற்று அதை கோலாகவும் மாற்றியிருந்தது. இந்தப் போட்டியில் அதுதான் நடக்கவில்லை. ஜெர்மனிக்கு 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. அதில் மூன்றை ஜெர்மனி கோலாக மாற்றியிருந்தது. இந்தியாவிற்கு ஒரே ஒரு பெனால்டி கார்னர் மட்டுமே கிடைத்தது. ஆனால், அந்த ஒன்றையும் இந்திய அணியால் கோலாக மாற்ற முடியவில்லை. இரண்டு ஃபீல்ட் கோல்களோடு கூடுதலாக பெனால்டி வாய்ப்புகளும் கிடைத்திருக்கும்பட்சத்தில் இந்தியா இந்தப் போட்டியை இன்னமும் நெருக்கமாகக் கொண்டு சென்றிருக்கும்.

India - Germany
India - Germany
Hockey India
இந்த வெற்றியின் மூலம் 6 முறை உலகக்கோப்பையை வென்ற ஜெர்மனி அணி, மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஃபிரான்ஸுடன் மோதவிருக்கிறது.